வாங்க இங்கிலீஷ் பேசலாம் 91
கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறான்.


கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அக்கிளியின் வேண்டுகோளுக்கு இணங்க அதை கூண்டுடன் வெளியே எடுத்து வருகிறான்.
கணேஷ் கிளிக்கூண்டுடன் கடை வாசலைக் கடந்து தாழ்வாரத்தை அடைகிறான். வெளியே பேருந்துகளின் இரைச்சல், மனிதர்களின் கூச்சல்கள், சினிமா பாடல்கள் கேட்கின்றன.
Captain Flint: ஐயகோ... கடலலைகளின் ஆரவாரம். என்னை மூழ்கடிக்கப் போகிறாயா? யாரோ கீழே ஆடிப் பாடுகிறார்கள். அங்கே என்னை வெட்டி பலி
கொடுக்கப் போகிறீர்களா?
கணேஷ்: ச்சூ... ஒண்ணுமே இல்ல. Don't get
Captain Flint: என்ன?
கணேஷ்: என்னவோ ஒரு வார்த்தை உண்டே?
Captain Flint: Paranoid
கணேஷ்: ஆமா... ஆமா... Paranoid.
Captain Flint: I am scared. Not paranoid.
அப்போது மழைச்சாரல் அடிக்கிறது.
Captain Flint: கப்பலின் கீழ்த்தளத்துக்கு வந்து விட்டோமென நினைக்கிறேன். கொள்ளைத் தலைவன் Flintஇன் கண்ணில் படாமல் என்னை துறைமுகத்துக்கு
கொண்டு போய் விடு. ப்ளீஸ்...
கணேஷ்: சரி... சரி... நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. Paranoid என்றால் பைத்தியம் தானே?
Captain Flint: இல்லை. மிகை பயம். அதனால் ஏற்படும் மனப்பிராந்தி. தேவையில்லாமல் அடுத்தவர்களை சந்தேகப்படுபவர்களை
paranoid என்பர்கள்.
கணேஷ்: இந்த paranoid எனும் சொல்லே கேட்க கடுமையாக, விஞ்ஞானப் பூர்வமாய் இருக்கிறது.
Captain Flin: ஆனால் உண்மையில் இது ஒரு டெக்னிக்கலான சொல் அல்ல. பூர்வீகத்தில் இது paranoos எனும் கிரேக்க சொல்லில் இருந்து வருகிறது. Para
என்றால் அப்பால் என பொருள். Noos என்றால் மனம். அதாவது இயல்பு மனதுக்கு அப்பால். ஓர் இயல்பற்ற மனநிலையில் இருப்பது என paranoia எனும்
சொல்லை விளக்கலாம். இதில் இருந்து தான் paranoid வருகிறது. ஆரம்பத்தில் உளவியல் மனப்பிறழ்வைக் குறித்தாலும் இப்போது பரவலாய் அதிக பதற்றம்
கொண்டு கத்துபவர்களை குறிக்கும் சொல்லாக உள்ளது. Paraplegia கேள்விப்பட்டிருக்கிறாயா?
கணேஷ்: இல்லையே...
Captain Flint: இடுப்புக்கு கீழ் வரும் பக்கவாதம். இதுவும் para எனும் சொல்லில் இருந்து தான் தோன்றுகிறது. Beside எனும் பொருளில் para வருகிறது. Beside
என்றால் ஒரு பக்கமாய். அதே plassein என்றால் தாக்கப்படுவது. இந்த plassein பின்னர் plegia ஆகியது. அதே போல paralegal என்றால் உதவி வழக்கறிஞர்.
அதாவது நேரடியாய் வழக்காடும் தகுதியில்லாத வக்கீல். இங்கே para பக்கவாட்டில் நின்று செயல்படும் எனும் பொருளில் வருகிறது. அதே போல மரபான உளவியலில் அனுமதிக்கப்படாத ஆய்வுகளை (ஹிப்னாஸிஸ் போல) மேற்கொள்ளும் உளவியல் parapsychology. இதுவும் அதிகாரபூர்வமற்றதாய்,
விளிம்புநிலையில் உள்ள உளவியல் என்பதால் ல்ஹழ்ஹ எனும் சொல் வருகிறது.
கையில் ஜூஸ் கப்புடன் புரொபஸர் அப்போது எதிரே வருகிறார்.
புரொபஸர்: கணேஷ், கிளியை தூக்கிக்கிட்டு எங்கே போறே?
Captain Flint: Don't bother. He is taking a hike.
கணேஷ்: Hike என்றால் மலையேற்றம் தானே?
Captain Flint: அது mountain hike. Hike என்றால் நீண்ட நடை பயணம்.
கணேஷ்: நாம நடைபயணமா போறோம்?
Captain Flint: Taking a hike என்றால் சும்மா கொஞ்ச தூரம் வெளியே நடந்து போறது. காத்தாட நடப்பது.
புரொபஸர்: மிஸ்டர் Long John Silver கிட்ட அனுமதி வாங்காமல் அவர் கிளியை கடத்தி வருவது குற்றமுன்னு தெரியாதா?
கணேஷ்: நான் அவர் கிட்ட சொல்லி விட்டு தான் கிளியை வெளியே எடுத்து வரேன் சார்.
புரொபஸர்: பொய் சொன்னா உன் மூஞ்சியிலேயே தெரியும். You are now taking a walk on the wild side.
கணேஷ்: ஆங்!
புரொபஸர்: தேவையில்லாம ரிஸ்க் எடுக்கிறேன்னு அர்த்தம். Wild side என்றால் காட்டுப் பக்கம். சின்ன பசங்க காட்டுப்பக்கம் சுற்றினால் புலி அடித்துக் கொண்டு
போகும். ஆமா.
கணேஷ்: ஐயோ...!
Captain Flint புரொபஸரை நோக்கி கீச்சிடுகிறது: You old fag, why dont you take a long walk on a short pier
புரொபஸர் ("ஜூஸ் உறிஞ்சியவாறே): இது மோசமான கிளி. என்னை வையுது.
கணேஷ்: என்ன சார் சொல்லுது?
புரொபஸர்: Pier என கேள்விப்பட்டிருக்கிறாயா?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...