நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 76

புரொபஸரும் கணேஷும் ஒரு மாலைப் பொழுதில் ஐயப்பன் கோயிலுக்கு அருகிலுள்ள சாமி படங்கள் விற்கும் ஒரு கடைக்கு சென்று பார்க்கிறார்கள்.

News image
Updated On :1 மார்ச் 2017, 4:55 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸரும் கணேஷும் ஒரு மாலைப் பொழுதில் ஐயப்பன் கோயிலுக்கு அருகிலுள்ள சாமி படங்கள் விற்கும் ஒரு கடைக்கு சென்று பார்க்கிறார்கள். அப்போது கடையின் உரிமையாளரிடம் அரட்டை அடிக்கிறார்கள். எதேச்சையாய் ஜெப்ரி சாஸரின் Troilus and Criseyde என்ற நூலில் இருந்து ஒரு வசனத்தை கடையின் உரிமையாளர் மேற்கோள் காட்டுகிறார்: I am my own woman, well at ease  thank God for that  concerning my estate, I am free to graze wherever I may please. புரொபஸர் அந்நூலில் checkmate எனும் சொல் வரும் மற்றொரு வரியை மேற்கோள் காட்டுகிறார். அதை ஒட்டி மேலும் பேசுகிறார்கள்.
கடையின் உரிமையாளர்: புரொபஸர், நீங்க செக் மேட்டுக்கு சொன்ன விளக்கம் ஓரளவு தான் சரி.
புரொபஸர்: யெஸ், ஒரு செஸ் ஆட்டத்தில் ராஜாவை நகர முடியாதபடி மாட்ட வைத்து தாக்குவது தான் செக் மேட். இவ்வளவு டெக்னிக்கலாக அன்றி எளிமையாய் விளக்கலாம் என நினைத்தேன். அதனால் தான் அப்படி சொன்னேன்.
கடையின் உரிமையாளர்: இல்லை. உங்களிடம் தவறு காண்பதல்ல என நோக்கம். Checkmate என்ற சொல்லின் மூலச்சொல் பற்றி மிஸ்டர் கணேஷுக்கு சொல்ல பிரியப்பட்டேன். அதனால் தான் அப்படி சொன்னேன்.
கணேஷ்: அதென்ன சார் கதை?
கடையின் உரிமையாளர்: checkmate ஒரு பாரசீக சொல்லில் இருந்து வருகிறது. Sah mat.
கணேஷ்: சாஹ் மட் என சொல்வது கேட்க செக்மேட் போலவே உள்ளது.
கடையின் உரிமையாளர்: ஆமாம். அதன் அர்த்தம் இன்னும் சுவாரஸ்யமானது.
கணேஷ்: என்ன சார்?
கடையின் உரிமையாளர்: ரொம்ப சிம்பிள். ராஜாவைக் கொல்வது.
கணேஷ்: கேட்க திக்குன்னு இருக்கு.
கடையின் உரிமையாளர்: யெஸ். சதுரங்கம் என்பது பழங்காலத்தில் போர் வியூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. போரில் மன்னனைக் கொல்வது தான் வெற்றியை உறுதி செய்யும் முத்திரைச் செயல். அதனால் தான் சதுரங்கத்திலும் செக்மேட் என்று சொல்லி ராஜாவைக் கொல்கிறோம். இன்று checkmate என்பது தேக்கநிலை, தீர்வற்ற நிலை என்கிற சாதுவான பொருளிலும் பயன்படுகிறது. உதாரணமாய், when the opposition MPs stalled the parliament proceedings they achieved a checkmate in the governments efforts to pass the bill.. அதாவது, எதிர்க்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்தை முடக்கி, மசோதா நிறைவேற்றுவதற்கான ஆளுங்கட்சியின் முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தினர். அதே போல் எதிரியின் வியூகத்தை திட்டமிட்டு முறியடிப்பதற்கும் இச்சொல்லைப் பயன்படுத்தலாம். Virat Kohli checkmated the  opposition captains strategy to strangle India with spin as he repeatedly went after the bowling. இதற்கு இணையான மற்றொரு சொல் stalemate.
கணேஷ்: Sir you are very clever.
கடையின் உரிமையாளர்: Thank you. But I would not call myself clever. நான் knowledgeable என்று என்னை அழைக்கத் தான் விரும்புவேன்.
கணேஷ்: ஏன் சார்?
கடையின் உரிமையாளர்: Clever என்றால் புத்திசாலி. அது இயல்பான அறிவுத்திறன், சமயோஜித புத்தியைக் குறிக்கும் சொல். ஆனால் நான் வாசிப்பு மூலமாய் என் அறிவை வளர்த்துக் கொண்டவன். அது படிப்பறிவு. Knowledge. படிப்பறிவு மிக்கவரை knowledgeable எனலாம். இயல்பான கூர்மதி பெற்றவர் clever.
கணேஷ்: இன்னொரு விசயம்...
கடையின் உரிமையாளர்: சொல்லுங்க.
கணேஷ்: எனக்கு நீங்க மேற்கோள் காட்டின வரியில் well at ease புரியவில்லை. அது என்ன?
கடையின் உரிமையாளர்: கவலையின்றி, பதற்றமின்றி இருப்பது என பொருள். சாஸரின் காலத்தில் பொருளாதாரச் சார்பு இன்றி வசதியாய் இருப்பது என அர்த்தம். இந்த வசனத்தில் கிறிஸைடா எனும் நாயகி எனக்குத் தேவையான பண வசதி, சொத்து இருக்கிறது, நான் பணத்துக்காய் யாரையும் கல்யாணம் பண்ணத் தேவையில்லை என்கிறாள். 
கணேஷ்: அதனால் தான் தன்னிடம் estate உள்ளது என்கிறாளா?
கடையின் உரிமையாளர்: இல்லை. 14ஆம் நூற்றாண்டில் எஸ்டேட் என்றால் வாழ்க்கை நிலை என்றால் பொருள் இருந்தது. Concerning my estate என்றால் அக்காலத்தில் என் வாழ்வு நிலை என்னவென்றால் என பொருள். இன்று ங்ள்ற்ஹற்ங் என்பது தோட்டம், துரவு என்ற அர்த்தம் பெற்றிருக்கிறது.
(இனியும் பேசுவோம்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.