நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 77

புரொபஸர் மற்றும் கணேஷ் கடவுள் படங்கள் விற்கும் ஒரு கடைக்கு போகிறார்கள். அங்கு கடையின் உரிமையாளருடன் அரட்டை அடிக்கிறார்கள்.

News image
Updated On :7 மார்ச் 2017, 5:22 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர் மற்றும் கணேஷ் கடவுள் படங்கள் விற்கும் ஒரு கடைக்கு போகிறார்கள். அங்கு கடையின் உரிமையாளருடன் அரட்டை அடிக்கிறார்கள். Estate என்ற சொல்லின் பொருள் சமகாலத்தில் மருவி வந்திருப்பதைக் கடை உரிமையாளர் விளக்குகிறார்.

புரொபஸர்: நீங்க சொன்னதோட இன்னொரு பொருளிலும் estate என்ற வார்த்தை பயன்படுத்தப்படுது. ஒருவர் இறந்த பின் அவரது பணம், சொத்து ஆகியவற்றை மொத்தமாய் சேர்த்து estate என குறிக்கிறார்கள். உதாரணமாய், My father in his will divided all his estate between me and my sister.
கணேஷ்: அப்படீன்ன பணம் கூட estate தானா?
கடையின் உரிமையாளர்: ஆமா எல்லாமே. என்னோட அப்பா எனக்கு அலமாரி நிறைய புத்தகங்களும் இந்தப் பழக்கத்தையும் விட்டுப் போனார். அது அவரோட estate. (அவர் கால்சட்டை பையில் இருந்து சுருட்டு ஒன்றை எடுத்துக் காட்டுகிறார்)
கணேஷ்: cigar தானே?
கடையின் உரிமையாளர்: ஆமா (அவர் லைட்டரை திறந்து சுருட்டை பற்ற வைக்கிறார்) ஆனால் இது வெறும் சுருட்டு அல்ல. இதற்கு பின்னால் ஒரு நெடிய வரலாறு இருக்கிறது. மாயன் பழங்குடிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?
கணேஷ்:  ஆமா Apocalypto படத்தில் வருவார்களே?
கடையின் உரிமையாளர்: ஆமாம். அவர்களே தான். அவர்கள் சுருட்டிய புகையிலையை புகைப்பதை sicar என்று அழைத்தார்கள். Sic என்றால் மாயன் மொழியில் புகையிலை. அதில் இருந்து தான் cigar வந்தது. 
கணேஷ்: அப்படியென்றால் சிகரெட்?
கடையின் உரிமையாளர்: சிகாரில் இருந்து சிகரெட் பிறந்தது. சரி, அதை விடு. Troilus and Criseyde கதையில் இருந்து ஒரு மேற்கோள் சொன்னேனே, அதில் I am free to graze wherever I may please என்ற வரி வருகிறது. Graze wherever என்றால் என்ன தெரியுமா?
கணேஷ்: Graze என்றால் மாடு புல் மேய்வது தானே?
கடையின் உரிமையாளர்: ஆமா. இங்கே சாஸர் மறைபொருளாக grazeஐ பயன்படுத்துகிறார். Troilus and Criseyde கதையில் கிறிஸிடே டுரோய் நகரை சேர்ந்த அழகான இளம் பெண். அவளை டுரோய்லஸ் என்ற வீரன் காதலிப்பான். அவள் அவன் காதலை ஆரம்பத்தில் ஏற்றாலும் பிறகு சந்தர்ப்ப சூழல் மாற அவனை கைவிட்டு வேறொருவனைக் காதலிப்பாள். தான் யாருக்கும் கட்டுப்பட்டவள் அல்ல. எந்தப் புல்வெளியிலும் மேயக் கூடியவள் என குறிப்பாக இங்கு சொல்கிறாள். தமிழில் கூட ஊர் மேய்வது என சொல் இதே பொருளில் புழங்குகிறது.
புரொபஸர்: ஆமா. ஆனால் grazing என்பதற்கு நவீன ஆங்கிலத்தில் வேறு அர்த்தங்களும் உண்டு. 
கணேஷ்: என்ன சார்?
புரொபஸர்: இப்போ பொழுதுபோகாமல் டிவி சேனல்களை முன்னும் பின்னுமாய் மாற்றிக் கொண்டிருப்பதை grazing என்பார்கள். He was grazing up and down the channels.
கடையின் உரிமையாளர்: அவ்வப்போது தொடர்ந்து ஸ்நேக்ஸ் கொறிப்பது கூட grazing தான். அது மட்டுமல்ல, இதோ என் முழங்கையைப் பார்த்தாயா?
கணேஷ்: என்னாச்சு சார்?
கடையின் உரிமையாளர்: நேற்று படிக்கட்டில் இறங்கும் போது I tripped. தடுக்கி விழுந்திட்டேன். முழங்கை சிராய்த்து விட்டது பார்த்தாயா? 
கணேஷ்: ஆமா.
கடையின் உரிமையாளர்: இதை I grazed my forehand என்று சொல்லலாம். அதே போல ஓர் அழகான இளம் பெண்ணின் கன்னத்தை விரலால் வருடுவது கூட...
கணேஷ்: grazing.
கடையின் உரிமையாளர்: ஆமா.
கணேஷ்: வாவ்... ஒரு சொல்லுக்கு எவ்வளவு மாறுபட்ட அர்த்தங்கள்?
கடையின் உரிமையாளர்: இச்சொற்கள் எல்லாம் மேய்ச்சல் எனும் மூலச் சொல்லில் இருந்து வருகிறது என்பது தான் ஆச்சரியம். 
புரொபஸர்: Yes, to touch lighly அது தான் to graze என்பதன் பொருள். To rub lightly, to brush against இப்படியும் சொல்லலாம். இதமாய் வருடுவதற்கான சொற்கள் இவை. இன்னொரு சொல் உள்ளது. அது ரொம்ப அழகானது. சட்டென்று வாயில் வர மாட்டேங்குது.
கடையின் உரிமையாளர்: Caress.
புரொபஸர்: Yes, correct His breath caressed her cheek. அவனது மூச்சு அவள் கன்னத்தை வருடியது.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.