வாங்க இங்கிலீஷ் பேசலாம் 78
புரொபஸரும் கணேஷும் கடவுள் படங்கள் விற்கும் ஒரு கடைக்குச் சென்று அதன் உரிமையாளருடன் அரட்டை அடிக்கிறார்கள்.


புரொபஸரும் கணேஷும் கடவுள் படங்கள் விற்கும் ஒரு கடைக்குச் சென்று அதன் உரிமையாளருடன் அரட்டை அடிக்கிறார்கள்.
புரொபஸர்: Bye the bye, உங்க பேரு என்னன்னு கேட்க மறந்திட்டேன். சாரி
கடையின் உரிமையாளர்: Long Silver John
புரொபஸர் (மெல்லிய அதிர்ச்சியுடன்): என்னது?
கணேஷ்: சார் குறுக்கிடறதுக்கு மன்னிக்கணும். கொஞ்ச நேரம் முன்னாடி அவர் கூட bye the byeன்னார். நாம் டாட்டா காட்டும்போது bye, bye சொல்வோமே அதுவும் இதுவும் வேற வேறயா?
Long Silver John: ஹா... ஹா... I love this guy. சந்தர்ப்பம் சமயம் பார்க்காம எப்பவுமே அறிவு தாகத்தோட இருக்கார்.
கணேஷ்: தாங்க் யூ சார்.
Long Silver John: உன்னை கலாய்ச்சேன். அதுக்கும் தாங்க் யூ - வா? சரி உன் சந்தேகத்தை நான் க்ளியர் பண்றேன். நாம உரையாடல் நடுவே திடீர்னு ஒரு புது விசயத்தை ஆரம்பிக்கும் போது, ஒரு சால்ஜாப்புக்காக, bye the byeன்னு சொல்வோம். For example, நீ காதலர் தினத்தில் உன் தோழியை தேடி ரோஜாப்பூவோட propose பண்ணலாம்ன்னு போறே. மேட்டருக்கு வராம அவள் என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்கிறா. ஒரு கட்டத்துல நீ பொறுமை இழந்து bye the bye Laila I wanted to propose to you with this red red rose அப்டீன்னு சொல்றே.
கணேஷ்: வாவ். சார்... அது யார் சார் லைலா?
Long Silver John: சும்மா பேச்சுக்கு சொன்னேன்பா.
கணேஷ்: சாரி நான் நிஜமாவே அப்படி ஒருத்தங்களை கற்பனை பண்ணிட்டேன். அப்படீன்னா அதென்ன red red rose?
Long Silver John: அது ராபர்ட் பர்ன்ஸ் எனும் கவிஞரோட ஒரு கவிதையில் இருந்து முதல் வரி: My love is like a red red rose, that is newly sprung in June. ஜூன் மாதத்தில் பூத்த சிவப்பு சிவப்பான ரோஜா போன்றது என் காதல்.
கணேஷ்: வாவ்... அதென்ன red red rose ரொம்ப சிவப்பான ரோஜான்னா?
கர்ய்ஞ் நண்ப்ஸ்ங்ழ் ஒர்ட்ய்: ரோஜாக்களே சிவப்பு சிவப்பு திட்டுக்களாய், இதயங்கள் போல காதலனுக்கு தெரியுது. Sprung கூட அழகான வார்த்தை பார்த்தியா? எதிர்பாராமல் சட்டென தோன்றுவதை springன்னு சொல்வோம். அதோட கடந்த கால(past tense)சொல் தான் sprung. The rose blossomed என்று சொல்லலாம். அதாவது ரோஜா பூத்ததுன்னு அர்த்தம் வரும். ஆனால் The rose sprung அப்படீன்னா திடீர்னு பூத்து நம்மை ஆச்சரியப்படுத்தும் ரோஜா.
கணேஷ்: செம சார்.
Long Silver John: அதே போல அன்றைய தினம் எவ்வளவு அற்புதமா இருக்க போகுதுங்கிற எண்ணத்தோட காலையில் உற்சாகமா படுக்கையில் இருந்து துள்ளி எழுந்திருக்கிறேன்னா I sprung out of bed in anticipation of the exciting dayன்னு சொல்லலாம். ஆனால்?
கணேஷ்: ஆனால்?
Long Silver John: ஆனால் அன்றைய தினம் ரொம்ப மோசமா அமையுது. ஏமாற்றத்தில் அழறே. அப்போ tears spring from your eyes. எதிர்பாராம உன் கண்ணில் கண்ணீர் துளிர்க்குது.
கணேஷ்: அச்சச்சோ... எனக்கே வருத்தமா இருக்குது.
புரொபஸர்: ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? மிஸ்டர் Long Silver John இது நிஜமாவே உங்க பேர் தானா?
Long Silver John: இல்ல. இது நானா எனக்கு வச்சிக்கிட்டது.
புரொபஸர்: Bye the bye, இந்த பேரை எங்கயோ கேட்டிருக்கேன்.
Long Silver John: ஆர். எல். ஸ்டீவென்ஸன் எழுதின Treasure Island நாவலில் வரும் பயங்கர வில்லனோட பேரு.
புரொபஸர் (உற்சாகமாகி): கரெக்ட். ஞாபகம் வந்திருச்சு. The one-legged sailor. ஆனால் நீங்க?
Long Silver John: ஆமா. எனக்கு அந்த கேரக்டர் ரொம்ப பிடிக்கும். And I am also one-legged. So.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...