நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 85 

புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

News image
Updated On :2 மே 2017, 6:09 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கிளி rats in the attic என்கிற சொற்றொடரின் பொருளை விளக்குகிறது.

Captain Flint: ஒருவருக்கு rats in the attic என்றால் அவருக்கு கொஞ்சம் புத்தி பேதலித்து விட்டதெனப் பொருள்.
கணேஷ்: அதென்ன attic?
Captain Flint: அதுவா மச்சு. வீட்டின் கூரையில் உள்ள மாடிப்பகுதி. சரி இந்த சொற்றொடர் எப்படித் தோன்றியது தெரியுமா? 
கணேஷ்: ம்ஹும்...
Captain Flint: எனக்கும் தெரியாது.
கணேஷ்: அடச்சே... போயும் போயும் ஒரு கிளி கிட்டே பல்ப் வாங்கிறேனே...
Captain Flint: யாருக்குமே தெரியாது. Bats in the belfry தெரியுமா? அதுக்கும் இதே அர்த்தம் தான். கொஞ்சம் லூசு என்று பொருள் வரும். 
புரொபஸர்: இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஒன்றுமில்லை. நம் வீட்டின் மச்சில் எலிகள் ஓடிக் கொண்டிருந்தால் எப்போதும் கடகடவென சத்தம் கேட்டபடி இருக்கும். அது நமக்கு ஒரே நசையாக இருக்கும். எப்போதும் தீராத ஒரு தொல்லை. மனம் பேதலித்தவரின் மண்டைக்குள் இது போன்று எண்ணங்கள் தடதடத்து ஓடிக் கொண்டிருக்கும். This is a highly visual phrase. புரிகிறதா?
கணேஷ்: அப்படியென்றால் bat in the bell?
புரொபஸர்: அது bell அல்ல belfry. Bats in the belfry. Steeple தெரியும், இல்லையா?
கணேஷ்: ஆமாம். 
புரொபஸர்: என்ன?
கணேஷ்: அது வந்து....
புரொபஸர்: தெரியாட்டி தைரியமா ஒத்துக்கணும். அப்போ தான் கத்துக்க முடியும். Steeple என்றால் தேவாலய கோபுரத்தின் கூம்பின வடிவிலான உச்சி. அங்கே மணிகளைத் தொங்க விட்டிருப்பார்கள். அப்பகுதியை தான் belfry  என்பார்கள். ஒருவேளை அப்பகுதியில் நிறைய bats  அதாவது வவ்வால்கள்  இருந்தால் எப்படி இருக்கும்?
Captain Flint: I hate bats. No no I despise bats. Ugly creatures.
கணேஷ்: எனக்கு வவ்வால்கள் பிடிக்கும். பேட்மேன் படம் நீ பார்த்ததில்லை? கண்ணே தெரியாமல் எவ்வளவு சாமர்த்தியமாய் வேட்டையாடும்?  நீண்ட தூரம் பறக்கும். Amazing creatures.
Captain Flint: Blind as a bat அப்படீன்னு ஒரு சொற்றொடர் உண்டு தெரியுமா?
கணேஷ்: கண் தெரியாதவர்களைக் குறிப்பதா?
Captain Flint: ஆமாம். கொஞ்சம் கூட பார்வையில்லாமல் போகும் போது you are blind as a bat. 
கணேஷ்: ஆனால் அது ஒரு அபத்தமான சொற்றொடர். வவ்வால்கள் சோனார் கதிர்களை பாய்ச்சி துல்லியமாய் இடம் அறிந்து லாகவமாய் பறக்குமே? பார்வையில்லாவிட்டாலும் வவ்வால்களுக்கு பார்க்கத் தெரியும்.
புரொபஸர்: உண்மை தான். ஆனால் ஒரு வவ்வால் நம் அறைக்குள் மாட்டிக் கொண்டால் அது பதற்றத்தில் பல இடங்களில் பறந்து மோதும். அதைப் பார்த்து நாம் அது குருடு என நினைக்கிறோம். உண்மையில் எந்தப் பறவையும் அறைக்குள் பறந்தால் மோதி தடுமாறும்.
Captain Flint: Who said I fly without bumping into any objects. Bats they are blind. Despicable. I hate... I hate... I hate... bats.
புரொபஸர்: சரி... சரி... நிறுத்து. Blind as a bat என்பதை அன்பு மிகுதியால் ஒருவரது தவறுகளை பார்க்கத் தவறுவது எனும் பொருளிலும் சொல்லலாம். உதாரணமாக a teacher should never be blind as a blind when it comes to his students. அதாவது தன் மாணவர்கள் இடத்து ஓர் ஆசிரியர் கண்மூடித்தனமான அன்பு காட்டக் கூடாது  அவர்களின் தவறுகளை கண்ட போது கண்டிக்க வேண்டும். சரி சொல்ல வந்ததில் இருந்து விலகி வந்து விட்டோம். Bats in the attic மாதிரித் தான் தேவாலய உச்சி கோபுரத்தில் மணிகளில் மோதியபடி பறக்கும் வவ்வால்கள் எழுப்பும் சப்தமும். மனநிலை பாதிக்கப்பட்டவரின் மனம் இப்படித் தான் ஒரே சத்தமாய் கலவரமாய் இருக்கும். அதனால் தான் அவர்களை he has got bats in the belfry என சற்றே வேடிக்கையாய் சொல்கிறார்கள்.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.