வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 86
புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flint என்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கணேஷ்: Captain Flint கொஞ்ச முன்னாடி I hate bats. No no I despise bats என்று சொன்னாய். எனக்கு அதில் ஒரு முக்கியமான சந்தேகம்.
Captain Flint: இந்த மாதிரி கேள்விகளுக்கு சுலபமாய் பதில் அறிய நீங்கள் Captain Flint Plus என்கிற புதிய பிளானுக்கு subscribe செய்யலாமே?
கணேஷ்: என்னது?
Captain Flint: என்னிடம் நீங்கள் கேட்கும் முதல் 10 கேள்விகளுக்கு மட்டுமே இலவசமாக பதில் அளிப்பேன். அதன் பிறகு நீங்கள் Captain Flint Plus என்கிற
பிளானுக்கு subscribe செய்ய வேண்டும். கட்டணம் ஒரு வருடத்துக்கு ரூபாய் 999 மட்டுமே. அது மட்டுமல்ல, இந்த விளக்கங்களை நீங்கள் unlimited download
பண்ணிக் கொள்ளலாம்.
கணேஷ்: மிஸ்டர் Long John இந்த கிளிக்கு என்னாச்சு? ஏன் புரியாத மாதிரி என்னன்னமோ சொல்லுது?
Long John Silver: நான் தான் அப்பவே சொன்னேனே.
கணேஷ்: என்னது?
Long John Silver: அடிக்கடி மரை கழன்ற மாதிரி நடந்துக்குமுன்னு.
கிளி Captain Flint கணேஷ் தன் அருகே வரும்படி சமிக்ஞை செய்கிறது. கணேஷ் அதன் அருகே செல்கிறான்.
Captain Flint கணேஷின் காதருகே தன் மூக்கை வைத்து சொல்கிறது: அவனை நம்பாதே. எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உனக்கு அந்த பேக்கேஜ்
பிடிக்கலைன்னா பரவாயில்ல. என்னிடம் ரூ 499க்கு ஆறு மாத பேக்கேஜ் உள்ளது. வேண்டுமா?
கணேஷ் அங்கிருந்து ஓடுகிறான்: இந்த கிளிக்கு முழு பித்து.
புரொபஸர்: அது கிட்ட ஏன் போறே? நான் உனக்கு விளக்குறேன். Hate என்றால் வெறுமனே வெறுப்பது. ஆனால் Despise என்றால் ஆழமான தீவிரமான வெறுப்பு.
அருவருப்பு. Disgust, detest, abhor, abominate, loathe ஆகிய வேறு சொற்களை இதற்கு இணையாகச் சொல்லாம். இந்த despise despire என்ற ஒரு லத்தீன்
சொல்லில் இருந்து தோன்றியது. இந்த லத்தீன் சொல்லுக்கு கீழே என்று பொருள். இதில் இருந்து தான் look down upon என்ற சொற்றொடர் தோன்றியது.
கணேஷ்: அதென்ன look down?
புரொபஸர்: Look down upon. அதாவது தான் உயரமான இடத்தில் இருப்பதாகவும் அடுத்தவர் கீழாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு அவரை மட்டம் தட்டி
பேசுவது. He looks down upon anyone who is supposed to be lower caste. தான் தாழ்ந்த சாதி என கருதுபவர்களை அவன் மட்டம் தட்டி பேசுகிறான்.
கணேஷ்: ஓ! hat க்கும் detestக்கும் நடுவே எவ்வளவு வெறி, கசப்பு, வரலாறு? சார் இன்னொரு கேள்வி. இந்த கிளி ஏன் அடிக்கடி subscribe, package எனச்
சொல்லுது?
புரொபஸர்: Subscribe என்றால் ஒரு குறிப்பிட்ட சேவைக்குப் பணம் கட்டுவது என்று அர்த்தம். ஒரு பத்திரிகைக்கு subscribe செய்வது என்றால் அதற்கு
சந்தாதாரார் ஆவது. ஒரு வணிக சேவைக்கு பணம் கட்டி
subscribe செய்யும் போது அதன் வாடிக்கையாளர்ஆகிறீர்கள். இச்சொல் subscriber என்ற லத்தீன் சொல்லில் இருந்து தோன்றியது. Sub scribere. Sub என்றால்
கீழே. Scribere என்றால் கீழே கையெழுத்து இடுவது. அதாவது ஒரு ஒப்பந்தத்தின் கீழே கையெழுத்திடுவது. பழங்காலத்தில் ஒரு வணிக ஒப்பந்தத்தில்
கையெழுத்துப் போடுவதில் தொடங்கி பின்னர் ஒரு பத்திரிகைக்கு கையெழுத்திட்டு பணம் அனுப்பி சந்தாதாரர் ஆகி, இப்போது டிஜிட்டல் முறையில் பணம்
அனுப்பி ஒரு டிஜிட்டல் டிவி அல்லது மொபைல் போன் திட்டத்துக்கு வாடிக்கையாளர் ஆவது வரை subscribe என்ற சொல் மாறி வந்திருக்கிறது.
இச்சொல்லுக்கு எழுநூறு வருட வரலாறு உள்ளது. அதே போல அரசியலில் I do not subscribe to your theory proposal idea என்கிற பிரயோகம் உண்டு.
அதாவது உங்கள் கருத்துடன் நிலைப்பாட்டுடன் எனக்கு உடன்பாடில்லை.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...