வாங்க இங்கிலீஷ் பேசலாம் 87
புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flintஎன்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


புரொபஸர் மற்றும் கணேஷ் Long John Silver என்பவரின் கடையில் அவரது Captain Flintஎன்ற கிளியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கிளி Captain Flint தன் அலகால் பக்கங்களை புரட்டி ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறது. Long John Silver வேலை விஷயமாக வெளியே போகிறார்.
புரொபஸரும் கணேஷும் மட்டுமே அங்கிருக்கிறார்கள்.
கணேஷ்: Captain Flint
Captain Flint: என்னடா?
கணேஷ்: தொந்தரவு பண்ணிட்டேனா?
Captain Flint: தொந்தரவு பண்ணிட்டு பண்ணிட்டேனான்னு கேட்டா சரி சொல்லு. I think I am gonna become a TV show panelist.
கணேஷ்: அதென்ன?
Captain Flint: உனக்குத் தெரியாது சிறப்பு விருந்தினர், அது தான் panelist. TV show guest என்றும் சொல்லலாம். சானல் சானலா வந்து எதைப் பத்தியும் கருத்து சொல்றது. எனக்கு இந்த சமூகத்துக்கு சொல்ல நிறைய கருத்துகள் இருக்குது.
கணேஷ்: உனக்கா? சரி என்ன படிக்கிறே இப்போ?
Captain Flint: I Krishnadevaraya.
கணேஷ்: இங்கிலீஷ் நாவலா?
Captain Flint: இல்ல இது ஒரிஜினலா தமிழ்ல எழுதப்பட்ட நாவல். ரா.கி ரங்கராஜனோட நான் கிருஷ்ணதேவராயன். இது அதோட ஆங்கில மொழியாக்கம்.
Translation. இந்த புத்தகத்துல ஒரு விஷயம் கத்துக்கிட்டேன்.
கணேஷ்: என்ன?
Captain Flint: Krishnadevaraya was a catholic king. He embraced all religions.
கணேஷ்: Embrace என்றால் கட்டிப் பிடிக்கிறது தானே?
Captain Flint: அது மட்டுமில்ல. ஒரு புதிய எண்ணத்தை, நம்பிக்கையை, கருத்தாக்கத்தை உற்சாகமாக, ஆர்வமாக ஏத்துக்கிறது கூட embracing தான். Though my grandfather is 90 years old he embraces new technology immediately without reluctance. He has all the latest gadgets and keeps up with the younger generation.
அதாவது என் தாத்தாவுக்கு தொண்ணூறு வயசானாலும் புது தொழில்நுட்பங்களை எந்த தயக்கமும் இன்றி உடனடியாய் ஏற்றுக் கொள்கிறார். எல்லா புது மின்னணு கருவிகளையும் வாங்கிப் பயன்படுத்துகிறார். புதிய தலைமுறையினருக்கு இணையாக அனைத்து தொழில்நுட்பச் செய்திகளை அறிந்து வைத்திருக்கிறார்.
கணேஷ்: உன் தாத்தாவா?
Captain Flint:: இல்லை. சும்மா கற்பனையா சொன்னேன்.
கணேஷ்: Gadget என்றால் மொபைல் போனா?
Captain Flint: அப்படி அல்ல. எந்த மின்னணுக் கருவியையும் சொல்லலாம். மின்னணுக் கருவி தான் என்றில்லை. மக்களின் வேலைகளைச் சுலபமாக்கும் எந்த கருவியையும் gadget என்று சொல்லலாம். உதாரணமா kitchen gadgets. கத்தரிக்கோல், கத்தி, ஸ்பூன், எலுமிச்சம்பழம் பிழியுற கருவி, இடுக்கி, கேரட் சீவி, மிக்ஸி, கிரைண்டர் என ஒவ்வொண்ணுமே ஒரு kitchen gadget. இந்த gadget எனும் சொல் கடல் சம்பந்தமான ஒரு சொல். அதாவது it is a nautical term.
கணேஷ்: அப்படியா?
Captain Flint: ஆமா. Gadjet எனும் ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு சொல்லில் இருந்து gadget தோன்றுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட விசயத்தை உணர்த்த இச்சொல் தோன்றவில்லை.
கணேஷ்: பிறகு?
Captain Flint: கப்பலில் பயணிக்கும் அல்லது பணிபுரிவோருக்கும் கப்பலின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட எந்திர பாகத்தின் பெயர் தெரியாது அல்லது மறந்து விட்டது என்றால் அதை gadjet என அழைத்தார்கள். அதுவே பின்னாளில் எல்லா கருவிகளுக்குமான சொல்லாக மாறியது.
கணேஷ்: அதாவது யார் பேரையாவது மறந்துட்டோமுன்னா, "டேய் இவனே' என்று கூப்பிடுவோமே, அது போலவா?
Captain Flint: Exactly.
கணேஷ்: Keep up என்றால் ஒருவரது வேலையை பாராட்டுறது தானே?
Captain Flint: அது keep it up. Keep up the good work. Keep up with என்றால் இன்னொருவருக்கு இணையாக முன்னேறுவது அல்லது அதே வேகத்தில் பயணிப்பது. I had to slow down the bike to let my sister keep up with me on her cycle. அதாவது பைக்கில் போகிற நான் வேகத்தை குறைத்து, சைக்கிளில் வரும் என் தங்கை எனக்குச் சமமாக, கூட வர உதவினேன். அதே போல வேறு சில அர்த்தங்களும் உள்ளன.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...