வாங்க இங்கிலீஷ் பேசலாம்-111
கணேஷ், புரொபஸர், மீனாட்சி ஆகியோர் கிரிக்கெட் வழி ஆங்கிலத்தில் பிரசித்தமான சொற்றொடர்களை அலசுகிறார்கள்


கணேஷ், புரொபஸர், மீனாட்சி ஆகியோர் கிரிக்கெட் வழி ஆங்கிலத்தில் பிரசித்தமான சொற்றொடர்களை அலசுகிறார்கள். Stumped எனும் சொல் எப்படி கிரிக்கெட்டில் இருந்து அன்றாட ஆங்கிலத்தில் பரவலாய் பயன்படுகிறது என புரொபஸர் விளக்குகிறார்.
புரொபஸர்: Stumped என்றால் puzzled, baffled என்று அர்த்தம் இப்படி கிரிக்கெட் ஸ்டம்பிங்கில் இருந்து தோன்றியது. தோனி ஸ்டம்பிங் பண்ணின பின் பேட்ஸ்மேனோட பேந்த பேந்த முழியை பார்த்திருக்கிறாய் அல்லவா? சில நேரம் தேர்வில் ரொம்ப குழப்படியான ஒரு கேள்வி வரும். அப்போ நீ அதே போல முழிச்சபடி சொல்லுவே I am stumped.
கணேஷ்: சார் இந்த catch out ?
புரொபஸர்: அதைத் தான் விட்டுடுன்னேனே?
கணேஷ்: அதுக்கில்ல சார். கிரிக்கெட்டில இருந்து இது எப்பிடி வந்ததுன்னு கேட்டேன்.
புரொபஸர்: ஓ... அதுவா? நீ ஒரு பந்தை அடிக்கிறே. அது தரையோட போகாம தப்பா காத்தில உயரப் போகுது. அதை ஒரு பீல்டர் வசமா பிடிச்சு உன்னை அவுட் ஆக்கிடறான். நீ நினைச்சது ஒண்ணு, ஆனா நடந்தது இன்னொண்ணு. நீ கவர் டிரைவ் ஆடி அது பவுண்டரி போகுமுன்னு நினைக்கிறே. ஆனால் பந்தோ எக்ஸ்டிரா கவர் டிரைவ் பொஸிஷனில் நிற்கும் பீல்டர் கையில் போய் பழமா விழுது. நீ பொறியில் மாட்டின எலி மாதிரி தவிக்கிறே. அது தான் to be caught out.
கணேஷ்: சரி பந்து கரெக்டா கவர் டிரைவ் ஆகி பவுண்டரி ஆகுதுன்னா...
புரொபஸர்: அப்போது you are off your own bat. அதாவது உன் உத்தேசப்படி நீ செயல்படுவது. எங்களுக்கு கல்யாணமான புதுசுல எனக்கு வேலை இல்லை. மீனாட்சிக்கு ஒரு கல்லூரியில் தற்காலிக வேலை இருந்தது. என் அப்பா சம்பளத்துல தான் குடும்பச் செலவெல்லாம் நடந்துச்சு.
கணேஷ்: உங்களுக்கு அது ரொம்ப சங்கடமா அவமானமா இருந்துது. அப்படித் தானே?
புரொபஸர்: சேச்சே... அதெல்லாம் இப்போ மாதிரியா? We had ajoint family. கூட்டுக் குடும்பம். சகோதரர்கள், எங்க அப்பா, அம்மா, பாட்டி , தாத்தா எல்லாரும் பெரிய கூட்டமா ஒரே வீட்டில் வாழ்ந்தோம். ஒவ்வொருத்தரும் சம்பாதிக்கிறதில ஒரு பங்கை கொடுத்திடுவோம். என்னால முடியறதை நானும் என் அண்ணன், தம்பிங்களால முடியறதை அவங்களும். எந்தச் சிரமமும் தெரியாத, மடியில் கனமில்லாத வாழ்க்கை.
கணேஷ்: பிறகென்ன?
புரொபஸர்: எனக்கு அரசு வேலை கிடைச்சுது. மீனாட்சி என்னை நச்சரிச்சு தனியா ஒரு வீடு பார்த்து போலாமுன்னா. நானும் ஒத்துக்கிட்டு என் அம்மா கிட்டே போய் கேட்டேன். அவ அந்த காலத்திலே கான்வெண்டில் படிச்சவ. அவள் கேட்டாள் Are you Saying this of your own accourd? Is this off your own bat?
கணேஷ்: ஆங்?
மீனாட்சி: அதாவது கணேஷ் இவரோட அம்மா ஒரு ராட்சஸி. நீயே போணுங்கிறியா? இல்ல... உன் வீட்டுக்காரி சொல்லிப் போறியான்னு அவங்களுக்கு தெரியணும். அதான் is this off your batன்னு கேட்டிருக்கா. பெரிய பிராட்மேன் பேமிலி. சரியான பிடாரி.
புரொபஸர்: வாயை மூடு. என் அம்மாவைப் பத்தி ஒரு வார்த்தை சொன்னேனா...
மீனாட்சி: You Shut Up!
கணேஷ்: ஐயோ நீங்க ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா? அக்பர் காலத்தில நடந்த ஒரு பிரச்னைக்காக இப்போ அடிச்சிக்கிறீங்களே?
புரொபஸர்: இதெல்லாம் சும்மா ஜாலிடா
(மீனாட்சியின் கன்னத்தை கிள்ளுகிறார்) ஆர் யு ஒ கெ பேபி?
(மீனாட்சி கண்ணடிக்கிறார்.)
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...