சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

TANCET 2018 தேர்வுக்குத் தயாராவீர்!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான தகுதித் தேர்வான TAMIL NADU COMMON ENTRANCE TEST 2018 (TANCET 2018)  மே மாதம் நடைபெறுகிறது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2018, 4:04 am

வி.குமாரமுருகன்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான தகுதித் தேர்வான TAMIL NADU COMMON ENTRANCE TEST 2018 (TANCET 2018)  மே மாதம் நடைபெறுகிறது. 

MBA, MCA, M.E., M.Tech., M.Arch., M.Plan  போன்ற உயர்கல்வி கற்க விரும்புவர்கள் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வு எழுத விரும்பவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.annauniv.edu/tancet2018/index.html  என்ற இணையதளத்திற்கு சென்று அதில் Online Registration - ஐ கிளிக் செய்து பதிவு கொள்ளலாம். 

MCA-விற்கு மே-19 காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், MBA-விற்கு மே-19 ஆம் தேதி மதியம் 2.30 முதல் 4.30 வரையும், M.E./M.Tech./ M.Arch./ M.Plan போன்றவைகளுக்கு மே-20 ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். தேர்வுக் கட்டணம் ரூ. 250(SC /SCA /ST candidates) மற்றவர்களுக்கு ரூ.500 ஆகும். சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 இடங்களில் தேர்வு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.