அழித்ததை மீண்டும் பெறலாம்!
வாட்ஸ் ஆப்பில் மேலும் ஒரு புதிய சேவையாக நீக்கப்பட்ட புகைப்படங்களை திரும்பப் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.


வாட்ஸ் ஆப்பில் மேலும் ஒரு புதிய சேவையாக நீக்கப்பட்ட புகைப்படங்களை திரும்பப் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களையோ, வீடியோக்களையோ, ஆடியோ பைல்களையோ, ஜிஃப் பைல்களையோ நீக்கி (DELETE) விட்டால், அதைத் திரும்பப் பெற முடியாது.
அதேநேரத்தில் நமது வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பப்பட்ட இந்த பைல்கள், 30 நாள்கள் வரை சர்வரில் இருக்கும். அந்த பைல்களை நாம் பதிவிறக்கம் செய்துவிட்டால் உடனடியாக சர்வரில் இருந்து நீக்கம் செய்யப்படும். பயன்பாட்டாளர்கள் புகைப்படத்தையோ, வீடியோக்களையோ செல்லிடப் பேசி மெமரியில் இருந்து தவறுதலாக நீக்கிவிட்டால், அவற்றை திரும்பப் பெற இயலாத குறைபாடு பல நாள்களாக இருந்துவந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் நீக்கப்பட்ட பைல்களைப் திரும்பப் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, வாட்ஸ் ஆப்பில் நாம் பெற்ற பைல்களை செல்லிடப்பேசியில் இருந்து நீக்கிவிட்டாலும், பின்னர் அதைப் பெறலாம். ஆனால், வாட்ஸ் ஆப் சாட் பகுதியில் அந்த பைல் வந்த தடயப் பகுதி கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த தடயப் பகுதிக்கு சென்று பைலை கிளிக் செய்தால் வாட்ஸ் ஆப் சர்வரில் இருந்து அதே பைல் நமக்குக் கிடைக்கும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதி முதல்கட்டமாக வாட்ஸ் ஆப் பீட்டா ஆன்ட்ராய்டு 2.18.106 மற்றும் 2.18.110 அப்டேட்களில் கிடைக்கும். முதல்கட்டமாக ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் ஐஓஎஸ் போன்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
இதேபோல் வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணில் இருந்து வேறு எண்ணுக்கு மாறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் செட்டிங்கில் சேஞ்ச் நம்பரின் மூலம் பழைய எண், புதிய எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதில் புதிய எண்ணைத் தேர்வு செய்தவுடன் பழைய எண்ணில் உள்ள தொலைபேசி எண்கள், சாட்கள் அனைத்தும் அப்படியே புதிய எண்ணுக்கு மாற்றமாகிவிடும். வாட்ஸ் ஆப் பீட்டாவில் இதற்கான அப்டேட் வசதி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...