கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

வேலை... வேலை... வேலை...

பொது பிரிவினருக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

News image
Updated On :24 ஏப்ரல் 2018, 8:03 pm IST

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் வேலை

பதவி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்
காலியிடங்கள்: 542
கல்வித் தகுதி: சிவில்/ எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரிக்கல்/ அர்கிடெக்சர் பிரிவுகளில் பி.ஈ/ பி.டெக் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero  என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பதாரரின் விவரங்களைப் பதிவு செய்து, தேவையான சான்றிதழ்களையும், புகைப்படத்தையும் இணைத்து, ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 (ஆன்லைன் வழியே செலுத்த வேண்டும்) எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: 2018 GATE தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/GATE%20ADVT%202018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27-04-2018
ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த கடைசித் தேதி: 02-05-2018 


எக்ஸிம் வங்கியில் வேலை

பதவி: அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபிஸர்
காலியிடங்கள்: 05
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். கணினி அறிவு வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினர் 40 வயதுக்குள்ளும், ஓபிசி பிரிவினர் 43 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.eximbankindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் சுயவிவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600 
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.eximbankindia.in/Assets/Dynamic/PDF/Recruitment/2018/Exim%20AO.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-04-2018 மாலை 5 மணி 


இந்தியன் வங்கியில் வேலை

பதவி: Assistant General Manager,  Chief Manager, Senior Manager, Manager,  Assistant Manager
துறைகள்: Information Technology Department / Digital Banking Department, Information Systems Security Cell, Treasury Department, Risk Management Department, Security Department, Credit, Planning and Development Department, Premises and Expenditure Department 

மொத்த காலியிடங்கள்: 145
கல்வித் தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடும்.
வயது வரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 
விண்ணப்பிக்கும் முறை: http://www.indianbank.in  என்ற இணையதளத்தில் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தைப் பதிவு செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600; எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிக்கு ரூ.100 .ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.indianbank.in/pdfs/SOENG.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02-05-2018 


சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

பதவி: நீதிபதிகளுக்கு தனி உதவியாளர்கள்
காலியிடங்கள்: 71
பதவி: பதிவாளர்களுக்கு தனி உதவியாளர்கள்
காலியிடங்கள்: 10
பதவி: துணை பதிவாளர்களுக்கு தனி எழுத்தர்
காலியிடம்: 1

அனைத்துப் பதவிகளுக்கும் கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து, தட்டச்சு உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆபிஸ் ஆட்டோமேஷன் கணினி படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: எஸ்.சி/ எஸ்டி/ எம்பிசி/ பிசி விண்ணப்பதாரர்களுக்கு 18 வயதிலிருந்து 35 வயதுக்குள்ளும், மற்றவர்களுக்கு 18 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி./எஸ்.டி./ மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு- ரூ.500. 
விண்ணப்பிக்கும் முறை: http://www.hcmadras.tn.nic.in/  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த படிவத்தையும் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து, recruitment.mhc@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
முகவரி: Registrar General, High Court, Madras 600-104.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: www.hcmadras.tn.nic.in/Notf56of2018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய/ விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 02-05-2018 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.