வேலை... வேலை... வேலை...

வேலை... வேலை... வேலை...
Updated on
3 min read

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

பதவி: ஜூனியர் அசோசியேட்
காலியிடங்கள்: 8301
வயது வரம்பு: 20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். நஇ, நப, ஞஆஇ ஆகிய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bank.sbi/careers அல்லது www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் Recruitment of Junior Associates என்ற பகுதிக்குச் சென்று ஆன்லைன் மூலம் உரிய சான்றிதழ்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர்/ஓபிசி/ இதர பிரிவினர்-ரூ.600. எஸ்.சி., எஸ்.டி/முன்னாள் ராணுவத்
தினர்/மாற்றுத் திறனாளிகள்-ரூ.100. விண்ணப்பிக்கும் போது, ஆன்லைன் மூலம்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, விண்ணப்பதாரரின் மாநில மொழித்திறன் தேர்வு, உடல் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:
https://www.sbi.co.in/webfiles/uploads/files/1516358303086_SBI_CLERICAL_ADV_ENGLISH.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10-02-2018.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

பதவி: ஜூனியர் ஆபரேட்டர்
காலியிடங்கள்: 58
கல்வித் தகுதி: பிளஸ் டூ தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் குறைந்தது ஓராண்டு முன் அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயது வரை இருக்க வேண்டும். SC, ST, OBC ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் உரிய சான்றிதழ்களையும் புகைப் படத்தையும் பதிவேற்றி 10-02-2018 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய நகல் சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: POST BOX NO. 10205, BALLYGUNGE POST OFFICE, KOLKATA - 700019

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/- (பொது/ ஓபிசி பிரிவினர் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்)
மேலும் விவரங்களுக்கு: https://www.iocl.com/download/EmploymentNews-matter.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10-02-2018.
தபால் விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி: 16-02-2018.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையில் வேலை

பதவி: உதவி ஆணையர்
காலியிடங்கள்: 10
கல்வித்தகுதி: தொழிலாளர் நிர்வாகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தொழிலாளர் சட்டம்/ தொழிலாளர் நிர்வாகம் ஆகியவற்றில் டிப்ளமோ/ முதுநிலை டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, உரிய படிவங்களைப் பதிவேற்றி, ஆன்லைனிலேயே விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது சரியான மின்னஞ்சல் முகவரியையும், செல்லிடப்பேசி முகவரியையும் அளிப்பது அவசியம். முதன்முறையாக இந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்கள், ரூ.150/- ஆன்லைனிலேயே செலுத்தி பதிவு செய்து கொள்வது அவசியம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/- (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் அல்லது இந்தியன் வங்கி/ பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் விண்ணப்பித்த இரு நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_01_asst_comm_labour_officer.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 11.02.18

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை

பதவி: மெஷினிஸ்ட்
காலியிடங்கள்: 22

பதவி: டர்னர்
காலியிடங்கள்: 21

பதவி: கிரிண்டர்
காலியிடங்கள்: 05

பதவி: ஃபிட்டர்
காலியிடங்கள்: 59

பதவி: எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்
காலியிடங்கள்: 15

பதவி: எலெக்ட்ரிஷியன்
காலியிடங்கள்: 05

பதவி: இன்ஸ்ட்ரூமென்டல் மெக்கானிக்
காலியிடங்கள்: 04

கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, ST, OBC ஆகிய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.halindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை பிரதியெடுத்துக் கொள்வது அவசியம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்)
மேலும் விவரங்களுக்கு: http://hal.eadmissions.net/images/HAL_2018_Notification.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 14-02-2018.

இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வேலை

பதவி: Chief Administrative Officer

காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: முதுகலைப் பட்டத்தில் 50 சதவீத தேர்ச்சியுடன் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அல்லது சட்டம்/ மேலாண்மையில் முதுகலை பட்டம் அல்லது பொறியியல் பட்டத்துடன் மேலாண்மையில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: Senior Administrative Officer

காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: முதுகலைப் பட்டத்தில் 50 சதவீத தேர்ச்சியுடன் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ அல்லது பொது நிர்வாகம்/ மேலாண்மையில் முதுகலை பட்டம்.
முன் அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 10ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: Administrative Officer

காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: முதுகலைப் பட்டத்தில் 50 சதவீத தேர்ச்சியுடன் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ அல்லது எம்பிஏ படித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 8ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: Administrative Officer (Accounts)

காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: வணிகவியலில் இளங்கலைப் பட்டத்துடன் ஐசிடபிள்யூஏ/சிஏ இண்டர்மீடியட் அல்லது SOS/ SOGE  தேர்வுகளில் தேர்ச்சி. "டேலி' பயன்பாட்டில் தேர்ச்சி.
முன் அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: Manager-Executive Education

காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிர்வாகவியலில் முதுநிலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 
முன் அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 15ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: இளநிலை உதவியாளர் 
காலியிடங்கள்: 1
கல்வித்தகுதி: ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம்.
முன் அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 5ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.iimtrichy.ac.in/careers   என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு, அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய நகல் சான்றிதழ்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Indian Institute of Management Tiruchirappalli, Pudukkottai Main Road, Chinna Sooriyur Village, Tiruchirappalli -620 024, Tamil Nadu.

மேலும் விவரங்களுக்கு: http://iimtrichy.ac.in/iimtrichyfiles/Recruitment%20notification.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 15-02-2018.
தபால்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி: 19-02-2018.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com