நீ... நான்... நிஜம்! - 21: ஒத்தி போடாதே... உறங்கிச் சாகாதே!

மூதறிஞர் இராஜாஜியைப் பற்றி, மீ.ப. சோமு ஒரு சுவையான தகவல் சொன்னார்.
நீ... நான்... நிஜம்! - 21: ஒத்தி போடாதே... உறங்கிச் சாகாதே!
Updated on
4 min read

மூதறிஞர் இராஜாஜியைப் பற்றி, மீ.ப. சோமு ஒரு சுவையான தகவல் சொன்னார். ஏதேனும் வெளியூர் நிகழ்ச்சிக்குப் போய்விட்டு, சென்னை திரும்பும் 
சமயம், அங்கே தன்னைக் கவனித்துக் கொண்டவர்களுக்கு, நன்றி தெரிவித்து எழுதும் கடிதத்தை, இரயிலிலேயே எழுதிவிடுவாராம் இராஜாஜி. அதைவிட முக்கியம். இரயிலைவிட்டு இறங்கியதும் பிளாட்பாரத்தில் தொங்குகிற தபால் பெட்டியிலும் தம் கைப்படவே போட்டு விடுவாராம். "அப்புறம் எழுதலாம்... பிறகு செய்யலாம்' என்கிற பேச்சுக்கே அவரிடம் இடம் இல்லை. சுடச்சுட... அப்போதே... உடனுக்குடன்... இந்தப் பழக்கம், நம் முந்தைய தலைமுறைகளில் முன்னேறியவர்களின் வெற்றிச் சூத்திரம் என்றே தோன்றுகிறது. 

பரீட்சைக்குப் படிப்பது முதல், பணம் கட்டுவது வரை "அப்புறமா செய்யறேன்.. நாளைக்குச் செஞ்சா என்ன? இப்பவே எதுக்கு' என்பவை, இன்றைய இளைய தலைமுறையில், பலர் உச்சரிக்கும் தோல்வி மந்திரங்கள். அவர்களது சந்தோஷத்திற்கான, சினிமா, பிக்னிக், ஹோட்டல், துணிமணி, செல்ஃபோன் இத்யாதிகளில் பரபரப்பு காட்டும் இளையதலைமுறை, வேலைக்கான விண்ணப்பம், பணம் செலுத்த வேண்டிய பணிகள், வேறு ஆக்கபூர்வமான விஷயங்களில் ஒத்தி போடுவதை, ஒரு கலையாகவே - இல்லை இல்லை ஒரு கடமையாகவே கையாளுகிறார்கள்.

காலையில் எழுவது என்பதே கடுங்காவல் தண்டனை என்று பலரும் கருதுகிறார்கள். "சீக்கிரம் எழுந்திரு' என்கிற அப்பாக்கள் அடக்குமுறை தாதாக்களாக அறியப்படுகிறார்கள். இளமைக் காலத்தில் எங்கள் வீட்டில் எட்டுப்பேர். சீக்கிரம் எழுந்தால் தான் பாத்ரூம் முதல் பல்வேறு வசதிகளில் (காபி உட்பட) முதலிடம் கிடைக்கும். என் அப்பா ஒரு யுக்தியைக் கையாளுவார். வீட்டுக் கூடத்தில் உள்ள விளக்கு மாடத்தில் ஓரணா காசு வைத்து விட்டுப் படுத்துவிடுவார். முதலில் எழுகிற நபருக்கு அந்த ஓரணா சொந்தமாகி விடும். சாம, தான, பேத, தண்டமும் எங்களைக் காலையில் எழுப்ப அப்பாவால் கையாளப்படும். 

ன்று நம் இளசுகள் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலும், செல் போன்களில் செலவாகி விடுகிறார்கள். கட்டுப்படுத்தும் பெற்றோர்களைக் கடும் எதிரிகளாகக் கருதுகிறார்கள். போர்வைக்குள் செல்லிடப் பேசியை ஒளித்து வைத்துக் கொண்டு வாழ்விலும் ஒழிந்து போகிறார்கள். முட்டாள்தனமான, அசடு வழிகிற குறுஞ்செய்தி பரிமாற்றத்தில் கோமாளிகளாகி பின்னர் ஏமாளிகளாகி தூக்கத்தைக் கொலை செய்கிறார்கள். விளைவு... அதிகாலை எழ முடியவில்லை... இளங்கதிரின் கதகதப்பை உணரமுடியவில்லை... விடியலின் சங்கீதத்தைக் கேட்கமுடிவதில்லை... ஓட்டம், நடை, உடற்பயிற்சி என்று உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. தாமதமாக எழுந்து, தட்டழிந்து தயாராகி, பள்ளிக்கும் கல்லூரிக்கும் பறந்தடித்துப் பாய்ந்து, மங்களகரமான மஞ்சள் பஸ்களில் அமங்கலமாகத் தூங்கிய முகத்துடன், கல்விக் கூடங்களுக்குக் கடத்தப்படுகிறார்கள். அட்டகாசமான பிரகாசம், ஆர்வத்துடிப்புடனான சுறுசுறுப்பு, கண்களில் உற்சாகம், பற்களின் மின்னல் இவையெல்லாம் கனவாய், வெறுங்கதையாய் இளைய தலைமுறைக்கு இல்லாமல் போகிறது!
இரவு ஏன் தாமதமாகத் தூங்கப் போகிறார்கள்? தாய் தகப்பன் சீரியலில் தொலைய, இவர்கள் செல்பேசியில் அலைய, தாமதமான சாப்பாடு... தாமச சாப்பாடு தரமற்ற சாப்பாடு.. இரவுக்கேற்காத தகாத உணவு.. புளிப்பான, காரமான, உப்பு கூடிய பழைய குழம்புகள்... நின்ற நிலை சவப்பெட்டிகளில்(ஊழ்ண்க்ஞ்ங்) புளித்துப்போன மாவில் தயாரான இட்லி தோசை... இதையும் தாண்டி தவறான திரவங்கள்... ஆண்டவா... இவர்களை எப்படி மீட்பது! எப்படிக்காப்பது? போதுமான விழிப்புணர்வற்ற பெற்றோர்கள்... விழிக்க விரும்பாத இளசுகள்... இவர்களை எப்படி ரட்சிப்பது? மூடப்பெற்றோர்கள்... முட்டாள் பிள்ளைகள்.
தூக்கம் சுகம் என்கிற சிந்தனை மனித குலத்தையே சவப்பெட்டியில் அறையும் முயற்சி. எழுந்திரு.. சீக்கிரம் எழுந்திரு.. விடியுமுன் எழுந்திரு.. காலை எழுந்தால் போதாது.. அதிகாலை.. ம்ஹீம் அதுவும் போதாது. அதற்கும் முன் எழுந்திரு.. என்றாளே ஆண்டாள். காலை.. ம்ஹும், சிறுகாலை ம்ஹும்... சிற்றம் சிறுகாலை.. அடடா.. எவ்வளவு அற்புதமான பதப் பிரயோகம்.. உஹழ்ப்ஹ் ம்ர்ழ்ய்ண்ய்ஞ் ங்ண்ஞ்ட்ற் ர்' ஸ்ரீப்ர்ஸ்ரீந் என்கிற எருமைத்தனமான சமூத்தை "சிற்றம் சிறுகாலை' என்ற சொல்லால் புரட்டி எடுக்கிறாள் என் ஆண்டாள் பிராட்டி.

இன்று யாரைச் சந்தித்து, எது பெற வேண்டுமானாலும், நம் பிள்ளைகளைச் சுலபத்தில் அசைக்க முடியாது. அசைக்க பெற்றோர் என்ன பாடுபடுகிறார்கள் தெரியுமா? முந்து... சீக்கிரம் போ... முன்கூட்டித் தயாராக இரு... காலை... சிறுகாலை... சிற்றம் சிறுகாலை வந்துன்னைச் சேவித்து... இந்த ஒருவரி புரிந்தால் இளைய தலைமுறை இரண்டே வருடத்தில் இந்தியாவை வல்லரசாக்கி விடமுடியுமே! அதிகாலை சுகம் என்பது என்ன என்றே அறியாத தலைமுறையை ஆண்டவா நீதான் காப்பாற்ற வேண்டும். மகிஷனை மிதித்து மகிஷாசுரமர்த்தினியாகத் துர்கா நின்றாள் என்பதும் மகிஷமுகியை அய்யப்பன் வென்றான் என்பதும் வெறுங் கதையாய், பழங்கதையாய் அல்லவா இந்தச் சமூகம் விளங்கி வைத்திருக்கிறது. தமஸ் என்கிற அசைவின்மை எருமைத்தனம் அல்லவா? துர்கா மனஉறுதி அல்லவா? மனஉறுதியால் தாமச குணத்தை வெல்லத்தானே அய்யப்பன் வழிபாடும் துர்கா வழிபாடும் உருவாயின?

ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒரு சினிமாப் படம் விஷயமாகப் பேச, ஆந்திராவின் புகழாக ஜொலித்த ச.ப. ராமராவ் காருவிடம் நேரம் கேட்டாராம் அயங சரவணன் . ""நாளை நான்கு மணிக்குச் சந்திக்கிறோம்'' என்றார் ச.ப.த. ""மகிழ்ச்சி... மாலை நான்கு மணிக்கு வீட்டிலா? அலுவலகத்திலா? எங்கே வரட்டும்'' என்று அயங சரவணன் விளக்கம் கேட்டிருக்கிறார். ""மாலை நான்கு மணி என்று உங்களிடம் யார் சொன்னது? காலை நான்கு மணிக்கு... வீட்டில் சந்திப்போம்'' என்றார் ச.ப.த. அயங சரவணன் சார் மயங்கி விழாத குறை. சந்திப்புக்கான அடடஞஐசபஙஉசப காலை மணி நான்கு.. பாருங்கள் ஒரு தலைமுறையின் வெற்றி இரகசியம் இதுதான். சரவணன் சார் திருப்பதி கோவிலுக்குப் போகிற மாதிரி அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து குளித்து சபத வீட்டுக்குப் போனால் அடுத்த அதிர்ச்சி.. 

சபத முழு மேக்கப்புடன் ஷூட்டிங் புறப்பட தயாராக வீற்றிருந்தார். இதுதான் சிற்றஞ்சிறுகாலை என்கிற வெற்றிச் சூத்திரம். காலை எழுபவனுக்கு ஏகப்பட்ட நேரம் கைவசம் கிடைக்கும். தெளிவான முடிவுகள் நல்ல உறக்கத்தின் பின் கைவசப்படும். நினைவாற்றல் கூடும். பிரபஞ்ச அமைதியால், தாறுமாறான எண்ண அலைகள் உண்டாகாது. இவை எல்லாம் காலைக் கடவுளின் கெüரவப் பிரசாதங்கள்.

என்னை இந்த நாட்டின் சர்வாதிகாரி ஆக்கினால் (ரொம்பவும் பேராசைதான்) எல்லாப் பள்ளிகளுமே காலை 7.30 முதல் 12.30 வரை நடத்த வேண்டும் என்பேன். மதியம் கலைகள், இசை, விளையாட்டு, உடற்பயிற்சி என்று பிரித்தால் படிப்புடன் மாணவன் தரம் கூடும். பல்விதத் திறன் பெருகும். நெடுந்தொலைவு (30, 40 கி.மீ) பஸ்ஸில் பயணித்துப் படிக்கும் படுபாதகச் செயலை அரசுகளும் சமூக ஆர்வலர்களும் கண்டிப்பதே இல்லை. காலைப் பொழுது பஸ் 
பயணமாக நம் கல்வி முறையில் கொலை செய்யப்படுகிறது. கவலைப்பட எவருமில்லை.

அதிகாலைப் பொழுதின் ஆனந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் வாழ்வில் எதை எதையோ இழக்கிறார்கள். எத்தனை குளிரிலும் எத்தனை ஜுரத்திலும் மகாகவி பாரதி அதிகாலைப் பொழுதை அனுபவிக்க முண்டாசு கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவார். பச்சைக்குள் எத்தனை பச்சை என்கிற மாதிரி காலைக்குள் எத்தனை காலை என்பதை ஆண்டாள் நாச்சியாரிடம் தான் நாம் கேட்க வேண்டும். 

"புள்ளும் சிலம்பின காலை... உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காலை... புள்ளரையன் கோவிலில் வெள்ளை விளிசங்கொலிக்கும் காலை... எருமைச் சிறுவீடு மேய்வான் பரந்த காலை.. அடேயப்பா.. விடியலை அணு அணுவாக அனுபவித்து விடியலுக்கு விடியல் பாடியவள் அந்த வில்லிபுத்தூர் தமிழச்சி அல்லவோ? 
காலை என்று நான் பொழுதை மட்டும் இளமைக்குப் பரிந்துரைக்க வில்லை... அது ஒரு குறியீடு. விடியல், சுறுசுறுப்பு, முந்து திறன், முன்னேற்பாடு, முதலில் நிற்றல், எல்லாமே காலையின் குறியீடுதான். நள்ளிரவில் கூட காலை வரமுடியும் என்கிறேன். வள்ளல் அழகப்பரால் காரைக்குடிக்கு நள்ளிரவில் காலை வந்த கதை வேண்டுமானால் சொல்கிறேன். 

பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு இரவு தாமதமாக தமது இருப்புக்குத் திரும்புகிறார். இந்தியாவை உயர்த்த, வெளிச்சப்படுத்த மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை அமைக்க தாம் விரும்புவதாகவும், அதற்கு ஏகப்பட்ட பொருட் செலவாகும்... ஏகப்பட்ட நிலம் தேவைப்படும்... என்றெல்லாம் தம் கனவுகளை நெசவு செய்து நேரு பேசி விட்டு நள்ளிரவில் தம் ஜாகைக்குத் திரும்புகிறார். வள்ளல் அழகப்பர் அவர் வீட்டு வாசலில் காத்திருக்கிறார். 

"இந்நேரத்தில் என்ன அவசரம்' என்று நேரு பதறியதும் பதினைந்து இலட்சத்திற்கான காசோலையை நீட்டி அத்துடன் தமது 300 ஏக்கர் நிலத்தையும் அளிப்பதாகச் சொல்லி மின் வேதியியல் நிறுவனத்தைப் பின் தங்கிய காரைக்குடியில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் வள்ளல் அழகப்பர். நேரு நெகிழ்ந்து போனார். காரைக்குடிக்கு 
நள்ளிரவில் விடியல் பிறந்தது.

ஒத்தி போடாதே... உறங்கிச் சாகாதே... விடியலை நேசி... நள்ளிரவிலும் விடியல் வரும் என்பது அழகப்பரின் அறிவிப்பு... விழித்துக்கொள் நட்பே... விழித்துக்கொள்... தூங்கித் தொலைக்காதே!

(தொடரும்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com