வாட்ஸ் ஆப்... குரூப் வீடியோ காலிங்!
வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த "குரூப் காலிங்' சேவையை அந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.


வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த "குரூப் காலிங்' சேவையை அந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. தகவல் பரிமாறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வாட்ஸ் ஆப், பின்னர் இணைய வசதி மூலம் தொலைபேசி அழைப்பு, வீடியோ அழைப்பு என பல்வேறு சேவைகளை வழங்கி மக்களின் அபார ஆதரவைப் பெற்றது.
இதன் அடுத்தகட்டமாக, வீடியோ, ஆடியோ தொலைபேசி அழைப்புகளை குரூப்பாக பயன்படுத்தும் புதிய சேவை அளிக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், குரூப் காலிங் சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் சில பயன்பாட்டாளர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 4 பேருடன் வீடியோ காலிங்கில் நாம் உரையாடலாம்.
இதற்கு ஏற்ப நமது ஸ்மார்ட் போன் திரையில் நான்காக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் ஒரு திரையில் தெரிவார்கள். இந்த புதிய வசதியைப் பெற வாடிக்கையாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும். ஆன்ட்ராய்ட் பயன்பாட்டாளர்கள், வாட்ஸ் ஆப் 2.18.145 வெர்ஷனிலும், ஐபோன் பயன்பாட்டாளர்கள் 2.18.52 வெர்ஷனிலும் இந்த சேவையைப் பெறலாம்.
இந்த புதிய சேவை கிடைத்துள்ளதா என்பதை அறிய, வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலிங் செய்யும்போது, "ஆட் பார் டிசிபென்ட்' என்ற புதிய பொத்தான் இருந்தால், இந்த சேவையை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
அந்த புதிய பொத்தானை அழுத்தி, வேறு 3 பேரை சேர்த்து குரூப் வீடியோ கால் செய்யலாம். இந்த புதிய சேவை விரைவில் அனைத்து வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல் வாட்ஸ் ஆப்பில் ஒருவரின் தொலைபேசி எண்ணை சேமிக்காமலேயே சாட் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...