தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மீண்டும் "ஆர்குட்'!

தனி மனிதனின் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் முகநூல் கணக்குகளை மூட வேண்டும் என்று உலகம் முழுவதும் பிரசாரம் எழுந்துள்ளது.

News image
Updated On :1 மே 2018, 11:10 am

அ. சர்ஃப்ராஸ்

தனி மனிதனின் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் முகநூல் கணக்குகளை மூட வேண்டும் என்று உலகம் முழுவதும் பிரசாரம் எழுந்துள்ளது. இந்நிலையில், உலகின் முதல் இணையதள சமூக வலைத்தளமாக கருதப்படும் "ஆர்குட்' மீண்டும் "ஹலோ' என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்கள் மத்தியில் "ஆர்குட்' சேவை பிரபலமாக இருந்தது. இதையடுத்து, மக்களிடையே முகநூல் பிரபலம் அடைந்தது. முகநூலுக்கு இணையாக ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆர்குட் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. 
மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து ஆர்குட்டைத் தொடங்கிய ஆர்குட் புயுகொக்டேன் என்பவர் மீண்டும் "ஹலோ' என்ற பெயரில் புதிய சமூக இணையதளத்தைத் தொடங்கி உள்ளார். 
ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களை மையமாக வைத்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளில் தொடங்கப்பட்ட "ஹலோ' தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் இதற்கான செயலி அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. "ஹலோ' குறித்து ஆர்குட் பயுகொக்டேன் கூறுகையில், ""இன்றைய சமூக வலைதளங்கள் மக்களை இணைக்காமல் தன்னந்தனியாக பிரித்து வைத்துள்ளன. தகவல்களை ஒளிபரப்பத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும். 
"ஹலோ' வெறும் லைக்குகளுக்காக மட்டுமல்ல, "பாசத்துக்காக' உருவாக்கப்பட்டது. இந்தியாவில் இந்த சேவை சோதனை முறையில் தொடங்கிய உடன் சுமார் 35,000 பேர் ஹலோவைப் பயன்படுத்தி உள்ளனர். இந்தியாவுக்கு மீண்டும் "ஹலோ' சொல்வதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். லாபத்துக்காக ஹலோ பயன்பாட்டாளர்களின் தகவல்கள் எப்போதும் விற்கப்படாது'' என உறுதிபடத் தெரிவிக்கிறார் அவர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.