நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 221

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி தெருவில் நிற்கிறார்கள். பெரும்பாலான கடைகள் மூடியிருக்கின்றன. கணேஷ் யாரையோ போனில் அழைக்க முயல டவர் காட்டவில்லை. வாகனங்கள் ஓடவில்லை.

News image
Updated On :17 டிசம்பர் 2019, 9:12 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி தெருவில் நிற்கிறார்கள். பெரும்பாலான கடைகள் மூடியிருக்கின்றன. கணேஷ் யாரையோ போனில் அழைக்க முயல டவர் காட்டவில்லை. வாகனங்கள் ஓடவில்லை.
கணேஷ்: சார் ஹர்த்தால் போலிருக்கே.
புரொபஸர்: சரி நம்ம ஸ்கூட்டரை எடு.
ஜூலி: இருங்க மாமா. யார் கிட்டயாவது விசாரிப்போம். நாம உள்ளே ஹாஸ்பிட்டல் போனப்போ இங்கே நிறைய ஜனங்க இருந்தாங்க. கடைகள் திறந்திருச்சு. அதுக்குள்ள என்னமோ நடந்துருக்கு.
புரொபஸர்: சரி... கேட்போம்.
அந்த வழியாக அப்போது ஒரு முதியவர் திரும்பிப் பார்த்தபடி நடந்து வருகிறார். புரொபஸர் அவரை நோக்கி கையசைக்க திடுக்கிட்டு நிற்கிறார். 
புரொபஸர்: ஹலோ சார், may I have a word with you?
கணேஷ்: இவர் ஏன் ஒரே ஒரு வார்த்தை பேசலாமான்னு கேட்கிறார்? ஒரு வார்த்தையில என்ன தான் கேட்க முடியும்?
ஜூலி: May I have a word with you ன்னா அது அர்த்தமில்லை. உங்க கிட்ட சுருக்கமா சில விசயங்கள் சொல்லலாமான்னு பொருள்.
முதியவர் (புரொபஸரிடம்): சார்... சார்... என்ன என்ன ஆச்சு?
புரொபஸர்: பதறாதீங்க... நாங்க ஒரு சின்ன விசயம் கேட்பதுக்காக வந்தோம். 
முதியவர்: எதுன்னாலும் சீக்கிரமா கேளுங்க.
புரொபஸர்: என்னாச்சு? ஏன் கடைகள் மூடியிருக்கு?
முதியவர்: நீங்க லைவ் பார்க்கலையா?
புரொபஸர்: என்ன லைவ்?
முதியவர்: டிவி லைவ் சார். என்ன ஒண்ணுமே தெரியலையா? Curfiew சார். இப்போ தான் டிவியின் அறிவிச்சாங்க.
கணேஷ்: வழக்கமா 12 மணிக்குத் தானே அறிவிப்பாங்க. இன்னிக்கு சீக்கிரமோ?
முதியவர்: நாம இப்படி வெளியே நின்னு பேசப்படாது. பிடிச்சு உள்ளே போட்டுருவாங்க.
கணேஷ்: அதை விடுங்க. Curfiew என்றால் என்ன? நான் கேள்விப்பட்டதில்லையே. எதையாவது பயன்படுத்தக் கூடாதுன்னு தடையா?
முதியவர்: இல்ல சார், ஊரடங்கு உத்தரவு. மாநிலம் பூரா. போன், இண்டெர்நெட் எல்லாம் கட் பண்ணிட்டாங்க. ஒரு மூணு மணிநேரமா வீட்டுக்குப் போக முடியாம தவிக்கிறேன். (அவர் ஒரு சிகரெட் எடுத்து பொருத்திக் கொண்டு தீக்குச்சி பற்ற வைக்க முயல அது அணைகிறது. அவரிடமிருந்த கடைசி குச்சி அது.)
கணேஷ் தன் லைட்டரை எடுத்து அவருக்கு தீயைக் கொடுக்கிறான்.
புரொபஸர்: சரி நீங்க கிளம்புங்க. நான் உங்களை என் ஸ்கூட்டரில் கொண்டு விடவா?
முதியவர்: இல்ல வேண்டாம். ரோட்டில ராணுவம் நிற்குது. வண்டியில போனா சுட்டுருவாங்க.
புரொபஸர்: Please dont panic sir. Go along. (அவர் கிளம்புகிறார்.)
கணேஷ் அவரிடம்: எங்க போகணும் பெரியவரே?
முதியவர் திரும்பிப் பார்க்காமல்: கீழ்ப்பாக்கம்.
கணேஷ்: அது இங்கே இருந்து very very far. Far far away. நீங்க நடந்தெல்லாம் போக முடியாது.
முதியவர்: எப்படியோ போய்க்கிறேன். இல்ல விழுந்து சாகிறேன். (அவர் புலம்பி கொண்டே 
போகிறார்)
புரொபஸர்: கணேஷ் ரெண்டு தடவை very -ஐப் பயன்படுத்த தேவையில்லை. ஒண்ணு far அல்லது very far. Very very far  எல்லாம் தேவையில்லை. An instance of mother tongue influence.
கணேஷ்: சரிங்க சார். இப்போ நாம எங்கே போகப் போறோம்?
புரொபஸர்: என் வீட்டுக்கு. அது தான் பாதுகாப்பு. இந்த பரபரப்பெல்லாம் அடங்கி விட்ட பிறகு நீ உன் வீட்டுக்கு போ. சரியா?
கணேஷ்: சரி சார். இந்த panicன்னு சொன்னீங்களே, அது என்ன?
புரொபஸர்: தேவையில்லாம திடீர்னு பீதியடையுறது. A sudden, controllable fear or anxiety. It makes people behave in a wild irrational manner.
கணேஷ்: அந்த தாத்தா ஏன் அப்படி பேசினார்னு இப்போ புரியுது.
புரொபஸர்: நீ என்ன தினமும் சிகரெட் புடிக்கிறியோ? ரெடியா லைட்டர் வச்சிருக்கே?
கணேஷ்: இல்ல சார். நான் ஒரு teetotaller. சும்மா ஒரு பந்தாவுக்காக லைட்டர் வச்சிருக்கேன். என்னைப் போய்...
புரொபஸர்: அது டீடோட்டலர் இல்ல. டீடோட்டலர் என்பவர் மது உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்தாதவர். ஆனால் புகைபிடிக்காதவர் non-smoker. அல்லது abstrainer. 
கணேஷ்: ஓகே சார்.
புரொபஸர்: நீ கொடுத்தியே நெருப்பு அதுக்கும் curfiew-வுக்கும் ஒரு சம்பந்தமுண்டு. அதே போல இந்த Panic என்ற சொல்லுக்கும் ஒரு தெய்வத்துக்கும் தொடர்பிருக்கிறது.
கணேஷ்: சொல்லுங்க சார்.
(இனியும் பேசுவோம்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.