வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 237
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்கவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாக சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாக பதிலளித்தால் அவன் தலை தப்பும். அப்படி வீரபரகேசரி கேட்கும் கேள்விகளில் ஒன்று pandemic என்றால் என்ன என்பது?
கணேஷ்: டஹய்க்ங்ம்ண்ஸ்ரீ என்றால் ... ஒரு வியாதி. சரி தானா?
வீரபரகேசரி: அமைச்சரே...
அமைச்சர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்: ....
வீரபரகேசரி: drat, he is dead to the world.
(வீரர்கள் தோன்றுகிறார்கள்)
வீரர்களே, இந்த அமைச்சரைப் பிடித்து முதலைகள் நிறைந்த அகழியில் வீசு.
அமைச்சர் விழித்துக்கொண்டு: ஐயோ மன்னா...
வீரபரகேசரி: அவரை முதலைகள் கடித்துக் கொண்டிருக்கும் போது காப்பாற்றி...
அமைச்சர்: மன்னா
வீரபரகேசரி: கொதிக்கும் எண்ணெய் கொப்பறையில் போடு. அவர் அங்கே சற்றே பொரிந்ததும் காப்பாற்றி...
அமைச்சர்: மன்னா வேண்டாம் என்னை இனி நீங்க காப்பாற்றவே வேண்டாம்.
வீரபரகேசரி: ஒரு மன்னனாக என் பொறுப்பு மக்களைக் காப்பாற்றுவது
அல்லவா?
அமைச்சர்: மன்னா, என்னை தயை கூர்ந்து மன்னியும். Henceforth, I shall be as alert as a bird in springtime.
வீரபரகேசரி: Else I will be as angry as a wasp.
ஜூலி: and he will be as afraid
as a grasshopper.
கணேஷ்: அது ஏன் springtime ஜூலி?
ஜூலி: springtime என்றால் வசந்தகாலம். ஐரோப்பாவில் ஒரு வருடத்தை வசந்தம், கோடை, இலையுதிர்காலம், குளிர்காலம் என பிரிப்பார்கள்.
கணேஷ்: சரி
ஜூலி: வசந்தம் என்றால் springtime. அந்த பெயர் எப்படி வசந்தத்துக்கு வந்திருக்கும் என நீ எப்போதாவது யோசித்ததுண்டா?
கணேஷ்: ஆமாம், பொதுவா ஸ்பிரிங் என்றால் சிறிய எந்திரங்களில் தான் இருக்கும். யாராவது துள்ளினால் ஸ்ப்ரிங் போல துள்ளுகிறான் என்பார்கள். வசந்தத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என குழம்பியிருக்கிறேன்.
ஜூலி: ஆமாம், வசந்தத்துக்கும் எந்திரத்துக்குள் இருக்கும் ஸ்ப்ரிங்குக்கும் ஒரு தொடர்பு நிஜமாவே உள்ளது. நம்ம ஊர் போல அல்ல, ஐரோப்பாவில் குளிர்காலத்தில் மண் உறைந்து போய் விடும். வெயிலே இருக்காதா, உயிர்கள் எல்லாம் உறங்கப்போய் விடும். புல், பூண்டு, தாவரங்கள் ஒன்று வளர்ச்சியை நிறுத்தும் அல்லது காய்ந்து போகும். ஆனால் அடுத்து வசந்தம் வந்ததும் இறந்து கிடந்த இயற்கை உயிர்கொண்டு துள்ளி எழும். பூமியில் இருந்து புல் பூண்டு, தாவரங்கள், கொடிகள் அனைத்தும் சட்டென தோன்றி பூக்கும், காய்க்கும். அத்தோடு பூச்சிகள், பறவைகள் அதிகமாய் தோன்றும். எங்கும் பறக்கும். உலகமே உயிர்பெற்று அழகாக மாறும். இப்படி வசந்தத்தின் போது உயிரினங்கள் தூக்கத்தில் இருந்து துள்ளி எழுவதால் தான் அந்த காலத்துக்கு spring எனப் பெயர் வந்தது. அதுவும் இங்கிலாந்தில் பதினான்காம் நூற்றாண்டில் தான் springing time என இந்த காலத்தை அழைக்கத் தொடங்கினார்கள். அதற்கு முன் வசந்தத்தின் பெயர் ஆங்கிலத்தில் Lent. பதினைந்தாம் நூற்றாண்டில் springing time என்பது springtime என சுருங்கியது. பதினாறாம் நூற்றாண்டில் இது மேலும் சுருங்கி spring ஆனது.
கணேஷ்: சுவாரஸ்யம்.
ஜூலி: இப்போது புரிந்திருக்குமே,
பறவைகள் வசந்தத்தின் போது கூடுதல் அலர்ட்டாக இருக்கும். ஏனென்றால் அப்போது தான் பூச்சிகள் அதிகமாய் தோன்றி அவற்றுக்கு இரை கிடைக்கும். நம் அமைச்சரும் அந்த பறவையைப் போல மன்னரின் ஆணைக்காக அலர்ட்டாக இனி இருப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். அவருக்கு மாட்டின பூச்சி தான் நீ.
கணேஷ்: ஐயோ
வீரபரகேசரி: சபாஷ் ஜூலி, நல்ல
விளக்கம். சரி அமைச்சரே!
அமைச்சர்: மன்னர் மன்னா, உத்தரவு!
வீரபரகேசரி: இருமய்யா, இந்த பையனை நம்முடைய அரண்மனை ஜூவில் வாழும் பசித்த சிங்கத்தின் கூண்டுக்குள் தள்ளி விடு.
அமைச்சர்: மன்னா, இப்போ தான் சிங்கத்துக்கு மீந்த பழைய சோற்றைக் கொட்டினேன். சப்புகொட்டி சாப்பிட்டது. இனி அதோட லஞ்ச் டைம் நாளைக்குத் தான்.
கணேஷ்: மன்னா, நான் சொல்லி
விடுகிறேன். டஹய்க்ங்ம்ண்ஸ்ரீ என்றால் வேகமாய் ஒரு நாடுமுழுக்க பரவுகிற ஒரு வியாதி.
வீரபரகேசரி: சரியான பதில், ஆனால் ஒரு பிரச்னை...
கணேஷ்: ஐயோ!
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...