நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்​கி​லீஷ் பேச​லாம் - 239

​ஊ​ர​டங்கு உத்​த​ரவு பிர​க​டனம் பண்ணப்​பட்ட நிலை​யில் புரொபஸர், கணேஷ் மற்​றும் ஜூலி புரொ​ப​ஸ​ரின் நண்​ப​ரான வீர​ப​ர​கே​ச​ரி​யின் வீட்டுக்​குச் சென்றி​ருக்​கி​றார்​கள்.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 1:25 pm

ஆர்.அபி​லாஷ்

​ஊ​ர​டங்கு உத்​த​ரவு பிர​க​டனம் பண்ணப்​பட்ட நிலை​யில் புரொபஸர், கணேஷ் மற்​றும் ஜூலி புரொ​ப​ஸ​ரின் நண்​ப​ரான வீர​ப​ர​கே​ச​ரி​யின் வீட்டுக்​குச் சென்றி​ருக்​கி​றார்​கள். வீர​ப​ர​கே​சரி தன்னை சோழப்​பே​ர​ர​சின் சக்​க​வர்த்​தி​யாக நம்பி தனது சேவ​கர்​க​ளின் உத​வி​யு​டன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வரு​கி​ற​வர். ஒரு சின்ன விச​யத்​துக்​காக வீர​ப​ர​கே​சரி கணே​ஷி​டம் கோபித்​துக் கொள்​கி​றார். அவர் அவ​னுக்கு மரண தண்​டனை விதிப்​ப​தாக, அவன் தலை உடனே கொய்​யப்​ப​டு​மென கட்டளை பிறப்​பிக்​கி​றார். கணேஷ் மன்​னிப்​புக் கோர, அவர் அவ​னி​டம் பத்து கேள்​வி​கள் கேட்கப் போவ​தா​கச் சொல்​கி​றார். அதில் ஒன்​ப​துக்கு சரி​யாக பதி​ல​ளித்​தால் அவன் தலை தப்​பும். இப்​படி வீர​ப​ர​கே​சரி கேள்​வி​கள் எழுப்​பும்​போது அவற்​றில் ஒன்​று​ p​andemi​c ​மற்​றும்​ epidemi​c ஸ்ரீ ​ஆ​கிய சொற்​க​ளுக்கு இடை​யி​லான வித்​தி​யா​சம் என்​ன​வெ​னக் கேட்கி​றார். சரி​யான பதிலை கணேஷ் அளிக்​கி​றான். இப்​போது வீர​ப​ர​கே​சரி இதை சார்ந்து ஓர் உப​

கேள்வி உண்டு என்​கி​றார். அது என்​ன​வாக இருக்​கும்?
வீ​ர​ப​ர​கே​சரி: ​அ​மைச்​சரே!
​அ​மைச்​சர்:​ மன்​னர் மன்னா... எல்​லாம் தயார்.
​வீ​ர​ப​ர​கே​ச​ரி:​ என்ன தயார்?
​அ​மைச்​சர்:​ நீங்க அடுத்த வாரம் வெளி​யிட வேண்​டிய காணொ​ளிக்​கான முன்​ன​றி​விப்​பான ட்வீட்டுக்​கான டிரை​ல​ராக ஒரு செய்​தி​யைக் கொடுத்து விட்டேன். இப்போ உல​கமே நீங்க என்ன சொல்​லப் போறீங்​கன்னு பர​ப​ரப்பா இருக்​காங்க.
​வீ​ர​ப​ர​கே​ச​ரி:​ curiosity kills the cat, but it saves the king.

​க​ணேஷ்: ​​curiosity என்​றால் ஒரு துறு​து​றுப்பு, ஒரு அறி​வார்​வம். தேவை​யில்​லாத விச​யங்​க​ளை​யும் கண்​ட​றி​கிற விருப்​பம். தானே? 
​வீ​ர​ப​ர​கே​ச​ரி:​ ஆம் தம்பி. எம் நாட்டு மக்​கள் சதா எம்​மைப் பற்​றியே யோசித்​த​வாறு ஸ்ரீன்ழ்ண்ர்ன்ள்​ ஆக இருப்​பார்​கள். ஆகை​யாலே செய்​தித்​தாள்​க​ளின் முதல் பக்​கத்​தில் மன்​ன​ரா​கிய எமது படம் மற்​றும் நற்​செய்​தி​கள் மட்டுமே வர வேண்​டும்; டி.வி சேனல் விவா​தங்​க​ளில் எல்லாரும் எம்​மையே புகழ வேண்​டும் என ஆணை பிறப்​பித்​தி​ருக்​கி​றேன். எல்​லாம் மக்​க​ளுக்​காக. ​பு​ரொ​ப​ஸர்: ​க​ணேஷ் உனக்கு ஒன்று தெரி​யுமா, இந்த prover​b அதா​வது பழ​மொழி பதி​னா​றாம் நூற்​றாண்​டில் இருந்தே புழக்​கத்​தில் இருக்​கி​றது. ஷேக்ஸ்​பி​ய​ரின் நாட​கங்​க​ளில் கூட வந்​துள்​ளது. ஆனால் அப்​போது curiosity kills ந்ண்ப்ப்ள் அல்​ல... 
​க​ணேஷ்: ​பி​ற​கு? 
​பு​ரொ​ப​ஸர்: ​C​are kills the cat என அப்​ப​ழ​மொழி இருந்​தது. கடந்த ஒரு நூற்​றாண்​டில் தான் இன்ழ்ண்ர்ள்ண்ற்ஹ் என மாறி விட்ட​து. 
​க​ணேஷ்:​ c​are என்​றால்? 
பு​ரொ​ப​ஸர்:​ கவலை, மிகை​யான அக்​கறை என்ற பொரு​ளில் c​are வரு​கி​றது. சதா எதை​யா​வது நினைத்து கவ​லை​யில் ஆழ்ந்​தது போல இருப்​ப​து. 
​க​ணேஷ்: ​பூனை கவ​லை​யெல்​லாம் படு​மா? 
​ஜுலி: ​எ​னக்கு ஒரு பூனைத்​தோழி இருந்​தாள். அதற்கு சதா கவலை மட்டுமே.
​க​ணேஷ்:​ எதற்​காக?
​ஜூ​லி:​ அதற்கு தன்​னையே தனக்​குப் பிடிக்​க​வில்லை என்று நினைத்து கவலை.
​க​ணேஷ்:​ ஓ! அப்​பு​றம்?
​ஜூ​லி:​ நான் போய் கவ​லைப்
​ப​டா​தேம்மா, எனக்கு உன்​னைப் பிடிச்​சிருக்கு. cheer up என்று சொன்​னேன். அதுக்கு அது போடான்​னுட்​டுது. இப்​ப​டித்​தான் c​are kills the cat என்​கி​றது சரி​தான்னு நான் புரிஞ்​சிக்​கிட்​டேன். 
​க​ணேஷ்: ​ரைட்​டு 
​வீ​ர​ப​ர​கே​ச​ரி:​ இருக்​கட்​டும், நான் ஒரு உப​கேள்​வியை கேட்க​ணும். வீரர்​களே! இவன் கழுத்​தைக் கொய்​வ​தற்கு வாளை கூர்​தீட்டி வையுங்​கள். கொய்த தலையை மிதிக்க யானை​யைத் தயா​ராக 
நிறுத்​துங்​கள். 
​ஜூலி: ​என்​னது வெட்டின தலையை தனியா மிதிக்​கவா? Gross
​க​ணேஷ்:​ கிராஸ் என்​றால்? 
​ஜூ​லி:​ Unple​as​ant, disgusting எனும் பொருள்​கள் வரும். அதா​வது அரு​வ​ருப்​பான, கேவ​ல​மான என அர்த்​தம். 
​வீ​ர​ப​ர​கே​சரி: ம்க்க்​கும். 
​க​ணேஷ்: ​இல்லை மன்னா, நான் அர்த்​தம் தெரிஞ்சு இல்ல... தெரி​யா​மலே சொல்​லிட்​டேன்.  
​வீ​ர​ப​ர​கே​சரி: ​அந்த தலையை மிதித்த பிறகு திமிங்​க​லங்​கள் துள்​ளும் அக​ழி​யில் வீச​வும். 
​க​ணேஷ்: ​ஐயோ... 
​வீ​ர​ப​ர​கே​சரி: ​சரி, பதில் சொல்லு. Epidemiology என்​றால் என்​ன? 
​க​ணேஷ்:​ மன்னா இது p​andemic, endemi​c உடன் தொடர்​பு​டைய சொல்​லா? 
​வீ​ர​ப​ர​கே​சரி: ம்ம்ம்
​க​ணேஷ்:​ இது இந்த வியா​தி​களை ஆய்வு செய்​யும் ஒரு துறை​யைக் குறிக்​கும் சொல்​லா?
​வீ​ர​ப​ர​கே​ச​ரி:​ என்ன நீ நான் கேள்வி கேட்டால் பதி​லுக்கு நீயும் கேள்வி கேட்குறே? பதில் சொல்​றியா இல்ல ...
​க​ணேஷ்:​ ஐயோ மன்னா... அது தான் என் பதில். 
​வீ​ர​ப​ர​கே​சரி: ​ச​ரி​யான பதில். ஆனால் துல்​லி​ய​மான பதில் அல்ல. ஒரு நோய் மக்​க​ளி​டையே எப்​ப​டிப் பர​வு​கி​றது, எந்த பாணி​யில் பர​வு​கி​றது என்​றெல்​லாம் ஆய்​வது தான் epidemiology.
​க​ணேஷ்: ​சரி மன்னா.... (தனக்​குள்) தப்​பிச்​சுட்​டோம்.
​வீ​ர​ப​ர​கே​சரி: ​ஆ​னால் கேள்வி இன்​னும் முடி​யல. 
​க​ணேஷ்: ​ஐயோ...

(​இ​னி​யும் பேசு​வோ​ம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.