உலகளாவிய மருந்து வர்த்தகம் 2018 -ஆம் ஆண்டில் மிக உயர்ந்த உச்சத்தை எட்டியது. இது வியக்கத்தக்கவகையில் 1.11 டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 85 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது 2023 -ஆம் ஆண்டில் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ 115 லட்சம் கோடி) வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் உலக மருந்துச் சந்தையில், மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு
(R&D) செலவுகள், பெரிய அளவிலான சந்தைப்படுத்தல் செலவுகள் மற்றும் மருந்துகளைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் உத்திகள் போன்றவை பன்னாட்டு மருந்து நிறுவனங்களால் போட்டி மனப்பான்மையோடு தீவிரமாகச் செயல்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டமான ஆங்கில நவீன மருத்துவ வர்த்தகச்சந்தையை, குறைந்த செலவில் எளிமையான சிகிச்சைஅளிக்கும் இந்திய மருத்துவம் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் போன்றவை
எவ்வாறு எதிர்நோக்கி சமாளிக்க முடியும்?
நவீன மருந்து ஆராய்ச்சி R&D திட்டங்களில் உலக மருந்து நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் US$ 150 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ 11.5 லட்சம் கோடி) முதலீடுசெய்கின்றன. உலகளாவிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் புதுமையான மற்றும் அதிநவீன சிகிச்சைகளை அறிமுகப்படுத்த தீவிரமாகச் செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான மூலக்கூறு சேர்மங்களில், மிகச் சில கலவைகள் மட்டுமே மருத்துவ ஆய்வுகளைக் கடந்து, நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தைமேம்படுத்துவதற்கும், மருந்து ஆராய்ச்சி ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெறுகின்றன.
உலகளாவிய மருந்துத் துறையின் அமெரிக்காவின் உள்நாட்டு சந்தைப் பங்கு $341 பில்லியனுக்கும் (ரூ 26 லட்சம் கோடி) அதிகமாகும். இது உலகின் மிக உயர்ந்த சந்தையாகும்.
இந்தியாவின் மருந்துத்துறையின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதியின் சந்தை மதிப்பு $38 பில்லியன் டாலர் (ரூ 2.9 லட்சம் கோடியாகும்).
உலக அளவில் மக்களின் மருத்துவ செலவினங்களின் பட்டியலில் கேன்சர் புற்றுநோயியல் (Oncology) முதலிடத்தில் உள்ளது. 2018- ஆம் ஆண்டில் புற்றுநோயியல் மருத்துவத்திற்கான உலகளாவிய செலவு 123.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 9.49 லட்சம் கோடி) மற்றும் 2024- ஆம் ஆண்டில் 236.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 18.13 லட்சம் கோடி) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; நீரிழிவு எதிர்ப்பு (anti-diabetics) மருந்து பிரிவில், உலகளாவிய செலவினம் 2018 - இல் 48.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (ரூ 3.72 லட்சம் கோடி), மேலும் 2024 -ஆம் ஆண்டில் 57.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 4.41 லட்சம் கோடி) வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; வாத நோய் மருந்துப் பிரிவில் (anti-rheumatics), இது 58.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 4.49லட்சம் கோடி).
மருத்துவ ஆராய்ச்சிக்காக பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டு வருவாயில் 12% -க்கும் அதிகமாக செலவிடுகின்றன. அஸ்ட்ரா ஜெனெகாவின் (Astra Zeneca)-வின்வருடாந்திர R&D செலவு அதன் வருவாய் பங்கில் 25% -க்கும்அதிகமாகும். பிளாக்பஸ்டர் மருந்துகள் அதாவது ஆண்டு விற்பனை $1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (ரூ 7663 கோடி) அதிகமாக இருக்கின்றன. இந்த பிளாக்பஸ்டர் மருந்துகள் பொதுவாக அதிக கொழுப்பு,நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் போன்ற பொதுவான மருத்துவப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.
வார்னர்-லம்பேர்ட், ஓர் அமெரிக்க மருந்து நிறுவனம், முதலில் அதிக கொழுப்புக்கு சிகிச்சையளிக்க லிப்பிட்டரை (Lipitor) உருவாக்கியது. இது 1997- இல் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டது. இருதய நோய்களால் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு இந்த மருந்து முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அசாதாரண லிப்பிட் அளவுகளுக்கு (dyslipidemia) சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான, அமெரிக்காவின் பன்னாட்டு மருந்து நிறுவனமான ஃபைசர் (Pfizer) 2000 -ஆம் ஆண்டில் வார்னர்-லம்பேர்ட்டை வாங்கியது. ஏறக்குறைய பத்தாண்டு காலத்திற்கு, கொழுப்பைக் குறைக்கும் மருந்து லிப்பிட்டர் ஃபைசரின் சிறந்த பிளாக்பஸ்டர்களில் ஒன்றாகும். இது 2006- ஆம் ஆண்டில் ஏறக்குறைய 13 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ 99,600 கோடி ) வருவாய் ஈட்டியது.
2011-இல் காப்புரிமை காலாவதியான பின்பும், லிப்பிட்டர் 2016 -ஆம் ஆண்டில் ஃபைசருக்கான விற்பனையில் $1.76 பில்லியனை (ரூ13,400) ஈட்டியது. 1997-இல் லிப்பிட்டர் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து 2018 வரை கிட்டத்தட்ட $165 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(ரூ 12.60 லட்சம் கோடி) வருமானம் ஈட்டியது. 2019- ஆம் ஆண்டில் ஃபைசரின் ஆண்டுவருவாய் $51.75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 3.97 லட்சம் கோடி), 2019 -இல் நிகர வருமானம் $16.27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 1.25 லட்சம் கோடி). அதாவது ஒரு கம்பெனியின் நிகர வருமானம், தமிழக அரசின் ஒரு வருட பட்ஜெட் தொகைக்குச் சமமாக இருக்கிறது. இது தான் ஆராய்ச்சியின் சக்தி, ஆராய்ச்சியின் பரிமாணம். இதை
உணர்கிற அரசு உச்சம் தொடும், உணராத அரசு, மற்ற நாடுகளின் பின் செல்லும்.
முடக்கு வாதம், சொரியாடிக் ஆர்த்ரிடிஸ், அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி, கிரோன் நோய் போன்ற பல நோய்களால் ஏற்படும் அழற்சியை எதிர்க்க அடலைமுமாப் (Adalimumab)என்ற மருந்து ஹுமிரா (Humira) என்ற பெயரில் பரிந்துரைக்கப்படுகிறது. ஹுமிரா 2017- ஆம் ஆண்டில் அப்விக்கு (Abbvie) என்ற நிறுவனத்திற்கு 16 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (ரூ 1.25 லட்சம் கோடி) அதிகமான விற்பனையை ஈட்டியது. அறிமுகப்படுத்தப்பட்ட நாள் தொடங்கி, ஹுமிரா 2018 -ஆம் ஆண்டு வரை $136 பில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ 10.42 லட்சம் கோடி) ஈட்டியது.
சுவிஸ் மருந்து நிறுவனமான ரோச், (Roche) 2019 -ஆம் ஆண்டில் உலகின் 2 -ஆவது பெரிய மருந்து நிறுவனமாகும். ரோச்சின் ரிட்டுக்சன் (Roche’s RITUXAN) என்பது ஒருவகை ஆன்டிபாடி சிகிச்சையாகும், இது தனியாக அல்லது கீமோதெரபி மூலம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் செல்களை அழிப்பது மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்க உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரிட்டுக்சன் செயல்படுவதாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல, RITUXAN உங்கள் உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு கூட தீங்கு விளைவிக்கும். 1997 -ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ரிட்டுக்சன் (RITUXAN) 2018 வரை மொத்த விற்பனை சுமார் $111 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ 8.50 லட்சம் கோடி) ஈட்டியுள்ளது. $45.6 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ 3.49 லட்சம் கோடி) வருடாந்திர வருவாயுடன், முதல் 3 தயாரிப்புகளின் வருவாய் ரோச்சின் மொத்த வருவாயில் 40% -க்கும் அதிகமாகப் பங்களித்தது.
ஜான்டாக் (Zantac) என்ற பெயரில் விற்கப்படும் கிளாக்சோ வெல்கமின் பிளாக்பஸ்டர் ஆன்டிஅல்செரண்ட் (antiulcerant), ரானிடிடைன் (Ranitidine), 2018 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மொத்தம் சுமார் $97 பில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 7.43 லட்சம் கோடி ) ஈட்டியது. நவீன மருத்துவ ஆராய்ச்சிக்கு வித்திட்ட நாடுகளின், நிறுவனங்களது வருட வருமானம், இன்றைக்கு ஒரு சில நவீன மருந்துகளின் மூலம் கிடைக்கும் வருட வருமானம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வருட பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு பிற நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பதால்தான்.
ஆராய்ச்சிதான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உயிர் நாடி. ஆராய்ச்சிக்கு எந்த நாடு அதிக முதலீடுகள் செய்கிறதோ, அது அந்த நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விதையாகும். ஆராய்ச்சியின் தாக்கம் உற்பத்தித்திறன், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு மற்றும் மூலதன உருவாக்கம் ஆகியவற்றில் உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஆராய்ச்சிக்கு பல ஆண்டுகளாக இந்தியா செய்யும் முதலீடு வெறும் 0.6% முதல் 0.7% மட்டுமே. ஆனால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் அமெரிக்கா (2.8), சீனா (2.1), இஸ்ரேல் (4.3) மற்றும் கொரியா (4.2) போன்ற நாடுகள் ஆராய்ச்சிக்கு அடைப்பிற்குள் குறிப்பிட்ட சதவிகிதம் முதலீடு செய்கின்றன. இந்தியா GDP-யில் 3 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தப்படாமல் நாம் நமது பொருளாதாரத்தை உயர்த்த வழியில்லை. நோய்களைப் பரிசோதனை செய்யவும், நோய்தீர்க்கும் மருந்துகளைக் கண்டுபிடிக்கவும் வழியில்லை என்பதை தான் கரோனா நமக்கு உணர்த்தியிருக்கிறது.
கரோனா நோய்த் தொற்றை குணப்படுத்த நவீன மருந்துகள் இல்லாத நிலையில், ஹைட்ராக்சி குளோரா குயின் மருந்துகளை நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளாகவும், நோய் தீர்ப்பிற்கு மற்ற ஆன்டி வைரல் மருந்துகளோடும், அஸித்ரோ மைசின் மருந்துகளோடும் சேர்ந்து உபயோகப்படுத்துவதற்கு 118 உலக நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வாங்கி உபயோகப்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட கூட்டு மருந்துகளின் சிகிச்சைகளின் மூலமும், கரோனா நோயால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்தவர்களின் இரத்த பிளாஸ்மாவில் இருந்து எடுக்கப்பட்ட ஆன்டிபாடிஸ் சிகிச்சையின் மூலமும், இயற்கையாகவே அவர்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் மூலமும் 22, ஏப்ரல் 2020- இல் வரை 25.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.79 லட்சம் பேர் உயிரிழந்து, 7 லட்சம் பேர் கரோனா நோயை வென்று மீண்டெழுந்திருக்கிறார்கள்.
நமது நாட்டில் ஏற்கெனவே மூட்டு வலிக்காக கோடிக்கணக்கானவர்கள், ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்தை எடுத்து வரும் நிலையில், அந்த மருந்தை நோய்எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதற்காக மருந்தை எடுத்துக்கொள்ளும் தகுதியான வேலைக்கு செல்லும் மக்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி கொடுங்கள் என்று அறிவார்ந்த மருத்துவர்கள் சொல்லும் போது, அதை எடுத்தால் பக்கவிளைவுகள் வரும் என்று சில பேர் தொடர்ந்து பேசி, மக்களுக்கு மருத்துவரின் ஆலோசனைபடி அந்த மருந்துகளைக் கொடுக்கத் தடையாக இருக்கிறார்கள். உலகம் உபயோகப்படுத்துகிறது; இந்தியா ஏற்றுமதி செய்கிறது; இந்தியாவில் உபயோகப்படுத்த மட்டும் தடை ஏன்?
ஐஇஙத கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் எடுக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. டாக்டர்கள் எடுக்கலாம். ஆனால் மருந்து எடுக்க தகுதியுடைய நபர்கள் எடுக்க இவ்வளவு எதிர்ப்பு ஏன்? ஏனென்றால், ஏற்றுமதி செய்தால் ஒரு மாத்திரை ரூ 70 -க்கும் மேல் விற்பனை செய்யலாம்; இந்தியாவில் விநியோகம் செய்தால் குறைந்த பட்ச விலை ரூ. 7. அதிலும் ரூ. 2 க்கு குறைவாக உற்பத்தி செய்து கொடுங்கள் என்று மத்திய அரசு நிர்ணயம் செய்ததால், மூலப்பொருள் இல்லை என்று தேவையானதை ஏற்றுமதி செய்து விட்டு மருந்து கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள் என்று செய்தி வருகிறது. இந்த நிலையில் ஏற்றுமதி செய்வார்களா?
அல்லது நமது மக்களுக்குக் கொடுப்பார்களா? இது வர்த்தகம் தொடர்பான போட்டியின் விளைவே தவிர வேறொன்றும் இல்லை.
ஹைட்ராக்சி குளோரா குயின் மருந்துகள் அஸித்ரோமைசினுடன் எடுத்த நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவிக்கு செல்லாமல் தடுக்கவில்லை என்று பிரான்சு நாட்டிலும், அமெரிக்காவில் முதியோர்களுக்கான US Veterans Health Administration -இலும் நடைபெற்ற 100 முதியோர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முடிவில் சொல்லியிருக்கிறார்கள். எந்த பிற நோய்கள் அவர்கள் இறப்பிற்கு காரணமாகியிருக்கிறது என்ற முடிவுகள் வந்தால் தான் தெரியும். இந்த நிலையில் தான் உலக சுகாதார நிறுவனம், 24 நாடுகளோடு இணைந்து கரோனா சிகிச்சைக்கான மருந்துகளைக் கண்டறிவதற்கு ஏற்கெனவே இருக்கும் மற்ற மருந்துகளில் இருந்து நோய் தீர்க்கும் சிகிச்சைக்கு ஏற்ற கூட்டு மருந்தைக் கண்டறிய “"சாலிடாரிட்டி டிரைவ்'” என்ற திட்டத்தை அறிவித்து, இம்யுனோ குளோபுலின், ஹைட்ராக்சி குளோரோ குயின், அஸித்ரோ மைசின், மற்ற ஆன்டி வைரல் மருந்துகள், சீனாவின் பாராம்பரிய மருந்துகள் உட்பட 20 மருந்துகள் மூலம் கரோனா வால் பாதிக்கப்பட்ட 2500 நோயாளிகளை வைத்து நடைபெறும் பரிசோதனை முடிவுகள் வந்த பின்பு தான் இதில் எந்த மருந்துகள் நோய் தீர்ப்பில் (Efficacy) சிறப்பாகச் செயல்படும் என்று தெரியும். உலகம் முழுவதும் இந்த நடைமுறையில் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது வரை ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்து சரியில்லை என்று குறைந்த பட்ச நோயாளிகளை வைத்து பரிசோதனை செய்து வரும் அரைகுறை முடிவுகளை வைத்து எந்த முடிவும் செய்ய முடியாது.
30 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஊரடங்கில் வெறுமனே தனிமைப்பட்டுத்தப்பட்டு இருக்கும் நிலையில் நோய் எதிர்ப்பு மருந்தும் கொடுக்க முடியாது; பரிசோதனையும் செய்ய முடியாது என்றால் இந்த நோயில் இருந்து எப்படி மீண்டெழுவது? தமிழ்நாட்டில் 126 - க்கும் மேற்பட்ட தப-டஇத/வ்டஇத ஆய்வகங்கள் அறிவியல் பல்கலைக்கழகங்களில், ஆராய்ச்சி நிலையங்களில் இருந்தும், மாதம் 6.9 லட்சம் பேருக்கு பரிசோதனை பண்ண வழியிருந்தும் பண்ண முடியவில்லை. ஏன்? வீட்டில் சும்மா இருந்துவிட்டு மே 3 -ஆம் தேதி வெளியே வந்தால் கரோனா தொற்று நம்மை தீண்டாதா என்ற கேள்வி வருமா, வராதா? சரி நவீன மருந்துகள் பக்கவிளைவுகள் கொண்டது மக்களுக்கு கொடுக்க முடியாது என்று அவர்களே ஒத்துக் கொண்ட பின்பு, அவமநஏ மருந்துகளை கொடுத்தாலாவது, இந்திய மருந்துகளை வைத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியையாவது உயர்த்தி ஊரடங்கு முடிந்தவுடன் தைரியமாக வேலைக்கு செல்லலாமல்லவா? செய்வார்களா?
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@live.com
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


