வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 240
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்
படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். இப்படி வீரபரகேசரி கேள்விகள் எழுப்பும்போது அவற்றில் ஒன்று pandemic மற்றும் epidemic ஆகிய சொற்களைக் குறித்த கேள்விகளுக்கான சில உபகேள்விகளைக் கேட்கிறார்.
வீரபரகேசரி: அடுத்த உபகேள்வி: sporadic என ஒரு நோயைக் குறிப்பிட்டால் அதன் பொருள் என்ன?
கணேஷ்: எனக்கு என்னவோ மெடிக்கல் என்டரன்ஸூக்கு உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்குது.
வீரபரகேசரி: ஒன்று சொல்கிறேன். பதில் தெரியுமென்றால் சொல். கேலி, கிண்டல் என உழற்றுபவர்களை என்ன செய்வோம் எனத் தெரியுமா?
கணேஷ்: மன்னவா நான் தெரியாமல் சொல்லி விட்டேன். பதில் சொல்ல முயல்கிறேன். Sporadic என்றால் irregular, scattered என அர்த்தம். இதுவும் வியாதி பற்றின கேள்வியாகத் தான் இருக்கும். அதனால... தொடர்ச்சியற்று அங்கங்கே அதிகமாய்த் தோன்றும் ஒரு வியாதி தான் sporadic disease சரியா?
வீரபரகேசரி: Perfect
கணேஷ்: நன்றி மன்னா...
வீரபரகேசரி: அடுத்த உபகேள்வி: cluster என்றால் என்ன?
கணேஷ்: இப்ன்ள்ற்ங்ழ் என்றால் கூட்டம். வியாதி கூட்டமாக வருமா என்ன? குழம்புதே. நான் lifeline மீண்டும் எடுத்துக்கலாமா?
வீரபரகேசரி: ம்ம்ம்...
கணேஷ் (புரொபஸரிடம்): சார்... நான் சொல்றது சரியா?
புரொபஸர்: கிட்டத்தட்ட... ஒரு வியாதி ஒரு குறிப்பிட்ட நேரத்தில், இடத்தில் அதிகமாய் தோன்றுவது தான் cluster.
கணேஷ்: புரியல சார்...
புரொபஸர்: அதாவது பெங்களூர் நகரத்துக்கு இடம்பெயர்ந்து செல்லும் சிலருக்கு ஆஸ்துமா போன்ற
மூச்சுப் பிரச்னைகள் அதிகமாகும். அதாவது மகரந்த தூள்களுக்கு ஒவ்வாமை கொண்ட மக்களுக்கு, அந்த ஊரில் மூச்சுப் பிரச்னைகள் அதிகமாகும். அவ்வியாதிகள் அந்த நிலப்பகுதிக்கே பிரத்யேகம் என்பது போல தனித்து அதிகமாய் தோன்றும். இது ஒரு cluster.
கணேஷ்: அதாவது சூழலியலால் ஏற்படும் வியாதிகள்.
புரொபஸர்: ஆமாம். சில ஊர்களில் நீர் மாசுபடுவது காரணமாக அந்த நீர்வழியின் கரையில் வாழும் மக்களில் பலருக்கு குறிப்பிட்ட ஒரு புற்றுநோய் ஏற்படும். இதுவும் cluster தான். இதையெல்லாம் non-communicable
disease cluster என்கிறார்கள். அதாவது தொற்ற வாய்ப்பில்லாத தொகுப்பு நோய்கள். தொற்றக் கூடிய ஸ்ரீப்ன்ள்ற்ங்ழ் உம் உண்டு - ஜுரம், இருமல், சளி போல. நிறைய வைரஸ் தொற்றுகள் ஒரு குறிப்பிட்ட ஊரிலோ நேரத்திலோ
அதிகமாய்த் தோன்றினால் அது communicable cluster ஆக அறியப்படும்.
கணேஷ்: சார் உங்களுக்கு எப்படி இதெல்லாம்
தெரியும்?
புரொபஸர்: போன வாரம் ஆங்கில நாளிதழ் ஒன்றில் பல வித வியாதிகள் பற்றி ஒரு கட்டுரை படிச்சேன். அந்த ஞாபகம் தான்.
கணேஷ்: நன்றி சார்...
வீரபரகேசரி: என்ன மாறி மாறி பாராட்டிக்கிறீங்க? உன் பதில் சரியான்னு எப்படி முடிவு பண்ணினே?
கணேஷ்: புரொபஸரே சொல்லிட்டார் மன்னா... அதனால் தான்.
வீரபரகேசரி: இருக்கட்டுமே, நான் ஒப்புக்கிட்டா தான் அது சரியான பதில்.
கணேஷ்: சரி மன்னா...
வீரபரகேசரி: சரியான பதில். மகிழ்ந்திரு. ஆனால் அடுத்த கேள்வியும் வருது - endemic என்றால் உனக்குத் தெரியும். Hyperendemic கேள்விப்பட்டிருக்கிறாயா? அது என்ன?
கணேஷ்: ஹைப்பர் என்றால் மிகையான, அதிகப்படியான என்று பொருள் வரும் என ஊகிக்கிறேன். ஒரு வியாதி எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருந்தால் அது hyperendemic. சரியா மன்னா?
வீரபரகேசரி: இல்லை தப்பு. ஹா...ஹா... மாட்டினாயா? அமைச்சரே!
அமைச்சர் (போனில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார்): (...)
வீரபரகேசரி: யோவ்...
அமைச்சர்: மன்னா! பேஸ்புக்கில் தங்களது மகிமை
களைப் பதிவேற்றிக் கொண்டிருந்தேன். மக்கள் திரள்திரளாக வந்து லைக்குகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்ததில் உங்களைக் கவனிக்கவில்லை.
வீரபரகேசரி: கிழித்தாய். உன் பேஸ்புக் பக்கத்தைப் பார்த்தேன். உன்னைப் பின் தொடர்பவர்கள் மொத்தமே நூறு பேர் தானா? அடுத்த வாரத்துக்குள் பத்தாயிரமாக அது உயர வேண்டும்; இல்லாவிட்டால் உன் பதவியைப் பறித்து உன் தலையை மொட்டையடித்து அதை ஆட்டுரலாக எம் நாட்டுப் பெண்டிர் மாவரைக்கக் கொடுப்பேன்.
அமைச்சர்: மன்னர் மன்னா எந்த நேரமும் நான் தயாராக இருக்கிறேன்.
கணேஷ்: மன்னா எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். ஜூலியிடம் ஆலோசனை பண்ணி விட்டு இன்னும் சரியாகப் பதிலளிக்கிறேன்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...