வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 253
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்து சமாளிக்கிறான்.
அப்போது a penny for your thoughts எனும் சொலவடையின் பொருள் என்ன என கணேஷ் ஜூலியிடம் கேட்கிறான். என்னவென அறிவோமா?
ஜூலி: அதாவது தம்பி நீ ரொம்ப யோசனையா இருக்கே. உன் அம்மா வந்து, "என்னடா ஆச்சு'ன்னு கேட்குறாங்க. "நீ ஒண்ணுமில்லம்மா'என்கிறே. இதையே ஆங்கிலத்தில் உன் அம்மா கேட்கிறதுன்னா, a penny for your thoughts ன்னு கேட்கலாம். நீ உடனே உன் மனசில் ஓடுறதை வெளிப்படையாச் சொல்லிடலாம், இல்ல nothing much என்று தவிர்க்கலாம்.
கணேஷ்: ஓ...
ஜூலி: இது ரொம்ப பழைய சொற்றொடர். அதாவது இங்கிலாந்தில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்தே புழக்கத்தில் இருக்கு. இதை முதலில் பயன்படுத்தினவர் சர் தாமஸ் மூர் எனும் எழுத்தாளர். அவர் இதை 1535 - இல் எழுத்தில் கொண்டு வந்தார். அவரது பழைய ஆங்கிலத்தை நவீன மொழியில் சொல்றதுன்னா when people notice that someone appears disengaged and wish them to rejoin the conversation they ask a penny for your thoughts. இப்படி அவரே இதை எப்படிப் பயன்படுத்துறதுன்னு விளக்கினார். அப்புறம் இது a penny என சுருங்கி பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.
கணேஷ்: அதென்ன Penny?
ஜூலி: Penny என்றால் இங்கிலாந்தில் புழக்கத்தில் இருந்த சில்லறைக் காசு. இதை நேரடியா அர்த்தப்படுத்துறதுன்னா அப்படி என்ன ரொம்ப மதிப்புமிக்க சிந்தனைகளில் ஆழ்ந்திருக்கே, அதை எனக்கு நீ சொல்றதுன்னா காசு தரணுமா? எவ்வளவு காசு? ஒரு பென்னி போதுமா? என வரும். நம்ம ஊரில "என்ன உம்முன்னு இருக்கே, வாயைத் திறந்து முத்து உதிர்ந்திருமா'ன்னு கிண்டலா கேட்போமே, அதனோட ஆங்கில வடிவம் தான் penny for your thoughts.
கணேஷ்: ஆனா இதை யாரும் அவ்வளவாப் பயன்படுத்தி நான் பார்த்ததில்லியே.
ஜூலி: ஏனென்றால் இதை இந்த நூற்றாண்டில் அதிகமா மக்கள் பயன்படுத்துறதில்ல. வயதான ஆங்கிலேயர்கள், மரபான ஆட்கள் அதிகமாப் பயன்படுத்துவாங்க, இந்த காலத்து yo-yo பசங்க இல்ல.
வீரபரகேசரி: அடுத்த கேள்வியை எனது அரசியல் குருவான ஷா கேட்பார்.
ஷா எனும் வெண்புரவி (ஒருமுறை கனைக்கிறது): நான் ஒரு colloquial ஆன கேள்வி கேட்குறேன். அதென்ன Yo Yo?
கணேஷ்: ஓ இது எனக்குத் தெரியுமே? Rap இசையில் அடிக்கடி yo yo வரும். Yo Yo Honey Singh என்றொரு இந்திய Rapper இருக்கிறார். எனக்கு அவருடைய பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். அவர் தமிழில் கூடப் பாடியிருக்கிறார் - (பாடுகிறான்) யோ யோ ஹனி சிங்கே.
ஷா (காலைத் தூக்கி அவனை உதைக்க வருகிறது): நிறுத்து, நிறுத்து...
கணேஷ் (ரெண்டு அடிகள் பின்னாடி போகிறான்): ஐயோ...
ஷா: பயப்படாதே. சொல்லு. உனக்குப் பதில் தெரியுமா?
கணேஷ்: Yo. தெரியும்.
ஷா: அதான் என்ன?
கணேஷ்: அதான் சொல்லீட்டேனே. ஆமாம். வர் என்றால் ஆம் எனப் பொருள்.
ஷா: முழுக்க சரி இல்ல. யோ என்றால் ஹலோ, அடேய், இதோ பாரு, ஆமாம் இப்படி பல அர்த்தங்கள். ஆமா, ஏன் இந்த ஹனி சிங் தன்னை யோ யோன்னு சொல்லிக்கிறார்.
கணேஷ்: Rap இசையில் யோ யோ அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை.
ஷா: அது வார்த்தையா?
கணேஷ்: இல்லையா?
ஷா: இல்லன்னு நினைக்கிறேன்.
ஜூலி: ஆமா, அது வார்த்தை இல்லை, interjection. அதாவது வியப்பொலி. "ஓ', "ஆஹ்'போல.
ஷா: இந்த yo எப்படி அமெரிக்க ஆங்கிலத்தில் வந்தது தெரியுமா? அதன் வரலாறு என்ன?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...