
கரோனா பாதிப்பால், திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. வீட்டில் முடங்கியிருந்து தொலைக்காட்சி திரைப்படங்களையே எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருப்பது என்று என்று சோர்ந்து போன மக்களை உற்சாகப்படுத்தும்விதமாக பிரான்ஸின் பாரிஸ் நகரில் செயின் ஆற்றங்கரையில் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டது.
le grand bain என்ற திரைப்படம்தான் அது. ஆற்றங்கரையில் கரையில் 16 மீட்டர் நீளம் 9 மீட்டர் அகலம் கொண்ட திரையில் படம் திரையிடப்பட்டது.
ஆற்றில் சமூக இடைவெளியை கணக்கில் கொண்டு மிதக்க விடப்பட்ட மின்சாரப் படகுகளில் அமர்ந்தவாறே மக்கள் திரைப்படத்தைக் கண்டுகளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.