பன்னிரண்டாம் வகுப்பு வரையில் வழங்கப்படும் அடிப்படைக் கல்வியின் அடிப்படையில் எதிர்கால வாழ்க்கைத் தொழிலுக்குத் தேவையான கல்வியைத் தேர்ந்தெடுப்பதை மாணவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவம், பொறியியல், குடிமைப்பணி, பட்டயக்கணக்காளர் போன்ற ஏராளமான வாழ்க்கைத் தொழில்கள் குவிந்து கிடக்க, அவற்றுக்கு அடிப்படையாக கலை, அறிவியல், வணிக ஆகிய மூன்று பெரும் துறைகள் உள்ளன. இதில் அறிவியலைத் தேர்ந்தெடுத்தால் மருத்துவம், பொறியியல் போன்ற எண்ணற்றதுறைகளில் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். பட்டயக்கணக்காளராக வணிகப் படிப்புகளையும், குடிமைப்பணி அல்லது ஆசிரியப்பணி அல்லது வரலாற்று ஆய்வாளர் அல்லது தொல்லியல் நிபுணராக கலைப்படிப்புகளையும் தேடிப் படிக்கலாம். வாழ்க்கைத் தொழிலை முடிவு செய்து, அதனடிப்படையில் கல்வித்துறையைத் தேர்ந்தெடுக்க மாணவர்களை ஊக்குவிக்கும் வழக்கம் பெற்றோர்களிடம் காணப்படுகிறது. கலை, அறிவியல், வணிகம் போன்ற அடிப்படைக் கல்விக்கு வெளியே வாழ்க்கைத் தொழிலை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
படைப்பாற்றல் என்பது வரம்புகளைக் கடந்து அனைத்து தொழில்களிலும் காணப்படும் திறனாக பரிணமித்துள்ளது. புதுமை, கலையார்வம் கொண்ட எவரும் படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். மின்னல் வேகத்தில் மாறி வரும் உலகத்தில் தொழில்நுட்பம் மற்றும் எண்மத்திறனுக்கு முக்கியத்துவம் பெருகி வருகிறது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற துடிப்பும், வேட்கையும் கொண்ட மாணவர்களுக்கு படைப்பாற்றல், தகவல்தொடர்பு, திறனாய்வுச் சிந்தனை, கூட்டுமுயற்சி, நெகிழ்வுத்திறன் இருந்துவிட்டால் தேர்ந்தெடுத்த துறையில் உச்சங்களைத் தொடமுடியும். படைப்பாற்றலுக்கு எல்லாத் துறைகளிலும் தேவையும் வரவேற்பும் உள்ளது. அந்தவகையில் படைப்புத்திறனும், வடிவமைப்புத்திறனும் கொண்ட மாணவர்களால் எந்த தொழிலில் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும். அதனால்தான் படைப்பாற்றல் சார்ந்த தொழில்களை நாடி இளைஞர்கள் மொய்க்கத் தொடங்கியுள்ளனர். படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்புக் கல்விக்கும் தொழிலுக்கும் சமுதாயத்தில் மதிப்பு வாய்ந்த இடம் இல்லை என்ற கருத்து நிலவுவதால் தங்கள் குழந்தைகள் இதை வாழ்க்கைத் தொழிலாக எடுத்துக்கொள்ள பெற்றோர்கள் விரும்புவதில்லை. இதை கவர்ச்சி சார்ந்த தொழில் என்ற எண்ணமும் காணப்படுகிறது. இதற்கு மாறாக எல்லாத் துறைகளிலும் படைப்பாற்றல், வடிவமைப்புக்கான தேவை பெருகியுள்ளது.
படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்பு என்பது ஏதோ நுண்கலை, விளம்பரம், ஆடை வடிவமைப்பு சார்ந்தது என்றிருந்த காலம் மாறிவிட்டது. தொழில்நுட்பம், நகரிய வடிவமைப்பு, வெகுமக்கள் ஊடகம், நிகழ்வு மேலாண்மை, திரைப்படமெடுத்தல், பொருள் வடிவமைப்பு, கட்டடக்கலை, அசைவுப்படங்கள்(அனிமேஷன்) போன்ற ஏராளமான துறைகளில் படைப்பாற்றல், வடிவமைப்புத்திறன் உள்ளோருக்கு வேலைவாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன.
இளநிலை பட்டப்படிப்புக்கு பிறகு, ஆடை வடிவமைப்பு, வரைகலை(கிராபிக்ஸ்), பொருள் வடிவமைப்பு, ஆபரண வடிவமைப்பு, வாகன வடிவமைப்பு, நகர்ப்புற உள்கட்டமைப்பு, கட்டடக்கலை அமைப்பு என தனக்கு விருப்பமான துறைகளில் படைப்பாற்றல் கொண்டவர்கள் பரிணமிக்கலாம்.
வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க புதிய புதிய வடிவமைப்புகளைக் கட்டமைப்பது அவசியம் என்ற நம்பிக்கை பரவலாகி வருகிறது. தொழில்நுட்பம்சார்ந்த பொருள் அல்லது சேவை எதுவாக இருந்தாலும், மனதை மகிழ்விக்கும் தோற்றம், வடிவமைப்பு மற்றும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளரைத் திருப்தி அடையச் செய்ய இயலும். வாடிக்கையாளரின் திருப்தி, இன்றைய வணிகத்தின் மையப் புள்ளியாக மாறி வருகிறது. செல்லிடப்பேசி, கணினி என்று எதை எடுத்துக் கொண்டாலும், அதன் தொழில்நுட்பத்துடன் கூடிய அழகிய வடிவமைப்பு வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்க்கிறது.
மின்வணிகத்தின் பரப்பு விரிந்து வருவதால், கண்களை ஈர்க்கும் வடிவமைப்புக்கு முக்கியம் அதிகரித்துள்ளது. அதனால் சில்லரை வர்த்தகம், வியாபார மேலாண்மையில் ஆழ்ந்த ஈடுபாடும், அறிவும் கொண்டவர்களுக்கு படைப்பாற்றல் சார்ந்த வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கி வருகின்றன. எந்தப் பிரிவு வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டு பொருள்களை வடிவமைக்கும்போக்கும் பெருகியுள்ளது. இதற்கு படைப்பாக்க வடிவமைப்பு முக்கியமாகும். அண்மைக் காலமாக படைப்பாற்றல் சார்ந்த வடிவமைப்பு பணிகளுக்கு மவுசு கூடியுள்ளது. இதன் காரணமாக, இதுதொடர்பான கல்வியும் பரவலாகி வருகிறது. அதனால் தான் தொழில்துறையில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்துக்கொண்டிருக்கும் படைப்பாக்க வடிவமைப்பியல்(கிரியேட்டிவ் டிசைனிங்) இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
ந.முத்துமணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?

ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை: ப. சிதம்பரம்

எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!

398 சிலிண்டர்கள் பதுக்கல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

