வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 246
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்து சமாளிக்கிறான்.
அப்போது to know which side of the bread is buttered எனும் idiomatic expression - ஐப் பற்றி ஜூலி மன்னர் வீரபரகேசரி மற்றும் கணேஷிடம் விவாதிக்கிறது.
ஜூலி: நீங்க சொல்லுவது உண்மை தான் மன்னா. நாம் சமூகமாக்கலின் போது பரஸ்பரம் பாராட்டுகிறோம்; குளிர்ச்சியாகப் பேசுகிறோம். ஆனால் இது ஜால்ரா போடுவது அல்ல. ஜால்ரா போடும் இத்தகையோரில் சிலர் ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பார்கள். சாமர்த்தியசாலிகள் இவர்கள். சரியான நேரத்தில் சரியான ஆட்களைப் பாராட்டி காரியம் சாதிப்பார்கள். They know where their interests lie. எங்கே முட்டினால் கதவு திறக்கும் எனத் தெரிந்தவர்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் to know which side of the bread is buttered என்கிறார்கள்.
கணேஷ்: அது ஓகே... ஆனால் அதை சொல்றதுக்கு ஏன் பிரெட்டு, பட்டர்னு சொல்லணும்?
ஜூலி: நீ ரொட்டி சாப்பிடும் போது வெண்ணெய்யோ ஜாமோ தடவி சாப்டுறேன்னு வச்சுக்கோ...
கணேஷ்: நினைச்சாலே பசிக்குதே.
ஜூலி: மன்னர் அடுத்து கேட்கிற கேள்விக்கு சரியா பதில் சொன்னா அவரு உனக்கு பிரமாதமா ஒரு விருந்து கொடுப்பார்.
வீரபரகேசரி: அதுக்கென்ன கொடுத்திடலாம். உலகின் மிக சுவையான உணவுகளை மேஜையெங்கும் பரப்ப சொல்கிறேன்.
கணேஷ்: நன்றி மன்னா... ஜூலி, நீ அந்த கதையை முழுக்கச் சொல்லு.
ஜூலி: ரெண்டு ரொட்டிகளில் ஒன்றில் தான் வெண்ணெய் தடவி சாப்டுவோம். அப்போ நீ எந்தப் பக்கமா கடிக்க விரும்புவே?
கணேஷ்: எந்தப் பக்கம் வெண்ணெய் அதிகமா இருக்கோ அந்தப் பக்கமா.
ஜூலி: கரெக்ட். இதே போல ஒருத்தர் யாரிடம் எப்போதும் நைஸா பேசினா தனக்குச் சூழ்நிலை சாதகமா ஆகுமுன்னு தெரிஞ்சு வச்சு, அதற்கு ஏற்ப பேசுவாங்க இல்ல, அது தான் knowing which side of the bread is buttered. அதாவது எந்தப் பக்கமுள்ள ரொட்டியில் வெண்ணெய் அதிகமா இருக்குதுன்னு தெரிஞ்சு வச்சுக்கிறது. Whenever possible Rajesh flatters his boss, as he knows which side of the bread us buttered.
கணேஷ்: ஓ... Flatter என்றால் ஜால்ரா போடுறதா?
ஜூலி: ஆமா... சரி, இது சம்பந்தமா இன்னொரு கதை இருக்குது. இது ஒரு Yiddish மொழி கதை. போலந்தில் உள்ள செல்ம் எனும் சிறுநகரில் உள்ள ஞானம் பொருந்திய ஜனங்கள் சிலரைப் பற்றின வேடிக்கையான நாட்டுப்புறக் கதை.
கணேஷ்: அதென்ன யிட்டிஷ்?
ஜூலி: யிட்டிஷ் என்பது யூதர்கள் பேசிய ஒரு மொழி. நான் சொல்கிற கதை போலந்தில் நடக்கிறது. அங்கே ஒரு செல்ம் எனும் சிறுநகரத்தில் ஒருநாள் யாரோ கீழே போட்ட ரொட்டி, வெண்ணெய் மேலிருக்கும்படி விழுந்து விடுகிறது - it falls butter side up. இதைப் பார்த்து அந்த ஊர் மக்கள் எல்லாம் வியந்து கூடிப்பேசிக் கொண்டார்கள்.
கணேஷ்: அதிலென்ன அதிசயம்? கீழே போடும் போது வெண்ணெய் மேலிருக்கும்படி போட்டிருப்பார்கள்.
ஜுலி: லூசு, அதெப்படி அப்படிப் போட முடியும்? அதுமட்டுமல்ல, நீ சும்மாவே ஒரு பொருளை கீழே போட்டால் எந்த பக்கம் கனமாக உள்ளதோ அந்த பக்கமே கீழே போகும். அதனால் கீழே போடப்பட்ட ரொட்டி butter side down ஆக விழும் என்பதே இயற்பியல் விதி.
வீரபரகேசரி: Thermodynamics என்பார்கள்.
கணேஷ்: அதென்ன தெர்மோடைனமிக்ஸ்?
வீரபரகேசரி: அது இயற்பியலின் ஒரு கிளை. பலவகையான ஆற்றல்கள் ஒன்றோடொன்று எந்த விதிகளின்படி உறவாடுகின்றன என ஆய்வு செய்யும் துறை.
கணேஷ்: புரியவில்லை மன்னா...
வீரபரகேசரி: விளக்கமாகச் சொல்கிறேன்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...