வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 241
ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். இப்படி வீரபரகேசரி கேள்விகள் எழுப்பும்போது அவற்றில் ஒன்று pandemic மற்றும் epidemic ஆகிய சொற்களைக் குறித்த கேள்விகளுக்கான சில உப
கேள்விகளைக் கேட்கிறார்.
வீரபரகேசரி: கணேஷ், இது உனக்கு கடைசி வாய்ப்பு. சரியாகப் பதில் சொல்லாவிட்டால் உன் தலையைக் கொய்து...
கணேஷ்: இல்லை... வேண்டாம் மன்னா... நீங்க தண்டனையைக் கற்பனை செய்து விதவிதமாக விவரிப்பதைக் கேட்டால் தண்டனையை விடக் கொடூரமாக இருக்குது.
வீரபரகேசரி: சரி, வேண்டாம்... ஆலோசனை பண்ணிக் கொள்.
கணேஷ்: ஜூலி பளீஸ் ஹெல்ப் மீ. அதென்ன hyperendemic?
ஜூலி: நீ சொன்ன பதில் கிட்டத்தட்ட சரிதான். ஆனால் துல்லியம் இல்லை. Endemic என்றால் ஒரு வியாதி ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமாய் தோன்றுவது. ஊரில் ஆயிரம் பேரில் பத்து பேருக்கு ஜுரம் வருவதற்குப் பதிலாக ஐநூறு பேருக்கு வந்தால் அது endemic. ஆனால் hyperendemic என்றால் வேறு. அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களிடையே ஒரு வியாதி மற்ற மக்கள் தொகுதிகளை விட தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையில் இருப்பது. உதாரணமாக எயிட்ஸ்.
கணேஷ்: எயிட்ஸா?
ஜூலி: ஆமாம், அது ஆப்பிரிக்காவில் உள்ள சில பகுதிகளில் வாழும் மக்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு இருக்கிறது. ஆனால் அமெரிக்காவிலோ அது முன்னூறு பேர்களில் ஒருவருக்குத் தான் இருக்கிறது. இங்கு ஆப்பிரிக்காவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் எயிட்ஸ் என்பது ஒரு hyperendemic ஆக இருக்கிறது எனலாம். இங்கே ஆப்பிரிக்காவிலோ hyperendemic ஆக இருக்கும் எயிட்ஸ் அமெரிக்காவில் வெறும் நோய்த்தொற்றாக கட்டுப்பாட்டில் இருக்கிறது.
கணேஷ்: நன்றி ஜூலி. மன்னா, இப்போது எனக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது.
வீரபரகேசரி: ஆமாம், நீ எப்போதுமே குத்துமதிப்பாக பதிலைச் சொல்லி விடுகிறாயே ஒழிய ஒரு தெளிவான புரிதல் உனக்கு இருப்பதில்லை. சரி போகட்டும். என்னுடைய உப கேள்விகள் முடிந்தன. அடுத்து பிரதான கேள்விகள் தொடங்கும்.
கணேஷ்: நன்றி மன்னா. எனக்கு அதற்கு முன் ஒரு சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
வீரபரகேசரி: சரி நீ டைம் எடுத்து உன் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள். எனக்கு சில நாட்டு நிர்வாக காரியங்களைக் கவனிக்க வேண்டும். (அமைச்சரை நோக்கி): யோவ் இங்கே வா. (மன்னரின் அமைச்சரும் கிளம்புகிறார்கள்)
கணேஷ் (ஜூலியிடம்): ஜுலி, இந்த க்ழ்ஹற் என்றால் என்ன?
ஜுலி: ஏன் கேட்குறே?
கணேஷ்: மன்னர் அமைச்சரிடம் drat, he is dead to the world என்று சொன்னாரே ஞாபகம் இருக்கிறதா?
ஜூலி: ஆமாம்.
கணேஷ்: அப்பவே கேட்கணும்ன்னு நினைச்சேன். அதென்ன?
ஜூலி: உன் ஞாபகத்தில் தீயை வைக்க. சரி சொல்லித் தொலைக்கிறேன். அதொன்றும் விசேஷமான வார்த்தையில்லை. அது ஒரு interjection. அதாவது வியப்புச் சொல். அதன் நோக்கம் ஒரு சிறிய எரிச்சலை, கோபத்தை வெளிப்படுத்துவது. ச்சே, அடச்சே என்பது போல ஒரு சொல் தான் drat.
புரொபஸர்: இல்லை ஜூலி, நீ சொல்றது தப்பு. drat is an exclamation, not an interjection.
ஜூலி: ஓ... ஆமா, அது ஒரு exclamation தான்.
கணேஷ்: என்ன வித்தியாசம்? எனக்குப் புரியல. ரெண்டுமே ஒண்ணு தானே?
புரொபஸர்: இல்ல... வித்தியாசம் இருக்கு... சொல்றேன் கேளு. Exclamation என்றால் வியப்பொலி. ஆனால் அது உணர்ச்சியொன்றை ஒலிக்கிற ஒரு சொல் மட்டுமல்ல, ஒரு சொற்றொடரும் தான். என்ன ஒரு அழகான குரல்! What a lovely voice! இப்படிச் சொல்வது ஒரு exclamation. இப்படி ஒரு சொல்லாகவும் சொற்றொடராகவும் இருக்கிற பாங்கு ஒரு interjection எனும் வியப்புச்சொல்லுக்கு இல்லை. அது எப்போதுமே ஒற்றைச்சொல் தான். அதற்கு இலக்கணம் அவசியமில்லை. ஆனால் excla
mation-க்கு இலக்கண சுத்தம் தேவை. I am fed up! Get out of this place! How amazing is this place! என சொல்லும் போதெல்லாம் அவை exclamation தான். மற்றொரு வித்தியாசமும் உண்டு. சொல்றேன்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...