நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம்- 242

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

News image
Updated On :14 மே 2020, 11:45 am

ஆர்.அபி​லாஷ்


ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனேகொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் விவாதிக்கும் போதுexclamation-க்கும் interjection-க்குமான வித்தியாசம் என்ன எனும் பொதுக்கேள்வியை எழுப்புகிறான். இதை புரொபஸர் விளக்குகிறார்.

புரொபஸர்: Exclamation - interjection எனும் சொற் பிரயோகங்களுக்கான வித்தியாசங்களை விளக்கினேன். கடைசியாக ஒன்று exclamation ஓர் ஆணையாக இருக்கலாம் என்பது. Sit down right now! என்பது ஒரு exclamation தான். அது ஒரு கட்டளை. ஆனால் அது interjection ஆகாது. Interjection எப்போதுமே ஒற்றை சொல். ஒரு மிகை உணர்ச்சியை வெளிப்படுத்துகிற ஒரு சொல். aha, alas, bravo, indeed, well, wow, wow, ouch என்பவை எல்லாமே ண்ய்ற்ங்ழ்த்ங்ஸ்ரீற்ண்ர்ய் சொற்கள். அவை தனியாக வாக்கியமாகாது. ஆணையாகாது. புரிகிறதா? இது தான் வித்தியாசம் ரெண்டுக்கும்.
கணேஷ்: புரிஞ்சுது. இனிமேல் மறக்காது. நன்றி சார். ஜுலி.
ஜூலி: அந்த dead to the world தானே?
கணேஷ்: ஆமா
ஜூலி: சரி சொல்றேன். Dead to the world என்றால் நல்லா அசந்து தூங்குவது.
கணேஷ்: ஓஹ்! சில நேரம் நாம சுத்தி என்ன நடக்குறதுன்னே தெரியாம குறட்டை விட்டு தூங்குவோம் பாரு அப்போ we are dead to the world. ரைட்டா?
ஜூலி: ரைட்டு.
கணேஷ்: எனக்கு இன்னொரு சந்தேகம்.
ஜூலி: Shoot.
கணேஷ்: Thereforeக்கும் therebyக்கும் ஏதாவது வித்தியாசம் பயன்பாட்டில் உண்டா? ஏன்னா நான் ரெண்டையும் சமமாப் பயன்படுத்துவேன். ஆபீசில் ஒரு பொண்ணு என்னை இதைச் சொல்லி கலாய்ச்சிருச்சு. அப்படி பயன்படுத்தினா தப்பா?
ஜூலி: ஆமா தப்பு தான். யாரந்த பொண்ணு.
கணேஷ்: சுகிதகுமாரின்னு. பேர் தான் கர்நாடகம். ரொம்ப பீட்டர் விடும். சரி, இந்த ரெண்டுக்கும் என்னதான் வித்தியாசம்?
ஜூலி: முதலில் ஒற்றுமைக்கு வரேன். ரெண்டுமே adverbs.
அதாவது ஒரு செயல் எப்படி நடந்தது எனக் குறிப்பிடும், அல்லது விஷேசப்படுத்தும் சொல். She smiled radiantly என்னும் போது அவள் எப்படி புன்னகைத்தாள் என்பதை நமக்குச் சொல்லும் சொல் எது?
கணேஷ்: Radiantly.
ஜூலி: கரெக்ட. அந்த radiantly தான் அங்கே adverb. அதே போல காலத்தைக் குறித்து தகவல் தருகிற சொல்லும் ஹக்ஸ்ங்ழ்க்ஷ ஆகும். she saw me in the crowd and then she smiled. இந்த வாக்கியத்தில் எப்போது அவள் புன்னகைத்தாள்?
கணேஷ்: உன்னைக் கூட்டத்தில் பார்த்த பிறகு.
ஜூலி: வெரி குட். அதைச் சொல்லுகிற சொல் அங்கே
ற்ட்ங்ய். அது அங்கே adverb. She saw me in the crowd and right there she wept in elation. அதாவது அவள் என்னைக் கூட்டத்தில் பார்த்தாள்; அந்த இடத்திலேயே அவள் மனவெழுச்சியில் அழுது விட்டாள். இதில் there என்பது தான் "அந்த இடத்திலேயே' எனும் பொருளில் adverb ஆக வருகிறது. இந்த இடத்தில் and ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறது, கவனித்தாயா?
கணேஷ்: ஆமா
ஜூலி: என்ன?
கணேஷ்: ரெண்டு clauses அதாவது வாக்கியக் கூறுகள் இங்கே வருகின்றன - she saw me in the crowd ஒன்று, she wept in elation ரெண்டாவது. இந்த இரண்டு வாக்கியக் கூறுகளையும் இணைப்பது தான் ...
புரொபஸர்: And
கணேஷ்: ஆமாம், conjunction. இந்த இரண்டு வாக்கியக் கூறுகளையும் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு கடத்தி விடுகிற பணியையும் ஹய்க் செய்கிறது. சரியா?
ஜூலி: வெரி குட். அப்படி கடத்தி விடும் சொல்லை என்ன சொல்வார்கள்?
கணேஷ்: தெரியல.
ஜூலி: Transition word. But, so, because இவையெல்லாம் கூட transition words என அறியப்படும். Therefore, thereby ரெண்டுமே எப்படி adverb ஆக இருக்குதோ அப்படியே அவை transition words ஆகவும் இருக்குது. இது தான் ரெண்டுக்குமான ஒற்றுமை. அடுத்து வேற்றுமை.
கணேஷ்: ப்ப்பா... இப்பவே டயர்ட் ஆயிடுச்சு ஜூலி.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.