கரோனா வைரஸ் உலகம் எங்கும் தாக்கியுள்ள இத் தருணத்தில், உயர்கல்விக்கான கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து சமூகப் பாதுகாப்பிற்கு பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் நாமோ மாணவர்களுக்கு இன்னும் தேர்வுக்கான என்ன பாடங்களைக் கற்றுத் தரலாம் என்றுதான் சிந்தனையுடன்தான் இருக்கிறோம். மீண்டும் மீண்டும் பாடத்திட்டத்தை (syllabus) முடிக்க வேண்டும்; தேர்வு நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கற்றுத் தருகிறோம்.
ஆனால் இந்த பேராசிரியர்கள் இந்த நிலைமை எவ்வளவு நாள் தொடரும் என்ற ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் மீண்டும் மீண்டும் செமஸ்டருக்குக் கற்பிப்பது என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும். ஆனால் இப்பாடங்களின் வாயிலாக சமுதாயத்தில் ஏற்படக்கூடிய பேரழிவுகளை எவ்வாறு எதிர்கொள்வது? அவ்வாறு எதிர்கொள்ளும்போது கிடைக்கக் கூடிய வெற்றி அல்லது தோல்வி ஆகியவற்றின் வாயிலாக கிடைக்கக் கூடிய அனுபவங்களின் அடிப்படையில் எதிர்காலத்துக்கு எவ்வாறு திட்டமிடுவது என்பன போன்றவற்றை மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த பணிகளின் மூலம் கற்றுக் கொள்வது, தற்போதைய பாடத்திட்டத்தைப் பயில்வதை விட மிக மிக அவசியமானதாகும். மிக முக்கியமாக உண்மையான கல்வியின் பயன்பாட்டினை மாணவர்களும் மக்களும் அறிந்து கொள்வதற்கான ஓர் அரிய தருணம் இது.
இதுபோன்று மாணவர்கள் மற்றும் மக்களின் நலனும் கருத்தில் கொண்டு ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுபவர் மட்டுமே இதுபோன்ற கல்வி சார்ந்த உயர் பதவிகளை அடையும் வண்ணம் திட்டமிடல் வேண்டும்.
பள்ளிகள்: இதுபோன்ற சூழலில் மாணவர்கள் பள்ளி பாடத்திட்டத்திற்கு அப்பால் என்னென்ன விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை பள்ளிகளும் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களைச் செயல்படச் செய்து, அந்த அனுபவங்களை ஆவணப்படுத்த வேண்டும். பள்ளிகள் அவற்றை ஆராய்ந்து மாணவர்களின் தனித்துவத்தையும் அறிந்துகொள்ள இது பின்னாளில் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஆனால் இன்றைய பள்ளிகள், திரும்பத் திரும்ப மாணவர்களைத் தேர்வுக்காக தயார் செய்யக் கூடிய இயந்திரங்களாகவே இருப்பது மிகவும் வேதனையைத் தருகிறது.
அரசுப் பள்ளிகளில் சமுதாயத்தில் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வசதியற்ற மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் வேலைக்குச் செல்ல முடியாத இந்த ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.
அரசின் கல்வித் துறை, அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூலமாக உணவுக்கு கூட வசதியில்லாத மாணவர்களை எளிதாக அடையாளம் காண முடியும். உதாரணமாக ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் உள்ள ஒரு ward என சொல்லக்கூடிய ஒரு பகுதியிலிருந்து எத்தனை ஏழை மாணவர்கள் பல்வேறு வகுப்புகளில் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள் என்று கண்டறிந்து, அவர்களுக்கு ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ், அது மதிய உணவு திட்டம் ஆக இருந்தாலும் சரி- அல்லது மற்றொரு புதிய முறையை உருவாக்கி ஏழை மாணவர்களுக்கு உணவு கிடைக்க அரசு அல்லது தன்னார்வலர்கள் மூலம் வழிமுறைகளைக் கண்டறிந்து அந்தந்த பகுதிகளில் அவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு வேளைகளாவது உணவு கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த முயற்சிகளை நாம் எடுக்காவிட்டால், ஊரடங்குக்குப் பிறகு இந்தக் குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவதற்கான வாய்ப்பை இழந்துவிடுவார்கள். இத்தகைய சூழல் இதற்கு முன்னால் ஏற்படவில்லை. இந்த சூழலில் கல்வியை விட மனிதாபிமானத்தை முன்னிறுத்தி பசி, பட்டினியால் வாழக் கூடிய மாணவர்களின் துயர் போக்கும் பொறுப்பு அரசு, கல்வித்துறை, பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மொத்த சமூகத்துக்கும் உள்ளது. ஆனால் ஏழை மாணவர்களைக் கண்டறிந்து கூறக் கூடிய ஒரே நபர் ஆசிரியர் தான். ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்களின் மூலம் எத்தனை ஏழை மாணவர்கள் என்று கணக்கு எடுத்தார் எனில் எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாது.
இதுபோன்று அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியான மாணவர்களின் பெற்றோரின் மூலமாக, வசதியற்ற அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தேவையறிந்து, அவர்களுக்கு உதவச் செய்வது, "அடுத்தவருக்கு அவருடைய கஷ்ட காலத்தில் உதவுவது என்பது எவ்வளவு இன்றியமையாதது' என்ற வாழ்க்கைக் கல்வியை தங்கள் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்கு ஒரு பொன்னான வாய்ப்பைக் கரோனா தந்திருக்கிறது. தனியார் பள்ளிகள் மனிதாபிமானத்தை இந்த நேரத்தில் வரும் தலைமுறையினருக்கு கற்பிப்பதற்கான சிறந்த நேரம் இதுவேயாகும்.
இதேபோன்று, இன்றையச் சூழலில் எண்ணற்ற வசதியான பள்ளிகள் மாணவர்களுக்கு இணையம் வாயிலாக வீட்டிலிருந்தபடியே படிக்கக் கூடிய ஒரு வாய்ப்பினை உருவாக்கியுள்ளனர். ஆனால் இதுவே அரசுப்பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் இந்த வாய்ப்புகள் தரப்படுவதில்லை. கல்வித்துறை மற்றும் அரசும் சேர்ந்து, தொலைக்காட்சி அல்லது வானொலி வாயிலாக - வேறு ஏதேனும் ஒரு முயற்சியின் வாயிலாக தன்னம்பிக்கையையும், மன தைரியத்தையும் பாடமாக எடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி இச்சூழலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான தேவையை உணர்த்த வேண்டும். எல்லாத் தடைகளுக்கும் அப்பால் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என்ற கருத்தை மாணவர்களுடைய மனதில் தற்போது விதைக்க வேண்டியது கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம்.
மாணவர்கள்: Context Based Learning (CBL) என்பது பாடப் புத்தகங்களைத் தாண்டி தற்போதுள்ள சூழலின் தன்மையை அறிந்து, திட்டமிட்டு எவ்வாறு நடைமுறைப்படுத்துவது (actual and practical) என்ற அனுபவக் கல்வியைப் பெறுவதற்கான அரிய தருணம் இது.
இத்தருணத்தில் மாணவர்கள் தமது பாடப் புத்தகங்களைப் படிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல், உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் அல்லது சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இக் கொடிய நோய்க்கு எதிராக எவ்வாறு போராடி வருகின்றன, என்னென்ன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன, பல்கலைக்கழகங்களின் அணுகுமுறைகள் எவ்வாறு உள்ளன, ஒவ்வொரு நாடும் இதை எவ்வாறு கையாளுகிறது என்பன போன்ற இணையம் வாயிலாகக் கிடைக்கக் கூடிய எண்ணற்ற தகவல்கள் எளிதாகக் கிடைக்கின்றன.
எனவே மாணவர்கள் இதனை விடுமுறையாகக் கருதாமல், இந்த காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி, அவற்றை அவர்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதையும் பதிவு செய்து வைத்துக் கொண்டார்கள் என்றால் பின்னாளில் மாணவர்கள் வேலைக்காக இன்டர்வியூவுக்குச் செல்லும்போது அந்தப் பதிவை எடுத்துச் செல்லலாம்.
மாணவர்களின் ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் இந்த ஆவணங்களின் வாயிலாக நேர்முகத் தேர்வு செய்யக்கூடியவர்களுக்குப் புரியும் என்பதால், மாணவர்களின் எண்ண ஓட்டங்கள் அந்த நிறுவனத்திற்கு வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கும் என்பதை அவர் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும். ஏனெனில் இந்த தருணத்தில் மாணவர்களால் ஆக்கப்பூர்வமாக எண்ணங்களை உருவாக்க முடியும். கண்டுபிடிப்புகள் என்பது பெரும்பான்மையாக இளவயது பருவத்திலேயே உருவாகிறது.
தமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி பல்வேறு நாடுகளின் சிறந்த முயற்சிகளை (best practices) மாணவர்கள் ஆவணப்படுத்தும்போது தம்மை அறியாமலேயே, இந்த CBL இந்த அழைக்கப்படக்கூடிய நடைமுறைக் கல்வியை கற்கிறார்கள். இந்த நடைமுறைக் கல்வியை எல்லா நிறுவனங்களுக்கும் இந்நாளில் மிகமிக அவசியமான ஒன்றாகக் கருதுகின்றன.
வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்தவர்கள் ஒரு லட்சம் பேர் எனில் அவர்களிலிருந்து இதுபோன்ற நடைமுறைக் கல்வியைக் கற்றவர்கள் தனித்துத் தெரிவார்கள். மாணவர்களின் முயற்சிகளைப் பிறர் புரிந்துகொண்டு மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளைப் பிறர் புரிந்து கொள்ள இது உதவும். எனவே மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த அல்லது தங்களுடைய விருப்பம் சார்ந்த எண்ணற்ற தகவல்களைச் சேகரித்து அவற்றை மாணவர்கள் தங்களுடைய பார்வையில் ஆவணப்படுத்துவது அவசியமாகும். பின் அதனை மிகவும் பாதுகாக்க வேண்டும். உதாரணமாக இவற்றை இணையத்தில் Blog - ஆக ஆவணப்படுத்தலாம். பின்னாளில் எப்போது வேண்டுமானாலும் இவற்றை இணையம் வாயிலாக எடுத்துக் கொள்ள முடியும்.
இதுபோன்று பள்ளி மாணவர்கள் தங்களது அனுபவத்தில் கரோனா தொற்று நோயின் காரணத்தை அறிந்து, நோய்த்தடுப்பு குறித்த தங்களது எண்ண ஓட்டங்களை தனியாக ஆவணப்படுத்தப்பட்ட வேண்டும். இதுபோன்ற புத்தாக்க முயற்சிகளில் கிடைக்கக் கூடிய அனுபவங்கள் பின்னாளில் நீங்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, மிகக் குறைவான நேரத்தில் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை உருவாக்கக்கூடிய பயிற்சிகளையும் மற்றும் பலன்களையும் தரக் கூடும்.
உலகில் எங்கேனும் ஏதேனும் இது சார்ந்த போட்டிகள் இருக்குமானால் அவற்றில் நீங்கள் பங்கேற்க முயற்சி செய்ய வேண்டும். இந்த அனுபவம் மிக அவசியம். பாடப் புத்தகங்களைத் தாண்டி இணையத்தில் ஆக்கப்பூர்வமான விஷயங்களை நீங்களும் தேட கற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக இதுபோன்ற ஒரு கொடிய நோயை ஏற்படுத்திய சூழ்நிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வாழும் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்; மற்றும் உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலதரப்பட்ட குடும்பங்களின் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகள் மேம்பட என்ன வேண்டும்; எவ்வாறு வேண்டும் என்பதில் மாணவர்களாகிய நீங்கள் சிந்தனைகளைச் செலுத்தினால், உங்களால் இயன்ற சிறு உதவிகள், ஆலோசனைகள் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நிலையில், மனநிலையில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

(தொடரும்)
கட்டுரையாசிரியர்
சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

