ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும்.இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் விவாதிக்கும் போது therefore மற்றும் thereby எனும் இரு சொற்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் வித்தியாசம் என்னவென அவன் மேலும் கேட்க ஜூலி முதலில் thereby, because, as, since ஆகிய வினையூக்கிகளின் பொருளையும் பயனையும் விளக்குகிறது. அப்போது since - ஐ கேட்பவர் அமெரிக்கரா? இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயரா எனத் தெரிந்து பயன்படுத்த வேண்டும் என ஜூலி குறிப்பாகச் சொல்கிறது. ஏன் என கணேஷ் கேட்கிறான். பதிலை அறிவோமா?
ஜூலி: Since Julie spent much of her earlier days listening to the Professor, her English language skills were sharpened என்கிற இந்த வாக்கியத்துக்கு என்ன அர்த்தம்?
கணேஷ்: ஏய்... இது எனக்குத் தெரியாதா?
ஜூலி: ஒரு விசயத்துக்காகத் தான் கேட்கிறேன். சொல்லு.
கணேஷ்: ஜூலி தன்னுடைய ஆரம்ப காலத்தை புரொபஸர் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு செலவழித்ததால், அவளது ஆங்கில அறிவு செறிவானது.
ஜூலி: ஆமாம். ஆனால் அது மட்டுமல்ல இந்த வாக்கியத்தின் அர்த்தம்.
கணேஷ்: வேறென்ன?
ஜுலி: Since last week I have been down with fever என கல்லூரியில் விடுப்பு கடிதத்தில் எழுதுவியே நினைவிருக்கா?
கணேஷ்: ஆமா...
ஜூலி: அதுக்கு என்ன அர்த்தம்? "கடந்த வாரத்தில் இருந்தே' எனத்தானே?
கணேஷ்: நீ சொல்றது சரிதான், sinceக்கு இன்னொரு அர்த்தமும் இருக்குது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருந்து ஒரு விசயம் நடந்துகிட்டு இருக்குதுன்னு சொல்ற பொருள். அங்கே sinceக்கு வேற பொருள். அது prepositionஆக வருகிறது. அதாவது in, on, at போல காலத்தில் ஒரு புள்ளியைக் குறிக்கிற ஒரு சொல்லாக.
ஜூலி: கரெக்ட். அதனால் தான் அந்த வாக்கியத்துக்கு முற்றிலும் வேறொரு அர்த்தம் வந்து விடுகிறது.
Since Julie spent much of her earlier days listening to the Professor, her English language skills were sharpened என்பதில் since ஒரு குறிப்பிட்ட காலப்புள்ளியில் இருந்து தொடர்ச்சியாக எனும் அர்த்தம் பெறுகிறது. "ஜூலி புரொபஸரின் பேச்சைக் கேட்டு வளர்ந்த ஆரம்ப காலத்தில் இருந்தே அவளது ஆங்கில அறிவு செறிவாக இருந்து வருகிறது' எனப் பொருள் வருகிறது.
கணேஷ்: அட, அர்த்தமே மாறிடுச்சே.
ஜூலி: ஆமாம். இன்னொரு விசயம் - அமெரிக்க ஆங்கிலத்தில் since வினையூக்கியாக செயல்படுகிறது. அதாவது இன்ன காரணத்தால் எனும் பொருள் வருகிறது. Since Kohli got out the Indian middle order began to crumble எனும் வாக்கியத்தை ஓர் அமெரிக்கன் படித்தால் கோலி அவுட் ஆன காரணத்தால் இந்தியாவின் மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் சரசரவென அவுட் ஆகினார்கள் எனப் புரிந்து கொள்வான். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கிலேயனோ இதை "கோலி அவுட் ஆனதில் இருந்தே மத்திய வரிசை வீரர்கள் வேகமாய் அவுட் ஆனார்கள்' என முற்றிலும் வேறுவிதமாய்ப் புரிந்து கொள்வான்.
கணேஷ்: இந்தியர்கள்?
ஜூலி: இந்தியர்கள் பிரிட்டீஷ் ஆங்கிலத்தைப் படித்து வளர்ந்ததால் இரண்டாவது அர்த்தபடி கோலி அவுட் ஆனதில் இருந்தே எனப் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஒண்ணு, இதை உன் புரிதலுக்காகத் தான் சொல்கிறேனே ஒழிய, ஸ்டிரிக்டாக அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், இந்தியர்கள் இப்படித்தான் புரிந்து கொள்வார்கள் என நினைக்க வேண்டாம். அமெரிக்க ஆங்கிலத்தில் since பயன்படுத்தப்படுவது போல பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் இல்லை என்பது தான் நான் சொல்வதன் சாரம்.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா

என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி
தொழிலாளியைக் கொன்று குளத்தில் வீசிய 2 போ் கைது

வீட்டுச் சுவா் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

