வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 266
ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின்வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர்.
அப்போது ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, ஆடுமேய்ப்பவர் ஆல் இன் ஆல் அழகுராஜாவும் அவரது ஆடான வள்ளியும் அங்கு வருகிறார்கள்.
அப்போது chew over something எனும் phrasal verb -ஐ என்று விளக்கியது தவறு என மன்னர் வீரபரகேசரி கூறுகிறார். சரி என்னதான் தவறு? பார்ப்போமா!
புரொபஸர்: என்ன தவறாக இருக்கும்?
வீரபரகேசரி: சொல்றேன். கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டிய தேவை ஏற்படும் போது நாம் செய்வதே chewing over something. எடுத்துக்காட்டாக, அண்மையில் என்னுடைய அமைச்சரவை ஒரு கோரிக்கையை வைத்தது. ஒரு மிக முக்கியமான பிரச்னை: நமது தேசிய விலங்காக பசுவா அல்லது ஆடா? எதைத் தேர்வு செய்வது? பசுவின் பாலானது எல்லாக் குழந்தைகளும் அருந்துவது. பன்னெடுங்காலமாக நாம் பசுவை வணங்கி வரும் ஒரு மக்கள் திரள். அதன் பால் புரதச் சத்து நிறைந்தது.
கணேஷ்: மேட்டருக்கு வாங்க மன்னா.
வீரபரகேசரி: இரு தம்பி... ஒரு பத்து நிமிடம் இப்படி பேசி பார்முக்கு வந்த பிறகு தான் எப்போதும் அறிவிப்புகளைச் செய்வேன். இப்படியே பேசிப் பழகிருச்சு. சரி விசயத்துக்கு வருகிறேன். நாங்கள் அதன் பிறகு ஆட்டைப் பற்றி யோசித்தோம். ஆட்டுப்பால் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆடு ஓர் அழகான விலங்கு. நம் அமைச்சரவையில் மாட்டுக்கு என ஓர் அமைச்சரை வைத்திருக்கிறோம். ஆட்டை விரும்பும் மக்களுக்குத் தான் ஒன்றும் இல்லையே... அதனால் ஆடு மேய்க்கிற மக்களை போற்றும் விதத்தில் அதையே தேசிய விலங்காக அறிவிக்கலாம் என முடிவெடுத்தோம். We chewed over it and then considering the pros and cons made the final decision.
கணேஷ்: மன்னா, அதென்ன pros and cons?
வீரபரகேசரி: The arguments for and against a thing } AÕRôu pros and cons. சாதக, பாதக அம்சங்கள். இது லத்தீன் idiomatic expression இன் சுருக்கமான வடிவம். ஒரிஜினலான சொலவடை pro et contra.
கணேஷ்: நன்றி மன்னா. Chew over- ஐ விளக்குனீங்க. ஒரு விசயத்தைப் பற்றி சும்மா யோசிப்பதை எப்படிச் சொல்வது?
வீரபரகேசரி: To chew on something. The Netflix documentary on Osho offers something to chew on. ஓஷோ குறித்த அண்மையில் வெளியான அந்த நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் நம் சிந்தனையைத் தூண்டும் விதமாக உள்ளது அல்லது யோசிக்க வைக்கும் விதமாக இருக்கிறது.
கணேஷ்: புரிகிறது மன்னா.
புரொபஸர்: ஆமாம், என் பயன்பாடு தப்பு தான். நன்றி மன்னரே.
ஆல் இன் ஆல் அழகுராஜா: புரொபஸரே, நீங்க அந்த வொர்க்ஷாப்புன்னு ஒன்னை சொன்னீங்களே, அதையும் விளக்கிருங்க.
புரொபஸர்: An idle mind is a devil’s workshop, அதானே? சரி சொல்றேன். Idle mind என்றால் சுறுசுறுப்பில்லாத, சோம்பலான மனம். நாம் ரொம்ப நேரம் ஒண்ணும் பண்ணாம இருந்தால் என்னவாகும்? மனசு தறிகெட்டு ஓடும், ஏதாவது தப்பா யோசிக்கும், நண்பர்களுக்கு இடையே சண்டை வரும், மக்களிடையே வாக்குவாதம் தோன்றி அது கும்பல் வன்முறையாக மாறும். ஆனால் ஒரு வேலை கொடுத்துப் பாருங்கள், எல்லா கெட்டதையும் மறந்து மனதைக் குவித்து வேலை செய்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதைத்தான் an idle mind is a devil’s workshop என்பார்கள். அதாவது சோம்பலாக இருப்பவர்களின் மனமானது சாத்தானின் பணிமனையாக மாறி விடும். எல்லா கெட்ட எண்ணங்களும் அங்கு பிறப்பெடுக்கும்.
வீரபரகேசரி: ஆமாம்... மிகவும் சரி. I dislike inefficient officials; I chew them out generally.
கணேஷ்: Inefficient என்றால் செய்கிற பணியை சரிவர முடிக்காமல் இருப்பது; நேரத்தையும் வாய்ப்புகளையும் சரியாக முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் இருப்பது. சரிங்களா?
வீரபரகேசரி: ஆமாம்.
கணேஷ்: அதென்ன chew out? வெற்றிலையை மாதிரி மென்னு துப்புறதா?
வீரபரகேசரி: கிட்டத்தட்ட.
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...