வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 262
ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அப்போது மயில்களுடன் ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, மயில்களையும் ஆடுகளையும் மேய்க்கிறவர்களும் வருகிறார்கள்.
அப்போது புரொபஸரிடம் கணேஷ் இரு சந்தேகங்களைக் கேட்கிறான். ஒருவர் காலமாகும் போது he is no more என ஏன் சொல்கிறார்கள், curry favor with someone ஆகிய பயன்பாடுகளின் பொருள் என்ன? இதற்கு
புரொபஸர் சொல்லும் பதில் என்ன எனப் பார்க்கலாம்.
புரொபஸர்: கணேஷ் உனக்கு நான் பிரியாணி செஞ்சு போடறேன்...
கணேஷ்: நீங்க போட்டதே இல்ல சார்.
புரொபஸர்: என்னால் முடிஞ்சதெல்லாம் சாம்பார் சாதம் தான்டா. சரி அதை விடு, இது சும்மா ஒரு கதைக்காக வச்சுக்குவோம்.
கணேஷ்: சரிங்க சார். பிரியாணி செமையா இருக்குது. இன்னும் கொஞ்சம் கொடுங்க.
புரொபஸர்: ஆமா, இப்போ இதை ஆங்கிலத்தில சொல்லு.
கணேஷ்: I want more.
புரொபஸர்: இந்த வாக்கியத்தில I என்பது வினையை ஆற்றுகிறவர். அதாவது subject. Want என்பது வினை. என்ன வேண்டும், ஏன் வேண்டும் என்கிற கேள்விகளுக்கு இந்த வாக்கியத்தில் பதிலுண்டா?
கணேஷ்: ம்ம்ம்... இல்லை. எனக்கு இன்னும் வேண்டும் எனும் பொருள் தான் வருகிறது, என்ன வேண்டும், ஏன் வேண்டும் என்பது இல்லை.
புரொபஸர்: வெரி குட். More என்பது want என்னும் வினையைப் பற்றிய கூடுதல் தகவலைத் தருகிறது. அதாவது இது வினையை சிறப்பிக்கிறது. Adverb ஆகிறது. Adverb என்றால் தமிழில் வினையடை. அடுத்து no more க்கு வருவோம். I want no more எனும் போது அங்கு இரண்டு வினையடைகள் வருகின்றன - No மற்றும் more ஒன்று மற்றொன்றை சிறப்பிக்கிறது. அதாவது more எனும் வினையடைக்கான பொருளுக்கு கூடுதலான ஒரு பொருளை no கொடுக்கிறது. இப்போது இதற்கு மேல் எனக்கு வேண்டாம் எனப் பொருள் வருகிறது. இதை no + more என இரண்டிரண்டாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அது closeup மாதிரி ஆகி விடும்.
கணேஷ்: அதென்ன சார் closeup பிரச்னை?
புரொபஸர்: அதாவது குளோசப் பற்பசை தெரியுமில்லையா? அப்போது என் பக்கத்து வீட்டு சிறுவன் ஒருத்தன் வந்து கேட்டான் - மாமா அதென்ன குளோசப்? Close என்றால் மூடு. Up என்றால் மேலே. வாயை எப்படி மேலாக மூட முடியுமுன்னு கேட்குறான். அடப்பாவின்னு நினைச்சுக்கிட்டேன்.
கணேஷ்: ஆமா, அதுவும் சரிதானே?
புரொபஸர்: அட நீ வேறே. Close up என்றால் up close என, வெகு அருகில் எனப் பொருள். ரொம்ப பக்கமாக ஒன்றைப் பார்ப்பதை I saw her close up என சொல்லலாம். When I saw her close up or when I saw her up close, she was not that pretty. பக்கத்தில் இருந்து பார்த்தால் அந்த பெண் ஒன்றும் அவ்வளவு அழகல்ல.
கணேஷ்: ஓ....
புரொபஸர்: குளோசப் என்கிற ஒரு ஷாட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா?
கணேஷ்: ஆமாம். பழைய சிவாஜி படத்தில் அவரை முகத்தசைகள் துடிக்க பெரிய திரையில் காண்பிப்பார்களே.
புரொபஸர்: ஆமாம் அதே தான். அந்த குளோசப்பில் come up close எனும் பிரயோகத்தின் சுருக்கமாகவே நாம் ஒருவரை பக்கத்தில் பார்ப்பதை சொல்கிறோம். அப்படித்தான் closeup என ஒரு பற்பசைக்கு பேர் வந்தது - அதில் பற்களை ரொம்ப பக்கத்தில் குளோசப்பாக காண்பிப்பார்கள். நாம் அதிலுள்ள up ஐ மேலே எனும் பொருளில் he looked up என புரிந்து கொள்ளக் கூடாது. இரண்டும் வேறு வேறு. He came close எனும் போது எப்படி வந்தார் என சொல்லும்படி close ஐ ஒரு வினையடையாகப் பயன்படுத்துகிறோம். He came up to me என்றால் அவர் என்னிடம் நெருங்கி வந்தார் எனப் பொருள். ரொம்ப நெருங்கி வந்தார் எனும் போது he came up close to me.
வீரபரகேசரி: மிகவும் சிறப்பாக விளக்கினீர்கள். நான் ஆட்சிக்கட்டிலில் ஏறும் முன்பு பொருளாதாரம் மோசமாக இருந்தது; வணிகர்கள் ஊரை விட்டே ஓடுகிறார்கள். Many closed up their businesses.
கணேஷ்: மன்னா, அவர்கள் கடையை அடைத்துக்கொண்டு போனார்கள்?
புரொபஸர்: இல்ல... இல்ல...
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...