47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இதற்குக் கூடவா... இணை​யம்?

"அவன் தலையில் ஒரு மண்ணும் இல்லை...'' என்று  சற்று அறிவு குறைந்தவர்களைச் சொல்வார்கள்.  ஆனால் அதைப் பற்றி பெரும்பாலானோர் கவலைப்படுவதில்லை.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 5:13 pm

மு.சுப்பிரமணி

"அவன் தலையில் ஒரு மண்ணும் இல்லை...'' என்று சற்று அறிவு குறைந்தவர்களைச் சொல்வார்கள். ஆனால் அதைப் பற்றி பெரும்பாலானோர் கவலைப்படுவதில்லை. தலையில் அறிவு இருக்கிறதோ இல்லையோ தலையில் முடி இருக்க வேண்டும். தலைமுடியை விதவிதமாக அன்றைய சினிமா ட்ரெண்ட்டுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டு வித்தியாசமாகக் காட்சி அளிக்க வேண்டும் என்பதே பல இளைஞர்களின் விருப்பமாக உள்ளது.
தலையில் முடி உதிரத் தொடங்கிவிட்டாலோ, பரம்பரை வழுக்கையை நோக்கி தலை நகரத் தொடங்கினோலோ, பல இளைஞர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகி விடுகிறது. படித்து ஒரு வேலையில் அமர்ந்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிற இளைஞர்கள் சிலருக்கு, திருமணம் வரைக்குமாவது வழுக்கை, தலைகாட்டக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறார்கள். தலைமுடியைப் பற்றிக் கவலைப்படுவதில் ஆண், பெண் வித்தியாசமெல்லாம் இல்லை.
இளம் வயதினர் தலைமுடியினை வளர்த்துக் கொள்வதிலும், அதனை அழகுபடுத்திக் கொள்வதிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர். தங்களது முடி கறுப்பு நிறத்திலிருந்து சிறிது வெள்ளை நிறத்துக்கு மாறத் தொடங்கி விட்டாலே, முடிக்குக் கறுப்பு அல்லது வேறு ஏதாவது பிடித்த நிறத்தின் சாயத்தைப் பூசித் தங்களது குறையினை மறைத்துக் கொள்ளவே பலரும் விரும்புகின்றனர்.
ஆனால், தலையில் வளர்ந்து கொண்டிருக்கும் முடி சிறிது உதிரத் தொடங்கி விட்டால், அதை நினைத்துப் பெரும் கவலையடையத் தொடங்கி விடுகின்றனர். தலைமுடி இழப்புக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்
பட்டாலும், கவலை கொள்ளும் மனமும், அதனால்
ஏற்படும் மன அழுத்தங்களுமே தலைமுடி இழப்புக்கு முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
தலைமுடிதானே என்று எல்லாராலும் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. தலைமுடியும் பல இடங்
களில் முதன்மைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் போது, தலை முடியை மொட்டையடித்துக் காணிக்கையாக வழங்குவதாக வேண்டிக் கொள்கிறோம். தாய், தந்தை இறப்பிற்குப் பின்பு செய்யப்படும் சில சடங்குகளில் தலைமுடியை மொட்டையடிக்கும் நடைமுறையும் உள்ளது. சில போட்டிகளில் தான் தோல்வியடைந்தால், மொட்டை அடித்துக் கொள்வதாகச் சவால் விடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் முடி மீண்டும் வளர்ந்து விடும் என்பதே... என்று சொல்லப்பட்டாலும், தலைமுடி முக அழகைக் கூட்டிக் காட்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இளம் வயதிலேயே நாம் வளர்க்கும் தலைமுடியினை இழந்து விடுவோமோ என்கிற அச்சம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் அச்சத்தைப் போக்கும் விதமாக, ஒருவருக்குத் தலைமுடி இழப்பு எப்படி இருக்கும்? என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஓர் இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் நம் தலை முடி இழப்புக்கான கணக்குக்கு சிறு தகவல்களை மட்டும் உள்ளீடு செய்தால் போதும். அதாவது முதலில் வயது உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பின்பு, கீழுள்ள முடியின் அமைப்புக்கேற்ற சில படங்களில் நமக்கேற்ற படத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்பு நம் மன அழுத்தம் குறித்த தகவலை சரியாகத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் கீழுள்ள குடும்பத்தினர் முடி இழப்பு குறித்த தகவலைத் தேர்வு செய்து கொண்டு கீழுள்ள கணக்கிடும் பொத்தானைச் சொடுக்க வேண்டும். உங்கள் முடி இழப்புக்கான முடிவுகள் சதவிகித அளவில் உடனடியாகத் தெரிந்து விடும்.
உங்கள் முடியைப் பற்றி முடிவு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியெனில், http://kwe​b​bel.net/h​airloss/ எனும் இணையப்பக்கத்திற்குப் பயணிக்கலாம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.