47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஃபேஸ்புக் புகைப்படங்களுக்கு காப்புரிமை!

புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்வகையில் வித்தியாசமாக எடுப்பதற்குத் தனித்திறமை வேண்டும்.

News image
Updated On :29 செப்டம்பர் 2020, 12:30 am

அ. சர்ஃப்ராஸ்


புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்வகையில் வித்தியாசமாக எடுப்பதற்குத் தனித்திறமை வேண்டும். ஒருவர்எடுத்த புகைப்படத்தை ஒரு முறை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிட்டால் போதும், உலகின் எந்த மூலையில் யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. இந்தப் பிரச்னை சமூக வலைதளங்கள் தொடங்கப்பட்டதில் இருந்தே உள்ளது. இதைத் தடுக்க ஃபேஸ் புக் நிறுவனம் முன்பு எடுத்த பல்வேறு முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் புதிய முயற்சியாக, புகைப்படத்தை முதலில் எடுத்தவர் உரிமைகோரி பதிவு செய்யும் சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அபார வளர்ச்சியடைந்துள்ளதால், புகைப்படங்கள், வீடியோக்களுக்கு காப்புரிமை அளிக்கும் புதிய சேவையை ஃபேஸ்புக் தொடங்கியுள்ளது. "ரைட்ஸ் மேனேஜர்' என்ற அந்த சேவை, புகைப்படங்களை எடுத்து அதைப் பதிவேற்றம் செய்தவருக்கு அவற்றின் காப்புரிமையை வழங்குகிறது. அந்த புகைப்படங்கள் வேறு ஒரு தளத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கான உரிமையைக் கோரவும் இந்த புதிய சேவை உதவுகிறது.

இந்த சேவையைப் பெற ஃபேஸ் புக்கில் உள்ள "ரைட்ஸ் மேனேஜர்' பக்கத்துக்குச் சென்று நீங்கள் காப்புரிமை பெற விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவை இணைத்து படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்பு அந்தப் புகைப்படம் ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என அதற்கென உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேட வேண்டும்.

அப்படி அந்தப் புகைப்படங்கள் வேறு எங்கேயாவது பயன்படுத்தப்பட்டிருந்தால் அவற்றைக் கண்காணிப்பது, தடை செய்வது, உரிமை கோருவது, ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் உரிமையைக் கோருவது என உரிமையாளருக்கு பல்வேறு விதமான தேர்வுகளைப் பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது.

ஃபேஸ்புக்கில் புதிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து பதிவேற்றம் செய்பவர்களுக்கு இது உதவும்.

"ரைட்ஸ் மேனேஜர்' சேவை தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஃபேஸ்புக் வழங்கி உள்ளது. விரைவில் இந்தச் சேவை அனைவக்கும் கிடைக்கும் என்றும் ஃபேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகைப்படங்களை வேறு நபர்கள் பதிவிறக்கம் செய்யாத அளவில் பூட்டி வைக்கும் சேவையை ஃபேஸ் புக் அளித்திருக்கும் நிலையில், இந்த "ரைட்ஸ் மேனேஜர்' சேவை பயன்பாட்டாளர்களுக்கு மேலும் பாதுகாப்பை அளிக்கிறது. இந்த புதிய சேவை இணைய புகைப்படத் திருட்டைத் தடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.