வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 290
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின்நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின்நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது தேர்தல் ஆணைய அமைச்சரின் வேடிக்கையான நடத்தையைக் கண்டு ஜூலி go ballistic எனும் சொற்றொடரைப் பயன்படுத்த அதன் பொருளை புரொபஸர் கணேஷுக்கு விளக்கப் போவதாகச் சொல்கிறார். Ballistic என்பது ஆயுதங்கள், ராணுவம் போன்ற விசயங்களுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகிற சொல்லாச்சே, இதற்கும் ராணுவத்துக்கும் என்ன சம்பந்தம் என கணேஷ் கேட்கிறான். இரண்டு கேள்விகளுக்கும் அவர் என்ன சொல்லப் போகிறார் எனத் தெரிந்து கொள்வோமா?
புரொபஸர்: Go ballistic என்றால் பயங்கரமாக ஆத்திரம் வந்து கத்துவது. When the king saw that the ministers are not regularly retweeting his tweets he went ballistic. அதாவது அரசர் தனது ட்வீட்களை தனது அமைச்சர்கள் தொடர்ந்து திரும்ப ட்வீட் செய்து மக்களிடம் பரப்பவில்ல எனத் தெரிந்ததும் பயங்கரமாகக் கோபப்பட்டார்.
கணேஷ்: ஆனா இதுக்கும் ராணுவத்துக்கும் என்ன சம்பந்தம்?
புரொபஸர்: Ballistics என்றால் a field of mechanics concerned with the launching, flight behavior and impact effects of projectiles, especially ranged weapon munitions such as bullets, unguided bombs, rockets or the like. அதாவது ஏவுகணைகள், குண்டுகள், ராக்கெட்டுகள் போன்றவற்றை ஏவுதல், வைத்து சுடுவது, தாக்குவது ஆகியவற்றைச் செய்யும் போது அவை எப்படி காற்றில் பயணிக்கின்றன, என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் துறை.
கணேஷ்: அதென்ன projectile?
புரொபஸர்: எறிகணை, ஏவுகணை, குண்டு போன்று எறியப்பட்டு தாக்குதல் தொடுக்கத்தக்கவை projectiles எனப்படும்.
ஓகேவா?
கணேஷ்: Munitions?
புரொபஸர்: ஆயுதங்கள், யுத்தக்கருவிகள்.
கணேஷ்: சார், இந்த ammunition என்கிற சொல் இதில் இருந்துதான் வருகிறதா?
புரொபஸர்: துப்பாக்கியில் பயன்படுத்தக் கூடிய தோட்டா, ஆர்ட்டிலெரி ஷெல் போன்றவை. ஆர்ட்டிலெரி தெரியும் இல்லையா? சில படங்களில் பார்த்திருப்பாயே பெரிய துப்பாக்கியின் முனையில் கூம்பு வடிவில் குண்டுடன் இருக்கும், அதை ஏவினால் ராக்கெட் போல குண்டு பறந்து போய் தாக்குமே....
கணேஷ்: ஆமா சார்.
புரொபஸர்: அதுதான் ஷெல். இவற்றை எல்லாம் சேர்த்து ஹம்ம்ன்ய்ண்ற்ண்ர்ய் என சொல்லுவோம். இன்னொரு பொருளிலும் இச்சொல்லைப் பயன்படுத்துவோம் - அதாவது ஒரு விவாதத்தின் போது நமக்குச் சாதகமாக அமையக் கூடிய சமாச்சாரங்கள், தகவல்கள், வாதங்கள் ஆகியவற்றை ஹம்ம்ன்ய்ண்ற்ண்ர்ய் எனச் சொல்வோம். உதாரணமாக, ஒரு சர்ச்சைக்குரிய அதிகாரி இருக்கிறார். அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என மேலதிகாரிகள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதி அது பரபரப்பை உண்டு பண்ணுகிறது. ஒரு தரப்பு அவருக்கு எதிராக மேலதிகாரிக்குப் புகார் அனுப்புகிறது. இப்போது இந்த புகாரானது அவருக்கு நடவடிக்கை எடுக்க ஒரு வசதியான ஆதாரமாக ஆகிறது. The controversial Facebook post and adversarial reactions to it served as ammunition for the superior officers who wanted to hang him out to dry.புரியுதா?
கணேஷ்: Hang out to dry என்றால் காயப் போடுறது தானே? அவரை ஏன் காயப்போடணும்? தண்டனை அல்லவா கொடுக்கணும்?
புரொபஸர்: ஒருவர் சிக்கலில் மாட்டியிருக்கும் போது அவரைக் காப்பாற்றாமல் மேலும் துயரப்படும்படி வேண்டுமென்றே தனிமைப்படுத்துவது, அநாதரவாக விடுவது தான் தான் hanging somebody out to dry. To leave someone in a dangerous or vulnerable situation. உதாரணமா, கடந்த வருடம் என் நண்பர் ஒருவர் ஒரு சேனலில் நெறியாளராக வேலை பார்த்தார். அவர் ஆளுங்கட்சிக்கு எதிராகப் பேசுகிறார் என தொடர்ந்து ஆளுங்கட்சி விசுவாசிகள் புகார் மேல் புகாராக அனுப்பி வந்தது. அப்போ பார்த்து பெருந்தொற்று ஏற்பட்டது. நிர்வாகம் இது தான் சாக்கென்று ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது. முதல் ஆளாக இவரை வெளியேற்றியது. இதுதான் hanging somebody out to dry. ஒரு பிரச்னை என வரும் போது ஓர் ஆளை திராட்டில் விடுவது.
கணேஷ்: அதை ஏன் உலர்த்தப் போடுவது என சொல்றாங்க?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...