தேவையான மென்பொருள்கள்... ஒரே தளத்தில்!

நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியில் வைரஸ் பாதிப்பினாலோ அல்லது வேறு காரணங்களாலோ நாம் பயன்படுத்தி வந்த இயங்குதளத்தை மீண்டும் புதிதாக நிறுவ வேண்டியிருக்கும். 
தேவையான மென்பொருள்கள்... ஒரே தளத்தில்!


நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியில் வைரஸ் பாதிப்பினாலோ அல்லது வேறு காரணங்களாலோ நாம் பயன்படுத்தி வந்த இயங்குதளத்தை மீண்டும் புதிதாக நிறுவ வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில் நாம் பயன்படுத்தி வந்த மென்பொருட்கள் அனைத்தையும் மீண்டும் நிறுவ வேண்டியதிருக்கும். நமக்குத் தேவையான இந்த மென்பொருள்களை நம் கணினியில் சேமித்து வைத்திருந்தாலோ அல்லது குறுந்தகடுகளில் பதிவு செய்து வைத்திருந்தாலோ கவலையில்லை. இல்லையெனில், ஒவ்வொரு மென்பொருளையும் தரவிறக்கம் செய்து கொள்ள குறிப்பிட்ட இணையதளத்தைத் தேட வேண்டியிருக்கும். இனி அந்தக் கவலை தேவையில்லை. ஒரு கணினிக்கு அவசியத் தேவையான மென்பொருள்கள் அனைத்தையும் தங்கள் தளத்தின் வழியாக நிறுவிக் கொள்ளும் வசதியுடன் ஓர் இணையதளம் செயல்படுகிறது.

நைன்டி எனும் இந்த இணையதளத்தில் அனைத்து மென்பொருட்களும் அப்டேட் செய்யப்பட்ட நிலையில் நம் கணினியில் நேரடியாக நிறுவிக் கொள்ளும்படி வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தத் தளத்தில் வெப் ப்ரெளசர்ஸ் எனும் தலைப்பில் குரோம், ஒபேரா, பயர்பாக்ஸ், எட்ஜ் எனும் நான்கு உலாவிகளுக்கான மென்பொருள்களும், செக்யூரிட்டி எனும் தலைப்பில் எசன்சியல், அவாஸ்ட், ஏவிஜி, மால்வேர்பைட் , ஆட்-அவேர், ஸ்பைபாட் , அவிரா, சூப்பர் எனும் எட்டு பாதுகாப்பிற்கான மென்பொருள்களும் இடம் பெற்றிருக்கின்றன.

டெவலப்பர் டூல்ஸ் எனும் தலைப்பின் கீழ் பைதான், பைல்ஜில்லா, நோட்பேட் ++, ஜேடிகே8 , ஜேடிகே எக்ஸ் 64 8 , வின் எஸ்சிபி, புட்டி , வின்மெர்ஜ், எக்லிப்ஸ் உள்ளிட்ட பதினாறு வகையான கருவிகளும், மெசேஜிங் எனும் தலைப்பில் ஸ்கைபீ, பிட்ஜின், தண்டர்பேர்டு, டிரில்லியன், எய்ம், யாகூ எனும் ஆறு வகையான செய்தி அனுப்புவதற்கான மென்பொருள்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆன்லைன் ஸ்டோரேஜ் எனும் தலைப்பின் கீழ் டிராப்பாக்ஸ், கூகுள் டிரை, ஒன்டிரைவ், சுகர்சிங்க், பிட் டோரண்ட் சிங்க்எனும் நான்கு தேக்ககங்களும், மீடியா எனும் தலைப்பில் ஐடியூன்ஸ், விஎல்சி, கேஎம் பிளேயர், ஏஐஎம்பி, பூபர்2000, வின் ஆம்ப், ஆடாசிட்டி, கே-லைட் கோடெக்ஸ், ஜிஓஎம் , ஸ்பாட்டிபை, சிசிசிபி), மீடியா மங்கி, ஹேண்ட்பிரேக் எனும் ஊடகங்களுக்கான மென்பொருள்களும் இடம் பெற்றிருக்கின்றன.

ரன்டைம்ஸ் எனும் தலைப்பில் ஜாவா 8, நெட் 4.6 , சில்வர்லைட் எனும் மென்பொருள்களும், கோப்பு பகிர்தல் எனும் தலைப்பில் கியூபிட்டோரண்ட் , ஈமியூல் என்பவையும், கம்ப்ரெஸ்ஸன் எனும் தலைப்பில் 7- ஜிப், பியாஜிப், வின்ஆர்ஏஆர் என்பவையும் இருக்கின்றன.

இமேஜிங் எனும் தலைப்பில் கிரிட்டா, பிளெண்டர், பெயிண்ட்.நெட், ஜிம்ப் , இர்பான்வியூ, எக்ùஸன்வியூ, இங்க்ஸ்கேப், பாஸ்ட்ஸ்டோன், கிரீன்சாட், ஷேரெக்ஸ் எனும் மென்பொருள்களும், யுட்டிலிட்டிஸ் எனும் தலைப்பில் டீம்வியூவர், இமேஜ்பர்ன், ஆஸ்லோசிக்ஸ், ரியல் விஎன்சி, டெராகாபி, சிடிபர்னர்எக்ஸ்பி, ரிவோ, லான்சி, விண்டிர்ஸ்டேட், கிளாரி, இன்ஃபிராரிகார்டர் , கிளாசிக் ஸ்டார்ட் போன்றவையும் இடம் பெற்றிருக்கின்றன.

டாக்குமென்ட்ஸ் எனும் தலைப்பின் கீழ் ஓபன் ஆபிஸ், சுமத்ரா பிடிஎப் , பாக்ஸிட் ரீடர், கியூட் பிடிஎப் , லிபர் ஆபிஸ் என்பவைகளும், ஃபைல் ஷேரிங் எனும் தலைப்பின் கீழ் கியூபிட்டோரெண்ட் உள்ளது. கம்ப்ரெஸ்ஸன் எனும் தலைப்பின் கீழ் 7ஜிப், பீஜிப், வின் ஆர்ஏஆர் என்பவையும், அதர்ஸ் எனும் தலைப்பில் எவர்நோட், கூகுள் எர்த், ஸ்டீம், கீபாஸ் 2, எவரிதிங், என்வி ஆக்சஸ் போன்றவையும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த மென்பொருள்களில் நமக்குத் தேவையானதைத் தேர்வு செய்து கீழ்ப்பகுதியிலுள்ள கெட் இன்ஸ்டாலர் எனுமிடத்தில் கிளிக் செய்து நம் கணினியில் குறிப்பிட்ட மென்பொருள்களை நிறுவிக் கொள்ள முடியும். இது போல் மேற்காணும் மென்பொருள்கள் நம்முடைய கணினியில் நிறுவப்பட்டிருந்தால் அந்த மென்பொருள்களை அப்டேட் செய்து கொள்ளவும் முடியும். இந்தத் தளத்திலிருந்து நேரடியாக ஒரே நேரத்தில் மென்பொருள்களை நிறுவுவதால் மென்பொருள் நிறுவுதலுக்கான நேரத்தைச் சேமிக்க முடியும்.

உங்கள் கணினிக்குத் தேவையான மென்பொருள்களைப் புதிதாக நிறுவிட விரும்பினாலும், உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள்களை இற்றைப்படுத்த விரும்பினாலும் https://ninite.com/  எனும் இணைய முகவரிக்குச் சென்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com