வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 322
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மனிதவளத்துறை அமைச்சரும் அவருடைய மகனும் நாற்பது போராட்டக்காரர்கள் மீது தேர்களை ஏற்றிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுகிறது. மன்னர் வீரபரகேசரி அமைச்சரின் மகனிடம் இதைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது சில ஆங்கிலச் சொற்கள் குறித்த விளக்கங்களை அவர்கள் விவாதிக்கிறார்கள். அதை ஒட்டி shampoo என்பது எப்படி ஒரு வினைச்சொல்லாகவும், பெயர்ச்சொல்லாகவும் ஒரே சமயம் இருக்க முடிகிறது என்று ஜூலி விளக்கிட, அது ஏன் தமிழில் அப்படி இல்லை என்று கணேஷ் கேட்கிறான். இரண்டு மொழிகளுக்குமான இந்த வித்தியாசம் என்னவென அறிவோமா?
ஜூலி: ஆமாம், கணேஷ். நீ சொல்றது சரி தான். நாம் இப்போதெல்லாம் கடையில் போய் கூகிள்பே பண்ணவா, பேடிஎம் பண்ணவா என்று கேட்கிறோமே. இரண்டுமே பெயர்ச்சொற்கள். ஆனால் மக்களின் புழக்கத்தில் அவை சுலபத்தில் வினைச்சொற்கள் ஆகி விடுகின்றன.
கணேஷ்: ஆனால் தமிழில் அந்தப் பழக்கம் இல்லை தானே. போன் பண்ணட்டுமா எனக் கேட்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் shall I phone you என்று எளிமையாக முடித்து
விடுகிறார்கள். அப்படித்தானே?
ஜூலி: ஆமாம். அது தான் இரண்டு மொழிகளுக்குமான வித்தியாசம். தமிழில் பெயர்ச்சொல் உடலென்றால், வினைச்சொல் மனம். இரண்டையும் பிரிக்கவோ ஒன்றை மற்றொன்றாக்குவதோ சுலபம் அல்ல. நம் பண்பாடு, தத்துவம் எல்லாம் வித்தியாசமானது. சரி அது போகட்டும், இந்த ஷாம்பூ என்பதே ஆங்கிலச்சொல் இல்லை என்பது உனக்குத் தெரியுமா?
கணேஷ்: என்னது... ஷாம்பூ ஆங்கிலச் சொல் இல்லையா?
ஜூலி: ஆமா. அது மட்டுமல்ல. அது ஓர் இந்திய
வார்த்தையில் இருந்து, இன்னும் குறிப்பா சொல்வதானால் அது ஒரு இந்திச் சொல்லில் இருந்து பிறந்தது எனக் கூறினால் நம்புவியா?
கணேஷ்: இனிமேல் நீ என்ன சொன்னாலும் நம்புறேன். இப்படி கேள்வி மேல் கேள்வியா கேட்காதே, என்னா?
ஜூலி: க்ர்ர்ர்... சரி போகட்டும். இந்தியில் chhampo என ஒரு வார்த்தை உண்டு.
கணேஷ்: அதன் பொருள் ஏதாவது புராதன மூலிகை ஷாம்பூவா?
ஜூலி: அதான் இல்ல. அதன் பொருள் "அழுத்தி விடுவது'. அதாவது மசாஜ் பண்ணுவது.
கணேஷ்: என்ன இது கதை செம கில்மாவா போகுது.
(மன்னர் வீரபரகேசியின் காதில் அச்சொல் விழ)
மன்னர் வீரபரகேசி: யாரோட அம்மா?
கணேஷ் (வீரபரகேசரியிடம்): மன்னர் மன்னா... அது அம்மா அல்ல, கில்மா.
மன்னர் வீரபரகேசரி: ஏதோ ஒன்று, கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த நேர நெருக்கடியில் நானும் என் கேள்வி அறிவை பெருக்கிக் கொள்கிறேனே. சொல்லும் நாயாரே!
ஜூலி: Turkish bath ritual கேள்விப்பட்டிருக்கியா?
கணேஷ்: ஹமாம் என்று சொல்லுவார்களே steam bath அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த கட்டை சாயும் முன் அதையெல்லாம் அனுபவிச்சிரணும்.
(மன்னர் வீரபரகேசரி சிரிக்கிறார்)
கணேஷ்: ஏன் மன்னா சிரிக்கிறீர்கள்?
மன்னர் வீரபரகேசரி: ஜெர்மன் மொழியில் ஒரு பழமொழி உண்டு. Tomaten aur den Augean haben
கணேஷ்: மன்னா எனக்கு இங்கிலீஷே ததிம்திததோம். இதில ஜெர்மன் வேறே.
மன்னர் வீரபரகேசரி: ஹா... ஹா... ஆங்கிலத்தில் இதை you have tomatoes on your eyes என்று மொழிபெயர்க்கலாம். அதாவது உன் கண்களில் தக்காளிகள் இருக்கின்றன.
கணேஷ்: என்னது கண்ணில் தக்காளியா? ஏன்?
மன்னர் வீரபரகேசரி: கண்ணுக்கு மேலே தக்காளி இருந்தால் என்னவாகும்?
கணேஷ்: பார்க்க முடியாது.
மன்னர் வீரபரகேசரி: மிகவும் சரி. கண்ணுக்கு முன்னால் இருக்கிற ஒன்று கூட அப்போது உமது பார்வைக்குப் புலப்படாது. புரிகிறதா?
கணேஷ்: ஆம் மன்னா. அதற்கும் இந்த துருக்கிய
ள்ற்ங்ஹம் க்ஷஹற்ட்க்கும் என்ன சம்பந்தம்?
மன்னர் வீரபரகேசரி: யோசி.
கணேஷ்: ஓ... ஓ... புரிந்து விட்டது மன்னா. நீங்கள் தான் மன்னர்களின் மன்னன். இந்த அரண்மனையிலேயே steam bath இருக்கிறது. நான் தான் இத்தனை நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
மன்னர் வீரபரகேசரி: ஆம்.
கணேஷ்: ஆஹா... நான் இனி நிறைய சம்பாதித்து விமான டிக்கெட்டுக்கு செலவு செய்து அங்கு போகத் தேவையில்லை.
மன்னர் வீரபரகேசரி: வங்ள். Yes. You can slide in on a shrimp sandwich.
கணேஷ்: நான் சாண்ட்விச்சை சாப்பிட்டபடியே அங்கே போகணுமா?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...