தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இணைய வெளியினிலே...

மொழி என்பது கலாசாரம்,  பண்பாடுகளை  வைத்துப் பாதுகாக்கும்  ஒரு களஞ்சியம்.

News image
Updated On :21 டிசம்பர் 2021, 12:30 am

DIN

முக நூலிலிருந்து....


ஒவ்வொரு மகிழ்ச்சியும்
தன் கையில்
கண்ணீரில் நனைந்த
ஒரு கைக்குட்டையை
மறைத்து வைத்தேயிருக்கிறது.

இந்திரன் ராஜேந்திரன்

நேற்றைய பேருந்து 
பயணத்தில்
சிறுமி ஒருத்தி...
கண்ணை நோண்டி 
விடுவதாகவும்
மூக்கை அறுத்து 
விடுவதாகவும்
முகத்தைக் கோரமாகவும் 
செய்து,
என்னை மிரட்டிக் 
கொண்டிருந்தாள். 
நான் தான்
எதற்கு வம்பு என 
சிரித்து வைத்து விட்டு 
வந்தேன்.

தி. ச. சந்திர சேகர்


நம் முன்னே 
கொட்டிக்கிடக்கும் 
வெள்ளைத் தாள்களே
நம் வாழ்க்கை.
அதைக்கொண்டு
ஓவியம் வரையலாம்
கவிதை கிறுக்கலாம்
கதைகள் எழுதலாம்
கிழித்து போடலாம்
கசக்கி எறியலாம்
அவரவர் விருப்பங்களே !
ரவி பாரதி

சுட்டுரையிலிருந்து...

தலைக்கு வந்தது,
குடையோடு போனது...
மழைத்துளி.

"வி'சித்திரன்

நிலையானது
பணமோ, 
பொருளோ இல்லை... 
தன்னம்பிக்கை தரும் 
மனது மட்டுமே. 

ரீனா


இன்ஃபிரீயாரிட்டில இருக்கறது 
கூட தப்பில்ல... 
தான் பெரிய ஆள்ன்னு நெனப்புல மெதந்துக்கிட்டு,
அந்த அதுப்புல 
அடுத்தவங்கள மட்டமா பாக்கறவங்க
இருக்காங்க பாருங்க... 
அவங்க தான் இம்சைகள். 

ராகவ்

நாம் பிறருக்குத் தேவை என்றால் 
கண்டு கொள்ளப்படுகிறோம்; 
கவனிக்கப்படுகிறோம். 
அதுவே தேவையில்லை என்றால் 
காயப்படுத்தப்படுகிறோம்;
கழட்டி விடப்படுகிறோம். 

ஆதர்ஷினி

வலைதளத்திலிருந்து...

மொழி என்பது கலாசாரம்,  பண்பாடுகளை  வைத்துப் பாதுகாக்கும்  ஒரு களஞ்சியம். மொழியை அறிந்தால் மட்டுமே  கலாசாரத்தை அறிய முடியும். புரட்சிக்கு முன்பான ரஷ்ய,  பிரான்சிய கலாசாரங்கள் புரிய மொழி தெரிய வேண்டும். அதேபோல் கிரேக்க கலாசாரத்தை நாம் தெரிந்து கொள்வது எப்படி?
பண்டைய எகிப்தியர்களது கலாசாரத்தை அறிவதற்கு எகிப்தியல் அறிஞர்களுக்கு முதலில் ஹைரோகிளிப்ஸ் என்ற பண்டைய எகிப்திய மொழி தெரிய வேண்டும் .

மொழி மனிதர்களின் அடிப்படையான குணாம்சங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.  டால்ஸ்டாயின்- ரஷ்ய அனா கரினீனாவும்,  குஸ்டாவ் ஃப்ளூபர்ட்டினது   மாடம் போவரியும்,  நமது  கோகிலாம்பாளும்  தங்களுக்குப் பிடித்த துணையைத் தொடர்ச்சியாகத்  தேடும்போது அங்கு தற்கொலைகள்,   கொலை நடக்கிறது.
மானிட உணர்வுகள் அடிப்படையில் ஒன்றானவை - இது உயிரியலால் விதிக்கப்பட்ட செயற்பாடு.
மொழியை அறிவதன் மூலம் புதிய வகையான இலக்கியங்களை அறிய முடிகிறது. புராணம், இதிகாசம், காப்பியம் என்று மட்டுமிருந்த எமது இலக்கிய மொழி,  மேற்கு நாட்டு இலக்கியங்களால் வளமடைந்தது.  நவீனத் தமிழை நமக்கு அறிமுகப்படுத்திய பாரதி,  புதுமைப்பித்தன் ஆங்கிலப்  புலமை பெற்றவர்கள். 
மொழிபெயர்ப்பு நமக்குச் சிறந்த புத்தகத்தைத் தரும் . எமது வாழ்வு அதிக காலமானது அல்ல. இக்காலத்தில் சிறந்ததை மட்டும் வாசிப்பது என்றால் நாம் மொழி பெயர்ப்புகளைத் தேடவேண்டும். 

‌h‌t‌t‌p‌s://‌n‌o‌e‌l‌n​a‌d‌e‌s​a‌n.​c‌o‌m/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.