வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 280
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. தேர்தல் ஆணைய குறுநில மன்னர் ராஜராஜ கம்பீர சேதிராயன் நடக்கவிருக்கும் தேர்தலை நடத்தும் பொருட்டு ஒரு புது எந்திரத்தை கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி அதைக் கொண்டு வருகிறார். அது மூட்டை ஒன்றை சுமந்த, அதன் மீது பட்டுசால்வை போர்த்திய நான்கு கால் பிராணி. இதைக் கண்ட பின் ஏமாற்றமடையும் கணேஷ் மற்றும் புரொபஸர் இடையே இது குறித்து ஓர் உரையாடல் நிகழ்கிறது.
கணேஷ்: சார் இந்த கழுதையைக் கொண்டு வந்து விட்டையைப் போட வச்சதையே பெரிய அறிவியல் கண்டுபிடிப்புன்னு சொன்னாங்க?
புரொபஸர்: ச்சூ! மெல்லப் பேசு. கழுத்து மேல தலை இருக்கணுமா வேணாமா?
கணேஷ் (கழுத்தை தடவிப் பார்த்து): வேணும் சார். ஆனா சார்... இந்த கோமாளித்தனத்தை எல்லாம் ஏன் யாரும் expose பண்ண மாட்டேங்குறாங்க.
புரொபஸர்: Because people do not want to play with fire. சர்வாதிகாரிக்குப் பிடிக்காத விதமாய் விமர்சிக்கிறவர்கள் தேசதுரோகிகள் என அறிவிக்கப்படுவார்களே...
எல்லாருக்கும் பயம் தான்.
கணேஷ்: சார் நெருப்போடு விளையாடக் கூடாதுன்னு ஊரில் சொல்வாங்களே, அதுதான் playing with fire ஆ?
புரொபஸர்: ஆமா, தேவையில்லாத ரிஸ்க் எடுக்கிறது. இன்னொரு idiomatic expression - to stay out of harm’s way. It is common for people to wish to stay out of harm’s way. அதாவது ஆபத்தை விலை கொடுத்து வாங்காம இருக்க முயல்வது மக்களின் பொதுவான சுபாவம். எல்லாருக்கும் கோபம், விமர்சனம், வருத்தம் இருக்கும். ஆனால் அடுத்தவர்கள் அமைதியாக இருப்பதைப் பார்த்து இவர்களும் வாயைத் திறக்காமல் சர்வாதிகாரிக்கு ஆதரவாளர்கள் என தம்மைக் காட்டிக் கொள்வார்கள். Just to save their skin.
கணேஷ்: தோலைக் காப்பாற்றிக் கொள்வதா?
புரொபஸர்: அது ஒரு idiomatic expression. அதை நேரடியாக பொருள் கொள்ளக் கூடாது. நஹஸ்ங் ற்ட்ங் ள்ந்ண்ய் என்றால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது.
To prevent something bad from happening to someone.
கணேஷ்: ஓகே சார். ஒரு கேள்வி.
புரொபஸர்: கேளு.
கணேஷ்: இதுக்கு ஒரு தீர்வு இல்லையா? நாம வாயை முடித்தான் இருந்தா
கணுமா?
புரொபஸர்: நிச்சயமா இல்லடா. உன் தலைமுறையோட ஒரு பிரச்னை, பொறுமை இல்லைங்குறது. You don’t take a step at a time.
கணேஷ்: அதாவது படிப்படியாய் போறது.
புரொபஸர்: ஆமா. To hold your horses.
கணேஷ்: அதாவது குதிரையைக் கெட்டியாப் பிடிச்சுக்கிறதா?
புரொபஸர்: இல்லை, குதிரையுடைய கடிவாளத்தைப் பிடித்து அது ரொம்ப வேகமாப் போகாமக் கட்டுப்படுத்துறது அல்லது ஒரே இடத்தில் நின்று காத்திருக்கும்படியா பண்ணுறது. இது பழங்கால குதிரைப் பந்தயத்தில் இருந்து வரும் ஒரு சொலவடை. அதாவது ஆதி கிரேக்க, ரோமானிய சமூகங்களில் குதிரைப் போட்டிகளில், குதிரை வண்டி போட்டிகள் நடக்கும் போது பாய்ந்து செல்லும் வண்டிகள் நடுவே யாரொருவருக்கு எப்போது தன் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து பொறுமையாக இருந்து, சரியான நேரத்தில் வேகமெடுத்து முன்னேறத் தெரிகிறதோ அவரே வெல்வார். ஆகையால் பொறுமை மற்றும் புத்திசாலித்தனத்தை குறிப்பிட இந்த idiom பயன்படுத்தப்படுகிறது. உதாரணமா, ஒரு கடைக்குப் போய் ஒரு பொருளைப் பார்த்ததுமே வாங்கலாம் எனப் பாயாமல் இன்னும் சில கடைகளுக்குப் போய் விசாரிச்சு போதுமான தகவல்களைச் சேகரித்த பிறகு முடிவெடுத்து வாங்குவது holding your horses until you have visited enough shops to finally choose the product you are going to buy. இந்த விசயத்திலும், மக்கள் இது போல பொறுமையாக சமயோஜிதமாக இருக்க வேண்டும். சர்வாதிகாரியை எதிர்க்க வேண்டிய நேரத்துக்காக பொறுமை காக்க வேண்டும். Right now, you better ride out the storm.
.
கணேஷ்: அப்படீன்னா?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...