வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 281
ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது ride out the storm எனும் சொற்றொடரை பரஸ்பரம் பயன்படுத்துகிறார்கள். அதன் பொருள் என்ன என கணேஷ் கேட்கிறான்.
புரொபஸர்: இது ஒரு nautical idiom.
கணேஷ்: ஆங்?
புரொபஸர்: அதாவது கப்பல் பயணத்தின் அனுபவங்களை ஒட்டி தோன்றிய ஒரு சொற்றொடர்.
கணேஷ்: ஓ! அதனால் தான் புயல் பற்றி சொல்லுகிறார்களா? ஆனால் புயலுக்கும் பொறுமைக்கும் என்ன சம்பந்தம்?
புரொபஸர்: நீ ஒரு கப்பலின் மாலுமி. பெரும் புயல் ஒன்று அடிக்கிறது. பேரலைகள் எழுகின்றன. கப்பல் தள்ளாடுகிறது. நீ என்ன பண்ணுவாய்?
கணேஷ்: புயலில் இருந்து தப்பிச்சு வேறிடத்துக்கு போய் விடுவேன்.
புரொபஸர்: கடலில் அப்படித் தப்பிக்க முடியாது தம்பி. you are in the eye of a storm. எங்கே பார்த்தாலும் புயல், மழை, பேரலைகள். என்ன பண்ணுவே?
கணேஷ்: தெரியல. ஆனா புயலுக்குக் கண்ணு இருக்குதா?
புரொபஸர்: Eye of a storm என்றால் கடலில் புயலின் போது தோன்றும் ஒரு பெரிய சுழல். தன் நடுவே மாட்டியவர்களைக் கண்ணைச் சுற்றி இமைகள் உள்ளது போன்றே ஒரு மேடான நீர் அரண் தோன்றி தப்பிக்க விடாமல் பண்ணுகிறது. இது ரொம்ப ரொம்ப ஆபத்தானது. சரி அதை விடு. ஒரு சாதாரணப் புயல் . உன்னால் கப்பலை கப்பலை வேறு திசையில் செலுத்த முடியவில்லை. என்ன பண்ணுவாய்?
கணேஷ்: சமாளிக்க டிரை பண்ணுவேன். புயலுக்கு எதிர்த்தாற் போல கப்பலைச் செலுத்தினால் அது உடைந்து போகும். திருப்பி வேகமாய் போகளம் முடியாது என்பதால், முடிந்த அளளக்கு அந்த இடத்திலேயே நின்று சமாளிக்க முடியுமா எனப் பார்ப்பேன். ஓரளளக்கு புயலின் இழுப்புக்கு ஈடுகொடுத்து செல்லப் பார்ப்பேன்.
புரொபஸர்: வெரி குட். இது தான் riding out a storm. இதையே நீ வாழ்க்கையில் கடும் நெருக்கடிகள், பெரிய ஆபத்துகள் நேரும் போது செய்தால் அது ஆபத்துகளை, சிக்கல்களைத் தீர்க்க முயலாமல் உன்னை தக்க வைத்து காத்திருப்பது என பொருள் வரும். உதாரணமாக, ஒரு நோய்த்தொற்று பரவி நகரமே பரிதவிக்கிறது. மக்கள் வேலையை இழக்கிறார்கள். கையிருப்புப் பணம் குறைந்து கொண்டே வருகிறது. உடனடியாக வேலையோ கடனோ கிடைக்காது. அதனால் புதிய வணிகம் ஒன்றை தொடங்கவோ புதிய நல்ல வேலைகளை உடனடியாய் பெறுவதோ சுலபமாக இருக்காது. என்ன பண்ணலாம்? பெரிய ரிஸ்க் எடுக்காமல் இருக்கிற பணத்தை வைத்துச் சமாளிக்கலாம். சின்னச் சின்ன வேலைகள் செய்து உன்னையும் உன் குடும்பத்தையும் பாதுகாத்து, ஒரு நல்ல சூழல் ஏற்படும் வரை நீ சுதாரித்துக் கொள்ளலாம். அதாவது நல்ல காலம் வரும் வரை பொறுமையாக உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கைப் போல இருக்கலாம். அதுதான் riding out a storm.
கணேஷ்: சார் எனக்கு இந்த சொற்றொடர் பிடித்திருக்கிறது. நம்பிக்கையூட்டும் சொற்றொடராக இருக்கிறது.
புரொபஸர்: ஆமா. இதற்கு எதிர்நிலையிலான idioms உண்டு தெரியுமா? Put your head on the block.
கணேஷ்: Block என்றால்?
புரொபஸர்: பழங்காலத்தில் குற்றவாளிகளை வாளாலோ கிலெட்டின் போன்ற தலைவெட்டு கருவிகளாலோ தலையை வெட்டிக் கொன்று மரண தண்டனை அளிக்கும் வழக்கம் இருந்தது. அப்போது தலை வெட்டப்படும் ஆள் தன் தலையை ஒரு மரக்கட்டையால் ஆன மேடை மீது வைப்பார். அதுதான் க்ஷப்ர்ஸ்ரீந். புரிகிறதா?
கணேஷ்: ஓ... நன்றாக. அதாவது உயிரைப் பணயம் வைக்கும்படியான ஆபத்துகளை மேற்கொள்ளுவது.
புரொபஸர்: இந்த மாதிரியான நெருக்கடியான காலத்தில் ஒருவர் தன் இருப்பில் உள்ள பணத்தை, தங்கத்தை தொழிலில் முடக்குவது, அவசரத்துக்காக பெரிய தொகையைக் கடன் வாங்குவது, உணர்ச்சிவசப்பட்டு வேலையை விடுவது ஆகியவை தற்போதைய வாழ்க்கையை உறுதியில்லாத எதிர்காலத்துக்காக பணயம் வைப்பதற்கு சமம். அதாவது when you put yourself in a precarious situation during a pandemic it is an act of placing your head on the block.
கணேஷ்: அதென்ன precarious?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...