விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 275

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:30 am

ஆர்.அபி​லாஷ்


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அங்கு மன்னரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது sycophant என்றால் "ஜால்ரா அடிப்பவர்' என புரொபஸர் விளக்க, அதற்கு முன்பு முழுக்க வேறோர் அர்த்தம் இருந்தது என ஜூலி சொல்கிறது. அதென்ன விசயம்? பார்ப்போமா!

புரொபஸர்: ஜூலி சொல்வது உண்மை தான். Defamation charge என கேள்விப்பட்டிருக்கிறாயா?

கணேஷ்: ஆமா சார்... மானநஷ்ட குற்றம்.

புரொபஸர்: கரெக்ட். Fame என்றால் புகழ். Defame என்றால் ஒருவரது நற்பெயருக்கு களங்கம் சுமத்துவது. இப்படி செய்பவர் மீது defamation charge சுமத்தலாம். வழக்கு தொடுக்கலாம். ஏன் ஒருவரை மற்றொருவர் defame செய்யணும்? 

கணேஷ்: பழிவாங்க. அசிங்கப்படுத்த. 

புரொபஸர்: ஆமா. பொய் வழக்குகளை ஜோடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் ஒருவரை அவமானப்படுத்தி அவருக்கு நீங்காத அவப்பெயரை உண்டு பண்ண முடியும். உதாரணமாய், பலாத்கார, பாலியல் குற்றச்சாட்டுகள். அந்தக் குற்றச்சாட்டுகளைக் கொடுப்பவர் நீதிமன்றத்துக்கு போகாதபட்சத்திலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது அவப்பழி ஏற்படும். 

அதனால் குற்றம் சாட்டப்பட்டவரே நீதிமன்றம் சென்று தன்னை குற்றம் சுமத்தியவர் மீது வழக்குத்தொடுப்பார். பல வருடங்கள் நீடிக்கும் வழக்கின் முடிவில் அவர் குற்றமற்றவர், அவர் மீது களங்கம் ஆதாரமில்லாமல் சுமத்தப்பட்டிருக்கிறது என தெரிய வந்தால் கூட சமூகத்தில் அது பெரிய கவனம் பெறாது; களங்கம் அப்படியே நிலைக்கும். ஒருமுறை சேற்றை அடித்தால் அந்த கறை மாறாது. இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. 

ஆதி கிரேக்கத்தில் எளிய அமைப்பு கொண்ட நீதிமன்றங்கள் இருந்தன. அங்கு ஒருவர் குற்றம் சாட்டுவார். அரசுத் தரப்பு வக்கீல் அதைப் பரிசீலித்து வழக்கை நடத்துவார். குற்றம் சாட்டப்பட்டவர் வந்து தன் தரப்பை நியாயப்படுத்த வேண்டும். இந்த அமைப்பில் சிலரை அவமதிக்கும் நோக்கில் பொய் வழக்குகள் தொடுப்பது அதிகமாகியது. அப்போது இத்தகைய பொய் வழக்கு கொடுக்கும் litigants I sychophants என அழைக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

கணேஷ்: சார் இதற்கும் சைக்கோவுக்கும் சம்பந்தமில்லையே? 

புரொபஸர்:  இல்லை. அதனால் தான் இச்சொல்லை p எனும் எழுத்துடன் தொடங்க மாட்டார்கள். Psychர் எனும் போது p எனும் எழுத்துடன் துவங்குவோம், ஆனால் உச்சரிப்பு ரெண்டிலும் ஒரே மாதிரி இருக்கும். அது psykho எனும் கிரேக்க சொல்லி இருந்து தோன்றியது. Psykhoவுக்கு மனம், ஆன்மா வாழ்க்கை எனும் அர்த்தங்கள் இருந்தன. ஆனால் sychophant  என்பது fig பழத்தில் இருந்து - அத்திப் பழத்திலிருந்து - ஏற்பட்டது.  

கணேஷ்: அத்திப்பழமா? அத்திப்பழம் சிகப்பா இல்ல அத்தை மகள் சிகப்பா? 

ஜூலி: ஐயோ, அவ்வளவு சிவப்பா ஒரு பொண்ணிருந்தா பயமா இருக்குமில்ல.. 

புரொபஸர்: ஆமா அதே அத்திப்பழம் தான். அந்த கால கிரேக்கத்தில் அத்திப்பழம் சம்பந்தமாய் பல பிரச்னைகள் இருந்தன. ஒருவரது தோட்டத்தில் புகுந்து அத்திப்பழம் திருடுவது மரண தண்டனை தரப்படும் அளவுக்கு மோசமான குற்றமாகப் பார்க்கப்பட்டது. 

அதே போலத்தான் அத்திப்பழத்தை ஏற்றுமதி செய்வதும் குற்றமே. அத்திப்பழம் சம்பந்தமான குற்றச்சாட்டுகளைப் போலியாக எழுப்புபவர்களை வைத்து sychophant எனும் சொல் உருவாகி இருக்கலாம் என சொல்கிறார். சில மூலச்சொல் ஆய்வாளர்கள் இல்லை என வேறொரு கதை சொல்கிறார்கள்.   

கணேஷ்: என்ன கதை? 

புரொபஸர்: அத்தி மரத்தைப் பார்த்திருக்கிறாயா? 

கணேஷ்: இணையத்தில் பார்த்திருக்கிறேன். 

புரொபஸர்: சரி. அதில் அத்திப்பழங்கள் பழுத்து இலைகளுக்கு உள்ளே பதுங்கியிருக்கும். வெறுமனே பார்த்தால் தெரியாது. அதனால் பழத்தைப் பறிப்பவர்கள் மரத்தை உலுக்குவார்கள். இலைகள் விலக பழங்கள் தென்படும். அதாவது செயல் ஒன்று, அதன் விளைவு மற்றொன்று. அதே போல ஒருவரை மாட்ட வைப்பதற்காக, பழிவாங்குவதற்காக அல்லது சில நேரம் வேறு குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்துவதற்கான இத்தகைய வழக்குகளை தொடுப்பவர்கள் இருந்தார்கள். இவர்களுக்கு அதனாலே sycophants என பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.

ஜூலி: அது மட்டுமல்ல பொதுவிடத்தில் மர்ம உறுப்பை காட்டுகிற ஆபாசமான செயலில் ஈடுபடுவதையும் அத்திப்பழம் குறிக்கிறது.  

கணேஷ்: அப்படியா? 

ஜூலி: ஆமாம், ஆதி கிரேக்கத்தில் அத்திப்பழம் அந்த விசயத்துக்கான குறியீடாக அவர்களின் தொன்மங்களில், சிற்பக்கலையில் இருந்தது.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.