விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இணைய வெளியினிலே...

பறப்பதை பாரமென்றுகருதும் அவ்வேளையில்...முடிகிறதுபறவையின் வாழ்வு.

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:23 pm

தினமணி


முக நூலிலிருந்து....

பறப்பதை பாரமென்றுகருதும் அவ்வேளையில்...
முடிகிறதுபறவையின் வாழ்வு.

வழிப்போக்கன்

எப்போது அடுத்தவரைப் பற்றி யோசிப்பதை நிறுத்துகிறீர்களோ...
அப்போதுதான் நீங்கள் உங்களுக்கு அழகாய்த் தெரிவீர்கள்.

பொள்ளாச்சி முருகானந்தம்

இருட்டுக்குப் பயந்து என்னோடு வர மறுக்கிறது...
என் நிழல்.

மாரிமுத்து மேலமடிமுன்


எதிர்காலமென்று தனியாக எதுவுமில்லை.
அது நிகழ்காலத்தில்...
ஒரு நொடிக்கு முன் பயணிக்கிறது.

மகேஷ் பாபு பத்மநாபன்


சுட்டுரையிலிருந்து...

வேர்களை நேசிக்காத
கிளைகள் போலிருக்கிறது...
சகமனிதனைப் புறக்கணிக்கிற
உங்களின் அதிகாரம்.

பனித்துளி

ஒரு தடவை வாங்கினால் போதும்...
ஒரு வருடத்துக்குப் போதுமானதாக இருக்கிறது, காலண்டர்.

ரஹீம் கஸ்ஸôலி


வலிகள் உன்னிடம் வலு இழந்து விட்டதா?
அனுபவப்பட்டுவிட்டாய் என்று பொருள்.

பிசாசு


மனிதர்களில் சிலர் வாழ்கிறார்கள்; பலர் பிழைக்கிறார்கள்.
வாழ்பவர்களுக்கு... இதயமில்லை.
பிழைப்பவர்களுக்கு... அறிவில்லை.

படிக்காதவன்

ஜன்னல் ஓர பயணங்களில் பின்னோக்கிச் செல்வது மரங்கள் மட்டும் அல்ல...
மனமும்.

சுராஆ


வலைதளத்திலிருந்து...

""இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன. ஒன்றில் எப்போதுமே ரயில் வராது. மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அத்தருணத்தில் ரயில் வருகிறது. தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது. நீங்கள் யாரைக் காப்பாற்றுவீர்கள்?''
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்.
""ப்ராக்டிகலாக பதில் சொல்லணும்... நாம் யாரும் சூப்பர் மேன் இல்லை'' யென்றும் சொன்னார்.
""உண்மையாக நாம் என்ன செய்வோம்? ஒரு குழந்தை விளையாடும் இடத்திற்குத் தானே ட்ராக்கை மாற்றி விடுவோம். ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே'' என்றார்.
""உண்மை தான்'' என்றோம்.
""இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகின்றன. ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தைகள் தண்டனை பெறுகின்றன. இன்றையச் சூழலில் நம் வாழ்க்கையும், நம் நாடும் இப்படித்தான் இருக்கிறது'' என்று அழகாகச் சொல்லி முடித்தார்.
""ஃபால்ட் மேக்கர்ஸ் ஆர் மெஜாரிட்டி, ஈவன் தே புரடெக்டெடு இன் மோஸ்ட் சிச்சுவேஷன்ஸ்''
இன்றைய நிலை... நல்லதையே தனியாகச் செய்பவன் தண்டிக்கப்படுகிறான்... தவறையே கூட்டமாகச் செய்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

https://loosupaya.blogspot.com/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.