சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இணைய வெளியினிலே...

பென்சில் நமக்கு கற்றுக் கொடுப்பது, ஒன்றே ஒன்று தான்;கூர்மையாக இரு; இல்லையெனில் சீவி விடுவார்கள்.

News image
Updated On :13 செப்டம்பர் 2021, 5:02 pm

முக நூலிலிருந்து....


பென்சில் நமக்கு கற்றுக் கொடுப்பது,
ஒன்றே ஒன்று தான்;
கூர்மையாக இரு;
இல்லையெனில் சீவி விடுவார்கள்.

தமிழ்இலக்கியன்

அன்புபைத்திய மொழியினால் ஆனது.
அதனைப் பகிர்ந்துகொள்ள
ஒரு பைத்தியக்காரத்தனமான
அன்பையே தேடுகிறது.

தேன்மொழி தாஸ்

வந்து சேராத ஒரு சொல்...
காத்திருக்க வைத்திருக்கிறது, எல்லாச் சொற்களையும்.

பழநிபாரதி

அமிழ்கிற சுகத்தை அனுபவித்தபடி மூழ்கப் போகிற கனவின் முடிவில்...
நினவு வந்தது, நீச்சல் தெரியுமே என்பது.

டிகே கலாப்ரியா

சுட்டுரையிலிருந்து...

எத்தனை பேர் கைபட்டாலும்
எப்படிக் கசங்கி
குப்பையில் கிடந்தாலும்
மனிதனின் ஆசையைத் தூண்டும்
ஒரு காகிதம் இந்தப் பணம் மட்டுமே...

லூயிஸ் செல்வராஜ்


முடியாததென்று எதுவுமில்லை
முயற்சியின் முன்;
ஆனால் அதை வெற்றிக்குச் சமர்ப்பணம் செய்து விடாதீர்கள்.
மீண்டும் முயற்சிக்க முடியாது.

பாண்டி பிரகாஷ்

நாலு கழுதை வயசானாலும்,
மொட்ட மாடியில் இருந்து கீழே எட்டிப் பார்த்தா...
பயமாத்தான் இருக்கு.

கடைநிலை ஊழியன்

வலைதளத்திலிருந்து...

பட்ஜெட்

பட்ஜெட் என்றவுடன் ஒரு டென்ஷன் வந்துவிடுகிறது. டென்ஷனாகித்தான் என்னக் கிழிச்சிடப் போறோம்?

பட்ஜெட் பத்தி சுவராஸ்யமா எதையாவது எழுதலாம்னு தான் இப்படி ஒரு கூகுள் தொகுப்பு.

1) உலகத்திலேயே பெரிய பட்ஜெட் இந்தியாவின் பட்ஜெட் தானாம்.

இந்தப் "பெரிய' என்பது இதன் பக்க அளவைக் குறிக்கிறதா அல்லது பற்றாக்குறையை குறிக்கிறதா?

2) பட்ஜெட் என்ற சொல் BOUGETTE என்ற பிரஞ்சு சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் சின்ன பை /சின்ன சூட்கேஸ்.
அடடா... நம்ம நாட்டில பட்ஜெட் போட வரும்போது,
அமைச்சர் கையில ஒரு சூட்கேஸ் /பை பிடிச்சிட்டு வர்ற மாதிரி போட்டோ, டிவியில் வருவார்கள். அந்தப் பை... இந்தப் பிரஞ்சுப் பை தானா?
3) முதல் இந்திய பட்ஜெட் வந்தது எப்போ தெரியுமா? 7
ஏப்ரல் 1860. கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட பட்ஜெட். இங்கிலாந்து அரசியிடம் சமர்ப்பித்த பட்ஜெட். ஸ்காட்லாந்து பொருளாதர நிபுணரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது.
முதல் பட்ஜெட் ஏப்ரலில் வந்ததைக் காரணமாக வைத்து இனிமேல் பட்ஜெட்டை 01 ஏப்ரலுக்கு மாற்றினால் என்ன?
4)சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் 26 நவம்பர் 1947 -இல் வந்தது.
நோ டாக்ஸ் பட்ஜெட்.
இதுதான் உண்மையில் ஆனந்த சுதந்திர பட்ஜெட்.
பட்ஜெட் கொடுக்கும் படிப்பினை காலையில் எழுந்திருச்சி குடிக்கிற ஒரு கப் காஃபி முதல் இரவில் தூங்கப்போகும் முன் சுவிட்ச் ஆஃப் செய்ற மின்சாரம்
வரை... எல்லாம் பட்ஜெட் தீர்மானிக்கிறது. இருந்தாலும் பட்ஜெட் பற்றிப் பேசி எழுதி அவரவர் பொருளாதார அறிவைக் காட்டிக்கலாமே தவிர, வேற எதுவும் செய்ய முடியாது. அரசு சொல்கிற வருமான வரியை ஒழுங்காகக் கட்டி தன்
தேசாபிமானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொதுஜனக் கூட்டத்தில் நானும் ஒருத்தி.http://puthiyamaadhavi.blogspot.com/
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.