எனது மதிப்புகள்... பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி!

ஜப்பானில் உள்ள  "கோய் அமைதி அறக்கட்டளை' எனும் தன்னார்வ அமைப்பு உலகம் முழுவதுமிருக்கும் இளைஞர்கள் பங்கேற்கக் கூடிய "இளைஞர்களுக்கான பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி - 2022' ஒன்றினை அறிவித்து இருக்கிறது. 
எனது மதிப்புகள்... பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி!

ஜப்பானில் உள்ள  "கோய் அமைதி அறக்கட்டளை' எனும் தன்னார்வ அமைப்பு உலகம் முழுவதுமிருக்கும் இளைஞர்கள் பங்கேற்கக் கூடிய "இளைஞர்களுக்கான பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி - 2022' ஒன்றினை அறிவித்து இருக்கிறது. 

அமைதி மற்றும் மனிதத்துவத்திற்காகத் தனது வாழ்வினைச் சமர்ப்பித்து வாழ்ந்த ஜப்பான் நாட்டின் தத்துவ ஆய்வாளர்  மசாகிஷா கோய் என்பவரின் அமைதிக் கொள்கைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் 1999 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு,  உலகம் முழுவதுமுள்ள இளைஞர்களுக்கு இந்தக் கட்டுரைப் போட்டியினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 

சமூக வளர்ச்சிக்குத் தேவையானவற்றை இளம் உள்ளங்களில் இருந்து கற்றுக் கொள்வதற்கும், இந்த உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் எப்படி தகுந்த மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்பது குறித்த அவர்களது சிந்தனைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குமான நோக்கத்துடன் இப்போட்டி அமைக்கப்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சிக்குக் கல்வி எனும் யுனெஸ்கோவின் உலகச் செயற்பாடுகளுக்கான திட்டத்தின் ஒரு திட்டமாக இப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.   

கருத்துரு: இந்தக் கட்டுரைப் போட்டிக்கு "எனது மதிப்புகள்' (மை வேல்யூஸ்) எனும் கருத்துரு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் எப்படிச் சிந்திக்கிறோம்? எப்படிச் செயல்படுகிறோம்? என்பதை நமது மதிப்புகளே  தீர்மானிக்கின்றன. மேலும், மதிப்புகளே நாம் வாழும் சமூகத்தையும் வடிவமைக்கின்றன. உங்களிடமிருக்கும் மதிப்புகள் எவை? அந்த மதிப்புகளுக்கேற்றபடி உங்கள் வாழ்க்கையை எப்படிச் சிறப்பாக வாழ முடியும்? அப்படிச் வாழ்வதன் மூலம், எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கலாம்? என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்பதை விளக்கும் விதமாக  கட்டுரை அமைய வேண்டும்.

பங்கேற்புக்கான வழிமுறைகள்: இக்கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களின் வயது 15-6-2022 அன்று 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்களுக்கான பிரிவிலும், 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இளைஞர்களுக்கான பிரிவிலும் பங்கேற்கலாம். கட்டுரை ஆங்கிலம் அல்லது பிரெஞ்ச் மொழியில் 700 சொற்களுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.  

கட்டுரையின் முதல் பக்கத்தில், பங்கேற்பாளர் பெயர் மற்றும் கட்டுரையின் தலைப்பு போன்றவை குறிப்பிட வேண்டும். கட்டுரையினை எம்.எஸ் வேர்டு கோப்பாகவோ அல்லது பிடிஎப் கோப்பாக உருவாக்கி, இணையம் வழியாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். 

கட்டுரை முழுவதும் சொந்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அக்கட்டுரை இதற்கு முன்பாக வேறு இதழ்களிலோ, இணையத்திலோ வெளியாகி இருக்கக்கூடாது.  போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்துக் கட்டுரைகளின் பதிப்புரிமையும் போட்டி அமைப்பாளருக்குரியதாகும்.

கட்டுரைகளைச் சமர்ப்பிக்க:

இப்போட்டிக்கான கட்டுரையினைத் தனியாகவோ அல்லது தாங்கள் பயிலும் கல்வி நிறுவனம் வழியாகவோ ட்ற்ற்ல்ள்://ஞ்ர்ண்ல்ங்ஹஸ்ரீங்-ங்ள்ள்ஹஹ்ஸ்ரீர்ய்ற்ங்ள்ற்.ர்ழ்ஞ்/ எனும் இணைய முகவரியில் 15-6-2022 வரை சமர்ப்பிக்கலாம்.   

பரிசுகள்: இப்போட்டிக்கு வரப்பெற்ற கட்டுரைகளிலிருந்து, சிறுவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாகப் பரிசுக்குரிய கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். முதல் பரிசுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 100,000 ஜப்பானிய யென் (  840 அமெரிக்க டாலர்) பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாவது பரிசாக மூன்று நபர்களுக்கு 50,000 ஜப்பானிய யென்   பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாவது பரிசாக ஐந்து நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் பரிசுப்பொருளும் அளிக்கப்படும். இது தவிர, சிறப்புக்குரியவர்களாக 25 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், பரிசுப்பொருளும் வழங்கப்படும். 

போட்டி முடிவுகள்: இப்போட்டிக்கான முடிவுகள் 31-10-2022 அன்று இந்த அமைப்பின் www.goipeace.or.jp எனும் முகவரியிலான இணையதளத்தில் வெளியிடப்படும்.  

இப்போட்டிகள் குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் https://www.goipeace.or.jp/en/work/essay}contest/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com