மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

உலக அளவில் 100 சிறந்த பெண்களில் ஒருவர்!

உலக  அளவில் அரசியல், அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு, சமூக சேவை என பல்வேறு துறைகளில்  ஈடுபட்டு உள்ள 100 சிறந்த

Updated On :1 டிசம்பர் 2015, 9:58 am

உலக  அளவில் அரசியல், அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு, சமூக சேவை என பல்வேறு துறைகளில்  ஈடுபட்டு உள்ள 100 சிறந்த பெண்களைத் தேர்வுச் செய்து  பி.பி.சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2015ஆம் ஆண்டிற்கான சிறந்த 100 பெண்கள் பட்டியலில் ஏழு இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.

Story image

அதில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஸ்மிருதி நாக்பால். 25 வயது ஆகும் இளம் தொழிலதிபரான இவரின் நிறுவனத்தின் பெயர் "அதுல்யகலா'.  கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்மிருதியின் சிறப்பு, இவை அனைத்தும் காதுகேளாத கலைஞர்களைக் கொண்டு, வடிவமைத்து தயாரிக்கப்படுபவை.

ஸ்மிருதி கூறுகையில்:

""இந்தியா காதுகேளாத மக்கள் அதிகம் உள்ள நாடு. ஆனால், இங்கு அவர்களுக்கு ஏற்ற வசதிகள் அதிகம் இல்லை. நிறைய பேர் ஏராளமான கற்பனை வளத்தோடும், திறமையோடும் இருக்கின்றனர். ஆனால், காதுகேளாமை பிரச்னையால் இவை அனைத்தும் யாருக்கும் தெரியாமல் போய் விடுகிறது. அவர்களை கண்டறிந்து, வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைக்கு அந்த திறமை உதவி செய்கிறது. அந்த பணத்தின் மூலம், நிறைய பேருக்கு உதவவும் முடிகிறது.

இந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்  ஏற்பட்டதே எனது சகோதரிகளால் தான். எனது சகோதரிகள் இருவரும் காதுகேளாதவர்கள். அவர்களுடன் சிறு வயதில் பேதுவது என்பது சைகையில் அல்லது காகிதத்தில் எழுதி காட்டுவதன் மூலம்தான். இதில் ஒரு சிரமம் இருந்தது. எப்போதும் சைகை என்பது பலன் தரவில்லை, எனவே சைகை மொழியை கற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாடினேன். காதுகேளாதோரை வைத்து உருப்படியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே எனது சகோதரிகளின் திறமையை வைத்துதான். இந்த முயற்சிக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம் - குடியரசு தின அணிவகுப்பை காதுகேளாதோருக்கான மொழியில் வர்ணனை செய்ததுதான்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.