மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

எதையும் சாதிக்க..

எதையும் சாதிக்க குழந்தையைப் பெற்றெடுத்த தாய் மருத்துவரிடம் "தன் குழந்தையைப் பார்க்க வேண்டும்' என்று கேட்டார்.

News image
Updated On :4 டிசம்பர் 2015, 8:57 am

உ. இராஜமாணிக்கம்

குழந்தையைப் பெற்றெடுத்த தாய் மருத்துவரிடம் "தன் குழந்தையைப் பார்க்க வேண்டும்' என்று கேட்டார்.

 அதற்கு மருத்துவர்  "ஓர் அதிர்ச்சியான செய்தி. மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்' என்றார்.

 அதைக் கேட்ட தாய் பதைபதைத்து அழுகையுடன் "என் குழந்தை இறந்து போய்விட்டதா?' என்று கேட்டார்.

 மருத்துவர் பதில் சொன்னார் ""குழந்தை இறந்திருந்தால் கூடப் பரவாயில்லை! ஆனால் பார்வையற்று, செவிட்டுத் தன்மையுடன் அதுவும் பெண் குழந்தையாய் பிறந்துவிட்டது'' என்றார் வேதனையோடு.

Story image

 ""குருடாய், செவிடாய் எப்படி வாழப் போகிறதோ?'' எனக் கண்ணீர் விட்டபடியே அக்குழந்தையை வளர்த்தார் தாய். ஆனால், அப்பெண் குழந்தைதான் சரித்திரம் படைத்தது. தன் நுகரும் திறனாலும், தொடும் உணர்வாலும், கடின உழைப்பாலும் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டு எண்ணற்ற புத்தகங்களை எழுதி "முயற்சி செய்தால் பிறவி ஊனத்தை உடைத்தெறிந்து எதையும் சாதிக்க முடியும்' என உலகுக்கு உணர்த்திய ஹெலன் கெல்லர்.

("அறிஞர்கள் வாழ்வில்' எனும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.