மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

முத்து - மணி கோலங்கள்!

பல வகையான கோலங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் முத்துகளாலும், மணிகளாலும் ஆன புதுவகையான கோலங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதனை உருவாக்கி வருகிறார் கைவினைக் கலைஞர் யசோதா. இது குறித்து அவரை சந்தித்தோம்:

News image
Updated On :15 டிசம்பர் 2015, 6:39 am

பல வகையான கோலங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் முத்துகளாலும், மணிகளாலும் ஆன புதுவகையான கோலங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதனை உருவாக்கி வருகிறார் கைவினைக் கலைஞர் யசோதா. இது குறித்து அவரை சந்தித்தோம்:

 வீட்டிலிருந்தபடியே வருமானத்தைப் பெருக்க, சுடிதார், டாப்ஸ் என ரெடிமெட் ஆடைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தேன். எனக்கு கைவினைப் பொருள்கள் செய்வதிலும் ஆர்வம் உண்டு. வெளியில் எங்காவது ஏதாவது அழகுப் பொருளைப் பார்த்தால் அதனை உடனே செய்து பார்த்துவிடுவேன். அதிலிருந்து சில டெவலப்மெண்ட் செய்து நானே கிரியேட்டிவாக சிலவற்றையும் செய்து பார்ப்பேன்.

இதனால் ஆடை விற்பனை செய்யும் நேரம் போக கிடைக்கும் நேரத்தில் கைவினைப் பொருள்களும் செய்து விற்பனை செய்தேன். ஆடை வியாபாரத்தைவிட கைவினைப் பொருள்களில் அதிக வருமானம் கிடைத்தது. இதனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக கைவினைப் பொருள்கள் செய்வதையும் தொடர்ந்தேன். அதன்பிறகு  இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உதவியுடன் சிறுதொழிலுக்கான கடனை வாங்கி அதன் மூலம் தொழிலை விரிவு படுத்தினேன்.  மேலும்  வங்கி நிர்வாகத்தினர் பெண்கள் சம்பந்தப்பட்ட கண்காட்சிகளில் கலந்து  கொண்டு ஸ்டால் வைக்கவும் உதவினார்கள். அதன்மூலம் மேலும் எனது தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

Story image

இந்நிலையில் புதிதாக அழகுக்காக மட்டுமில்லாமல் உபயோகமாக உள்ள ஏதாவது கைவினைப் பொருளை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் பெரும்பாலான  வீடுகள் இப்போது டைல்ஸ் வீடாக மாறிவிட்டதால் வீடுகளில் பூஜை அறையில் கோலம் போட முடிவதில்லை. இந்தக் குறையைப் போக்க மாற்று ஏற்பாடாக ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். அதில் உருவானதுதான் இந்த நவீன கோலம் வகைகள். ஓ.எச்.பி. ஷீட்டில் தேவையான கோல வகைகளை வரைந்து கொண்டு அதில் முத்துகள், மணிகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறேன். நவராத்திரி நேரங்களில் இந்த கோல வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் திருமண விழாக்களில் வரவேற்பு பகுதியில் வைக்கவும் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.

இந்த கோலம் வகைகளை தேவையான நேரங்களில் வைத்துவிட்டு மீண்டும் எடுத்து துடைத்து வைத்துக் கொள்ளவும் செய்யலாம். இப்படி செய்வதனால் 2-3 ஆண்டுகள் வரை கூட வைத்து உபயோகிக்க முடியும். 50ரூபாய் முதல் 300 ரூபாய் வரை இந்த கோலவகைகளை விற்பனை செய்து வருகிறேன். இவற்றை கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு கற்றுத் தருகிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.