நாம் தினசரி உணவில் உபயோகப்படுத்தும் பூண்டில் பல மருத்துவ குணம் உள்ளது. பூண்டு என்பது குட்டி மருத்துவர் போன்று செயல்படக்கூடியது. இதனால் சாப்பிடும்போது பிடிக்கவில்லையென்று பூண்டை தூக்கியெறியாமல் சாப்பிட வேண்டும். பூண்டின் சில மருத்துவ குணங்கள்.
இதோ:
பூண்டை பொடியாக நறுக்கி பாலுடன் சேர்த்து காய்ச்சி உட்கொண்டால் இதயக் கோளாறு கட்டுப்படும்.
நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயுகோளாறு நீங்கிவிடும்.
பூண்டை தேங்காய்ப்பாலில் வேகவைத்து நன்கு மசிய அரைத்து, சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும்.
ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உட்கொண்டால் வாத நோய் கட்டுப்படும்.
பூண்டுச் சாறுடன் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து தடவினால் சரும நோய்கள் கட்டுப்படும்.
பூண்டை சிறிதளவு நீர்கலந்து நசுக்கி சாறெடுத்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து உட்கொண்டால் இருமல் கட்டுப்படும்.
பூண்டை நசுக்கி ஒரு டம்ளர் சூடானபாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உருவாகும் வீக்கம் குறையும். ரத்தக் கொதிப்பும் கட்டுப்படும்.
பூண்டை நெருப்பில் சுட்டு அதை இளம் சூட்டில் மைபோல் அரைத்துத் தொண்டைக்கு வெளிப்புறம் தடவினால் தொண்டை வீக்கம் குறையும்.
- கீதா ஹரிஹரன்
சேற்றுப் புண் குணமாக...
சிறிதளவு மஞ்சள் துண்டுகளை நன்றாக அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய்யைச் சேர்த்து சேற்றுப் புண் உள்ள இடத்தில் இரவில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
வெந்நீரில் உப்பு போட்டு அதில் கால்கள் நனையும்படி பத்து நிமிடம் வைத்திருந்து எடுத்து பிறகு கால்களைத் துடைத்துவிட்டு வாசலின் தடவி வர விரைவில் சேற்றுப் புண் குணமாகும்.
காய்ச்சிய வேப்பெண்ணெய்யை மிதமான சூட்டுடன் தடவி வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.
மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து தடவி வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.
கடுக்காயை அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.
சிற்றாமணக்கு, சுண்ணாம்பு கலந்து இரவில் சேற்றுப்புண்ணின் மீது தடவி வர விரைவில் குணமாகும்.
மருதாணி இலையை அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் வாரம் இரண்டு முறை தடவி வர சேற்றுப்புண் குறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

