முதல்நாள் சூட்டிங்கே டென்ஷன்தான்!
சின்னபாப்பா- பெரியபாப்பா தொடரில் பப்புவாக சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர் மதுமிதா.


சின்னபாப்பா- பெரியபாப்பா தொடரில் பப்புவாக சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர் மதுமிதா. இவர் திரையில் தோன்றினாலே சிரிக்கும் ரசிகர்களும் இவருக்கு உண்டு. அந்த அளவிற்கு தன் நடிப்பு திறமையால் அனைவரையும் ஈர்த்து வருபவர்...
அவருடன் ஒரு குட்டி கலாட்டா...
சின்ன பாப்பா - பெரிய பாப்பா மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிகிட்டீர்களே எப்படி?
இயக்குநர் சக்திசார் இயக்கிய "மாமா மாப்பிள்ளை' தொடரில் நான் நடித்திருந்தேன். அவர்தான் சின்னபாப்பா- பெரியபாப்பா தொடரின் இயக்குநர். அவர் கதைக்காக ஆர்ட்டிஸ்ட் தேர்வு செய்து கொண்டிருந்தபோது. பப்பு கேரக்டர்க்கு யாரை தேர்வு செய்வது என்று யோசித்தபோது ராதிகா மேடமுக்கு என் பெயர் தெரியல, அதனால் "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் நான் நடித்ததைப் போல நடித்து காண்பித்து அவங்களை கேளுங்க என்று சொன்னார்களாம்.
அவங்க எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் அவங்க என்னை மாதிரி நடித்துக் காண்பிச்சாங்க என்று சொன்னபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ""உங்களுக்கு மருமக கேரக்டர். நளினி அம்மா பெரியபாப்பா மாமியார் கேரக்டர். நிரோஷா அம்மாவுக்கு மகளாக நடிக்கணும்'' என்றார்கள் சரி என்றேன். ஆனால் முதல்நாள் சூட்டிங் சென்றதும் பெரிய பாப்பாவாக சித்ரா என்று வேறொருத்தர். அவங்கதான் முதல் மருமக என்றதும். ஐய்யய்யோ... இதென்னடா இந்த கேரக்டருக்குப் போய் ஒத்துக்கிட்டோமே என்று டென்ஷன்தான். எனக்கு இந்த கேரக்டர் வேண்டாம் என்று போய்விடலாம் என்று கூட நினைத்தேன். இது இல்லாம பெரியபாப்பாவாக வந்த சித்ரா மேல வேற ஏகப்பட்ட கோவம். ஆனாலும் கோவத்தை வெளியே காட்டாமல் சரி நடிச்சுதான் பார்ப்போம். பிடித்திருந்தால் தொடர்ந்துக்கலாம் என்று நடித்தேன்.
அதில் எனக்கு தெலுங்கு கேரக்டர். ஆனால் எனக்கு தெலுங்கு தெரியாது. அதனால சில தெலுங்கு பிரண்ட்ஸ்கிட்ட எப்படி பேசுவது என்று பயிற்சி எடுத்துக் கொண்டு பிறகு நானே எப்படி பேசனும். எப்படி டிரஸ் செஞ்சுக்கனும் என்று பாடி லாங்வேஜ் எல்லாம் யோசித்து செய்தேன்.
ஆனால் முதல் எபிசோட் டெலிகாஸ்ட் ஆனதும். அப்படி ஒரு வரவேற்பு. நான் எதிர்பார்க்கவே இல்ல. இப்பவும் எங்கு போனாலும் நீங்கு தெலுங்கா? என்று கேட்கிறார்கள்.
நீங்க இருக்கிற இடம் எப்பவும் கலகலன்னு இருக்குமாமே?
ஆமாம். எனக்கு எப்பவும் எல்லாரும் கலகலன்னு இருந்தால்தான் பிடிக்கும். ரொம்ப அமைதியா இருந்தால் அந்த இடத்தில் இருந்து நைஸô எஸ்கேப் ஆகிடுவேன். இல்லேன்னா எனக்கு உடம்பு சரியில்லாதது போல தோன்றும்.
"புலி' படத்தில் நடித்தது பற்றி?
விஜய் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பொதுவாக பெரிய படங்களில் நடிக்கும் போது நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் "புலி' படத்தில் என் கேரக்டர் நல்லா வந்திருக்கிறது சந்தோஷமாக இருந்தது.
வேறு என்ன தொடர்கள் நடிக்கிறீர்கள்?
"மடிப்பாக்கம் மாதவன்' போன வாரத்தோடு முடிந்துவிட்டது. பெரியதிரையில் "இங்கலீஷ்', "கேஷ்மோரா' என்ற இரண்டு படத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து சுந்தர்.சி சாரோட "ஹலோ நான் பேய் பேசறேன்' என்ற படத்திலும் கமிட் ஆகியிருக்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த நடிகை?
பிடித்த நடிகை மனோரமா ஆச்சி. நான் இந்த இன்டஸ்ட்ரி வந்த புதிதிலேயே அவங்களோட ஒரு டெலிபிலிம் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அது மறக்க முடியாத அனுபவம்.
தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணிவிடலாம்? அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?
காமெடி ரோல்ஸ் பொறுத்தவரை பெண்கள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களுக்கு நல்ல காமெடி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நமது இயக்குநர்கள் பெண் நகைச்சுவை கலைஞர்களையும் மனதில் வைத்து கதை உருவாக்கினால் மீண்டும் பேர் சொல்லும்படியான பெண் நகைச்சுவை நடிகைகளும் நிச்சயம் வருவார்கள்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...