தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தேன்!- நவ்யா

சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "வாணிராணி' தொடரில் வரும் பூஜாவை தெரியாதவர்களே இருக்கமுடியா

News image
Updated On :22 செப்டம்பர் 2015, 5:36 am

ஸ்ரீ

சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "வாணிராணி' தொடரில் வரும் பூஜாவை தெரியாதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு  குறுகிய காலத்தில் மிகப் பிரபலமாகி உள்ளார் நவ்யா. சிரித்தமுகத்துடன் துறு துறு வென்று குறும்புப் பெண்ணாக வந்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்ட நவ்யா நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""எனக்கு பூர்வீகம் கர்நாடகா. என் தந்தை அரசு ஊழியர். அம்மா குடும்பத் தலைவி.  அண்ணன் படிப்பு முடித்துவிட்டு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வருகிறார்.  நான் ப்ளஸ்டூ படித்துக் கொண்டிருக்கும்போது ஒருமுறை ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்தோம். அப்போது என்னைப் பார்த்த என் தந்தையின் நண்பர் ""டிவி சேனலில் தொகுப்பாளராக வேலை செய்கிறாயா?'' என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.  ஏனென்றால் எங்கள் குடும்பத்தில் அதுவரை யாரும் திரைத்துறையில் இல்லை. அப்பா ""உனக்கு பிடித்திருந்தால் செய்'' என்றார்.

 சரி செய்துதான் பார்ப்போமே என்று ஆடிஷனுக்குச் சென்றேன். முதல் கட்டத்திலேயே தேர்வாகிவிட்டேன். அதன்பிறகு கடந்த ஒன்பது ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன். பிளஸ்டூ முடித்ததும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் எம்.பி.ஏதான் படிக்க முடிந்தது.

தொகுப்பாளினியில் இருந்து சீரியல், கன்னட திரைப்படங்கள்  என நடித்துக் கொண்டிருந்தேன். அதன்பிறகு தெலுங்கில் ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தேன். அப்போதுதான்  நடிகை ராதிகாவின் "வாணிராணி' தொடருக்காக எஸ்.கே.வி. என்பவர் மூலம் அறிமுகமானேன். அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள்.

 ஆரம்பத்தில் ராதிகா மேடம் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேட் அப்படி இப்படி என்று சொன்னார்கள். இதனால் பயத்தில் அவர்களைப் பார்த்ததும் எனக்கு நடிப்பே வராது. பற்றாகுறைக்கு தமிழ் வேறு தெரியாது. அதைப் புரிந்து கொண்ட அவர் என்னை தட்டிக் கொடுத்து, ஊக்கமளித்தார்கள். அதன்பிறகு தான் நார்மல் ஆனேன். இப்போது வாணிராணி பூஜாவைப் பிடிக்காதவர்களே இல்லை.

இங்கே இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் கொடைக்கானல் சீனுக்கு பிறகு ஏகப்பட்ட வரவேற்பு. ராதிகா மேடம்  மலேசியா போன இடத்தில் எல்லாம் கூட கேட்டார்களாம். "" கௌதம் - பூஜா கேரக்டரை ஏன்? சாகடிச்சீங்க. எப்படியாவது அவர்களை பிழைக்க வெச்சுடுங்க'' என்று ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.

 அந்த கொடைக்கானல் குளிரில் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து சூட்டிங் போய் எல்லாரும் அவ்வளவு  ரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்டு நடிச்சோம். அந்த கஷ்டமெல்லாம்  அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் மறைந்து போனது. அதுபோன்று கௌதம் ஜோடியாக அமைந்த பூஜா கேரக்டரும் எனக்குக் கிடைத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எங்க வீட்ல அப்பா, அம்மாவுக்கும் "வாணிராணி' தொடர் ரொம்ப பிடிக்கும். என் அம்மாவுக்கு மொழி புரியாவிட்டாலும் காட்சிகளைப் பார்த்து புரிந்து கொள்வார்கள்.  சில நாட்கள் தொடர் போகும்போது நான் வீட்டில் இருந்தால் பக்கத்தில் உட்கார வைத்து இதற்கென்ன அர்த்தம்? இது என்ன? என்று ஆர்வமாக கேட்பார்கள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், ஹைதராபாத், சென்னை, கன்னடா என்று பேக்கிங் செய்வதும், கிளம்புவதுமாக இருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.