மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கூந்தலைப் பராமரிக்க தெரிந்து கொள்ள வேண்டியவை

மீன், வேர்க்கடலை, நெய், வெண்ணெய், முருங்கைக் கீரை, பருப்பு வகைகள், கோதுமை, வெள்ளை முள்ளங்கி, பீட்ரூட் போன்றவை கூந்தல் வளர்ச்சிக்குச் சிறந்த உணவு வகைகள் ஆகும்.

News image
Updated On :29 செப்டம்பர் 2015, 10:10 am

 மீன், வேர்க்கடலை, நெய், வெண்ணெய், முருங்கைக் கீரை, பருப்பு வகைகள், கோதுமை, வெள்ளை முள்ளங்கி, பீட்ரூட் போன்றவை கூந்தல் வளர்ச்சிக்குச் சிறந்த உணவு வகைகள் ஆகும்.

 பொடுகு விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொடுகுத் தொல்லை நீங்க கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.

 தாங்கள் உபயோகப்படுத்தும் சீப்பின் பற்கள் நெருக்கமாக இல்லாது இருந்தால் நல்லது. நெருக்கமாக உள்ள சீப்பினைப் பயன்படுத்தினால், முடிகள் பிளவுபட வாய்ப்புண்டு. பிளாஸ்டிக் சீப்பைவிட மரச்சீப்பு மிகவும் சிறப்பானது.

 முடிந்த வரை குளிர்ந்த நீரில் வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்குக் குளிப்பது நன்று. தலைக்குக் குளித்து முடித்த பின் சுத்தமானத் துண்டால் முடியைத் துடைத்து, மிதமானக் காற்றில் உலர்த்த வேண்டும். மெல்ல விரல்களால் நீவிவிட்டு உலர்த்தினால் மனதிற்கும், கூந்தலுக்கும் இதமாக இருக்கும்.

 டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்பட்ட பெண்களுக்குக் கூந்தல் கொத்துக் கொத்தாக கழன்று விழும். இதற்கு சத்தான உணவுப் பொருட்களை உண்டாலே போதுமானது.

 தலைக்கு குளிக்கும்போது முடிந்த வரை சோப்பைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, ஷாம்பூவிற்குப் பதிலாக சீயக்காய்க் தூளைப் பயன்படுத்துவது நல்லது.

 கூந்தலைப் பின்னி, சடைப் போடும்போது இறுக்கமாகப் போடக் கூடாது. வீட்டில் இருக்கும்போது அள்ளி முடிந்துக் கொள்ளலாம் அல்லது கொண்டைப் போட்டுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.