கவிப்பிரியா, 8- ஆம் வகுப்பு காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூர் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், படித்து வரும் மாணவி.
செங்கல்பட்டு திருக்குறள் எல்லப்பன் மூலம்தான் திருக்குறள் பயிற்சி வகுப்பு படிக்க ஆரம்பித்தார். பயிற்சி ஆரம்பித்த 8 மாதத்திலே 1330 குறள்களையும் கற்றார். காஞ்சிபுரத்தில் செங்கல்பட்டு ஆசிரியர் ரூபி ரெஜினா, மூலம் ரூ.10,000 ரொக்கம் அளித்து பாராட்டு பெற்றார். தொடர்ந்து தமிழக அரசின் ரூ.10,000க்கான பரிசினையும் இவர் பெற்றார்.
திருக்குறளை ஒப்புவிக்கும் வழிமுறைகளான 1 முதல் 1330 வரை வரிசையாக சொல்லுதல், எண் வரிசை சொன்னால் குறள் சொல்லுதல், குறள் சொன்னால் எண் வரிசை சொல்லுதல், உடல் உறுப்புகள் வரும் குறள் சொல்லுதல், பூக்கள் பற்றிய குறள், பறவைகள் பற்றிய குறள், எண்கள் பற்றிய குறள், உதடு ஒட்டாத குறள், உதடு
ஒட்டும் குறள் போன்றவற்றை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறார்.
தனது சொந்த குரலில் 1330 குறள்களையும் பதிவு செய்து, குறுந்தகடு ஒன்று (CD) வெளியிட்டுள்ளார்.
முக்கிய பிரமுகர்களுக்கான குடியரசுத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட 153 மாணவ, மாணவிகளில் கவிப்பிரியாவும் ஒருவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


